பார்ப்பனர்களை vindicate செய்வதற்கெனவே உள்ள நமது vindicate மன்றம் சிதம்பரம் தீட்ஷிதர்களுக்கு "நீதி"வழங்கிவிட்டது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அரசுக்கு அரசியல் விருப்புறுதி இருந்தால் பெருவாரியான மக்களின் கருத்தை ஏற்று அவசரச்சட்டம் ஒன்றை இயற்றலாம். தமிழக அரசு இதைச் செய்யுமா?
அது சரி ஒரு நாள் சிதம்பரம் நடராசர் கோவிலின் நான்கு கோபுர வாயில்களும் சாத்தப்பட்ட கதை தெரியுமா? அது பிப்ரவரி 14, 1934.
யாருக்காகக்ச் சாத்தப்பட்டன ?
இரண்டாவது 'ஹரிஜன யாத்திரைக்காக" தமிழகம் வந்த காந்தியடிகளை எதிர்த்துத்தான். அவரது தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச இயக்கத்தைக் கண்டித்துத்தான்.
சாத்தியது மாத்திரம் அல்ல. இப்படியொரு துண்டறிக்கையை 7x5 அங்குல அளவில் அச்சிட்டும் விநியோகித்தனர். அதில் இருந்த வாசகங்கள் இங்கே ( முழு விவரத்திற்கும் பார்க்க என் "காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்" நூல், பக்.66)
காந்தியே நீர் போம்!
""""""""""""""""""""""""
சுயராஜ்யம் பறந்து போச்சு காந்தியே நீர் போம்!
இந்து முஸ்லிம் குளறிப் போச்சு காந்தியே நீர் போம்!
உப்புக் கலகம் ஓஞ்சு போச்சு காந்தியே நீர் போம்!
கதர் பேச்சு காஞ்சு போச்சு காந்தியே நீர் போம்!
தொட்டதெல்லாம் விட்டுவிடும் காந்தியே நீர் போம்!
கைவைத்தால் கெடுக்கும் மகான் காந்தியே நீர் போம்!
காங்கிரசைக் கொன்றுவிட்ட காந்தியே நீர் போம்!
நம்பினோரை நாசமாக்கும் காந்தியே நீர் போம்!
தர்மங்களைத் தாக்கவந்த காந்தியே நீர் போம்!
ஊர் ஊராய்ப் பணம் பறிக்கும் காந்தியே நீர் போம்!
வீர்யம் போன வெறும் பொருளே காந்தியே நீர் போம்!
சிதம்பரம் இங்ஙனம்
16.2.34 G.B.C
இந்தத் துண்டறிக்கையைத் தனது 'குத்தூசி' இதழில் முழுமையாக வெளியிட்டுக் கண்டித்திருந்தார் பகுத்தறிவுச் சிந்தனையாளரும் சிறந்த பத்திரிகையாளருமான குத்தூசி குருசாமி அவர்கள்.
(பேரா. அ. மார்க்ஸ் முகநூல் பதிவு 7.1.2014)
No comments:
Post a Comment