Saturday, December 14, 2019

தனித்தமிழ்க் குறித்து தந்தை பெரியார்



தனித்தமிழ்க் குறித்து தந்தை பெரியார்


நம் தந்தை பெரியார் அவர்கள் தமிழ் மொழிக்குறித்து, ` தமிழ் ஒன்றுதான் இன்று வரைக்கும் வடமொழிக் கலப்பை ஒரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறதுவேற்று மொழிக்கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுநர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

தமிழன்தெலுங்கன்,கன்னடியன்மலையாளி இவர்கள் பேசுவ தெல்லாம் தமிழ்தான்நமது பண்டிதர்களில் சிலர்இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவைஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்காதங்கைகள் என்று கருதுகிறார்கள்இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து.

இத்திராவிடத்தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான்அதுதான் தமிழ்அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கிறோம்.  ஆரிய மோகமற்ற நான்கு மொழிப் பண்டிதர்களும் ஒன்றாக உட்கார்ந்துநான்கு மொழியகராதிகளையும் வைத்துக் கொண்டு ஆரியனல்லாத ஒரு வடமொழிப் பண்டிதனை நீதிபதியாக வைத்துக் கொண்டுதமிழ் தவிர்த்த மற்ற மூன்று அகராதிகளிலுள்ள வடசொற்களையும் பிற சொற்களையும் நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பவை அத்தனையும் தமிழ்ச் சொற்களாகவே இருப்பதைக் காணலாம்.

இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறதுதூய தமிழ் பேசுதல்/ மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடுமேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப  நம்மொழி அமைந்திருக்கிறது. (மொழிஎழுத்து என்னும் நூலில்).
நமது மேன்மைக்குநமது தகுதிக்குநமது முற்போக்குக்கு ஏற்ற மொழி/தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற் காகவே தமிழை விரும்புகிறேனே தவிர அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

சாதி என்ற வடமொழிச்சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்[. பண்டிதர்கள் தான் கூறட்டுமேவார்த்தை இல்லையேஅந்த வார்த்தையே இல்லா விட்டால் சாதிபேத உணர்ச்சி அற்று போகுமாஇல்லையா?

இதே போல் திவசம்திதிகலியாணம்வைகுந்தம்சொர்க்கம்மோட்சம்நரகம்சா%சலோகசாமீபசாயுச்சிய என்ற இவ் வார்த்தைகள் / வடமொழியாதமிழா?
இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம்புத்தி தெளிந்ததாதமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வணிபம் நடத்திய தமிழர் மரபில் /இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லைஒரு எடிசன் தோன்ற முடியவில்லைஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும்தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சி களும் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று தமிழின் தொன்மையையும் தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொல்லின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டிய பெரியார்தமிழ் மொழியை எவ்வாறு சீரமைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்இதை இன்றுள்ள தமிழ்ப்பண்டிதர்கள்புலவர்கள்தமிழாசிரியர்கள் செய்ய முன்வருவதில்லைஆனால் மணவை முஸ்தாபா அவர்கள் அரிய முறையில் தந்தை பெரியார் சொன்ன அறிவியல் தமிழைச் செய்து வருகிறார்அவரிடமாவது இந்த தமிழறிஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்தமிழறிஞர்களில் பெருஞ் சித்திரனார் அவர்கள் சரியான பாதையைத் தெரிந்தெடுத்தார்அவரது வழித் தோன்றல்களும் சரியாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்பெரியாரை இகழ்வதாலோ வெறுப்போடு பார்ப்பதாலோ தனிப்பட்ட தமிழறிஞர்களின் தன்னலத்திற்குதான் ஆதாயம்.


No comments: