Tuesday, January 21, 2025

 பொ வேல்சாமி

(சங்ககாலத்திலேயே கல்வியிற்சிறந்து, தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் பிற்காலத்தில் கல்வி மறுக்கப்பட்டுத் திட்டமிட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அவர்கள் மீண்டும் கல்வியறிவு பெறக் கிறித்தவ நிறுவனங்கள் ஆற்றிய பணியை அறிஞர் பேராசிரியர் பொ. வேல்சாமி சான்றுகளோடு தருகிறார்.)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••

கைநாட்டுத் தமிழர்களுக்கு (1852) கல்விக்கண் திறந்த கிறிஸ்தவ நிறுவனங்களைப் பற்றி…

நண்பர்களே!

மதுரைச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1906 இல் இராஜகோபாலாச்சாரியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ கத்தில் ”பொதுக்கல்வி“யின் நிலை பற்றிய ஒரு நல்ல கட்டுரையை எழுதி யுள்ளார்.  இன்றைக்குப் படித்தாலும் வியப்பளிக்கக்கூடிய பல செய்திகள் அக்கட்டுரையில் நிறைந்துள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட செய்தியை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

1852 ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ மிஷினரிகள் 1885 பள்ளிகளை நடத்திவந்தனர் என்றும்,  அவற்றில் 38000 மாணவ மாணவிகளும் படித்து வந்தனர் என்றும், இவர்களின் படிப்புச் செலவுக்காக அன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களால் செலவிடபட்ட தொகை 40000, 30000 (இன்றைய கணக்கில் சொல்வதானால் 120 கோடியும், 100 கோடியும் ) ரூபாய் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்தான் இருந்தன என்றும், அதேகாலத்தில் இந்துமதம் சார்ந்த நிறுவனங்கள் எவ்விதமான கல்விப்பணியையும் செய்யவில்லை என்றும் கவலையுடன் கூறப்பட்டுள்ளது.  

அந்தச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

தமிழறிஞர் பொ.வேலுசாமி முகநூல் பதிவு(22.1.2020)

No comments: