Saturday, December 14, 2019

துக்ளக் சோவும் காவிரித் துரோகமும்



தமிழகம் தண்ணீர் பிரச்சனையில் விட்டுக் கொடுக்க வில்லையா?

1974 ஆம் ஆண்டு மைய அரசால் காவிரி உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டதுதனது அறிக்கையில் தமிழகம் 573 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகம் 170 டி..எம்.சி தண்ணீரையும் பகிர்ந்து கொண்டுவந்துள்ளன என்றும் 28.2 இலட்சம் ஏக்கர் காவிரி பாசன சாகுபடி தமிழ்நாட்டிலும் கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் காவிரி பாசன சாகுபடியும் நடந்துள்ளன என்றும் காவிரி உண்மை அறியும் குழு கூறியுள்ளது.
1981 ஆம் ஆண்டு காவிரி பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு கர்நாடகம் ஒரு வரைவுத் திட்டத்தை அளித்ததுஅதில் தமிழகமும் கர்நாடகமும் தலா 414 டி.எம்.சி தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்ததுஆனால் 1991 ஆம் ஆண்டு நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளதுஅதில் தமிழகம் 6 டி.எம்.சி தண்ணீரை புதுச்சேரிக்கு அளிக்கவும் வேண்டும்.

 இதன் மூலம் தமிழகத்திற்கு சுமார் 368 டி.எம்.சி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதுமேலும் காவிரிப்படுகை பாசன வசதியும் தண்ணீர் பற்றாக்குறையால் 25 இலட்சம் ஏக்கருக்குக் குறைந்துள்ளதுமூன்று போக விளச்சலும் ஒரு போக விளச்சலாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதுஆனால் கர்நாடகமோ காவிரிப்படுகை பாசன வசதியை 11.2 இலட்சம் ஏக்கருக்கு விரிவு படுத்தியுள்ளதாக காவிரி நடுவர் மன்றமே கூறி யுள்ளதுஇதை மேலும் 16 இலட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப் போவதாக கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்பெங்களுர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வசதிக்கும் காவிரி நீர் பயன்படுத்தப்படுகிறது.

துக்ளக் ஆசிரியர் சோ, `தமிழகம் இன்னும் விட்டுக்கொடுக்க வேண்டும்வாஜ்பாய் உடன்பாட்டினால் இதுவரை நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத கர்நாடகம் இப்போது ஏற்றுக் கொண் டுள்ளதுஇது அதிசியம்’ (19.8.98/ துக்ளக்என்று கூறுகிறார்தமிழகம் இன்னும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை 15.1.97 மற்றும் 25.9.2002 துக்ளக் இதழ்களிலும் தொடர்ந்து கர்நாடகத்துக்கு ஆதரவா கவும் தமிழ் நாட்டுக்கு எதிராகவும் எழுதி வருகிறார்.  சோவின் இக் கூற்று மோசடியும் பித்தலாட்டமும் நிறைந்த அவருக்கே உரிய வக்கிரப் புத்தியுடன் கூடிய வாதமாகும்.

கடந்த காலங்களில் இடைக்காலத் தீர்ப்பு வந்த பிறகு கர்நாடகம் நடுவர் மன்றத்திடம் முறையிட்டுள்ளதுமுதலில் நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பு செல்லாது என சட்டம் இயற்றியதுஅதை உச்ச நீதிமன்றம் இரத்து செய்துவிட்டதுஎனவே இடைக்காலத் தீர்ப்பையும் நடுவர் மன்றத்தையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை அப்போதே ஏற்பட்டுவிட்டது.

இந்திய நதிகள் தாவா சட்டம் 1956, பிரிவு 6 `’ வின் படி அமைக்கப் பட்ட நடுவர் மன்றத்தை இந்திய அரசியல் சட்ட அமைப்புப்படி இணைந்துள்ள இந்திய மாநிலம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்எனவே அத்தகைய நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பையும் ஏற்றுதான் ஆக வேண்டும்பின்னர் ஏன் அத்தகைய ஒரு சட்டத்தை கர்நாடகம் இயற்றியது என்றால் முடிந்த வரை இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை தள்ளி வைக்க செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் இதுஎனவே நடுவர்மன்றத்தை கர்நாடகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சோ கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கும் தமிழ் இனத் திற்குச் செய்யும் துரோகத்திற்கும்  சான்றாகும்.

 முதல்வர் bஜயலலிதா செய்யும் ஒரு நல்ல காரியம் என்னவெனில் காவிரிப் பிரச்சனையில் அண்மைக்காலமாக எடுத்து வரும் நடவடிக்கைகள் தான்வாஜ்பாய் தலைமையிலான அதிகாரமில்லாத காவிரி நதி நீர் ஆணையத்தையும் காவிரி கண்காணிப்புக் குழுவையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது ஒரு நல்ல துணிச்சலான முடிவாக இருந்ததுஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி மீண்டும் காவிரிக் கண்காணிப்புக்குழு கூட்டத்திலும் காவிரி நதி நீர் ஆணையத்திலும் தமிழகம் கலந்து கொண்டாலும்அவற்றிலிருந்து வெளிநடப்பு செய்ததும் வரவேற்கத்தக்கதே.

 அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தினமும் 1.25 டி.எம்.சி தண்ணீரைப் பெற 3.9.2002 /இல் தீர்ப்புப் பெற்றதும்  bஜயலலிதா எடுத்த சரியான நடவடிக்கையாகும்ஆனால் அதனைத் தொடர்ந்து  ஒரு நாள் அவகாசத்தில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தை 8.9.2002 /இல் கூட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா எடுத்த நடவடிக்கையைத் தடுக்க முடியாதது bஜயலலிதாவின் இயலாமையை வெளிக்காட்டியதுநதிநீர் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நான்கு மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் கலந்துகொள்ளவில்லை யானால் நதிநீர் ஆணையம் கூட்டத்தைக் கூட்ட முடியாதுஏற்கனவே இதுபோல் கர்நாடகம் கலந்து கொள்ளாமல் பலமுறை நதிநீர் ஆணை யக் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளதுமுதல்வர் bஜயலலிதா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கேரளா முதல்வரையோ அல்லது புதுச்சேரி முதல்வரையோ தடுத்திருப்பாரேயானால் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறாமல் போயிருக்கும்.
இக்கூட்டம் நடைபெற்றதால்உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெற்ற 1.25 டி.எம்.சி நீரைத் தொடர்ந்து பெறமுடியாமல் போய்விட்டது.  மேலும் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் அளித்த 0.8 டி.எம்.சி நீரையும் கர்நாடகம் தரக்கூடாது என அம்மாநிலவிவசாயிகள்வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் அணைகளின் மதகுகளை மூடி போராட்டம் நடத்தினர்அணையிலிருந்து குதித்து ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்இதனைத் தொடர்ந்து தண்ணீர் தருவதை கர்நாடகம் நிறுத்திவிட்டதுஉச்ச நீதிமன்றத் தீர்ப்பும் காவிரி நதி நீர் ஆணையத் தலைவரின் ஆணையும் கேலிக்குரியதாகிவிட்டது.

இது குறித்து சோ 25.9.2002 தலையங்கத்தில்,

`இப்போது நீதிமன்றத் தையே நம்புவதாக தமிழக முதல்வர் கூறுகிறார்சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்திரவு தமிழகத்திற்கு ஒரு தற்காலிக நன்மையைப் பெற்றுத்தந்தது என்பது மறுக்க முடியாத உண்மையே. `நீதிமன்ற உத்திரவை ஏற்க மறுப்பதா’ என்று கர்நாடகத் தைப் பார்த்து நமது அரசியல் கட்சிகள் கேட்பது போலித்தனமாக இருக்கும்இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளில் நீதிமன்ற உத்திரவு களுக்கு இங்கே உள்ள அரசியல் கட்சிகள் என்ன மரியாதை காட்டின?’ என்று தனது தோலின் நிறத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.
அரசியல் கட்சிகள் என்பது வேறுஅரசாங்கம் என்பது வேறுஅரசாங்கம் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செயல் படும் ஓர் அமைப்புஎனவே உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்க மறுத்தால் தனது அரசாட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்மேலும் அரசியல் கட்சிகள் கூட நீதிமன்ற ஆணையை எதிர்த்து செயல்பட முடியாதுநீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு உள்ளாக நேரிடும்இந்த அடிப்படைக்கூட தெரியாத வழக்கறிஞராக சோ உள்ளார் என்பதை விட தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்பதே அவருடைய உள்ளத்தில் எண்ணத்தில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் அதே தலையங்கத்தில்,

`இதையும்விட முக்கியமான காரணம்/ கர்நாடகத்திலும்தமிழகத் திலும் காவிரி நீர்ப்பாசன பகுதிகளில்விவசாயத்தின் கீழ் வந்த நிலப் பரப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போனதுதான்’ என்று எழுதுகிறார். 1974/இக்கும் 1991 இக்கும் இடையில் தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் விவசாயத்தின் நிலப்பரப்பு 28.2 இலட்சம் ஏக்கரி லிருந்து 25 இலட்சம் ஏக்கராக குறைந்ததுடன் மூன்று போக சாகுபடியில் குறுவை சாகுபடி முற்றாக கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுமாறாக கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு 11.2 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பாக உயர்ந்துள்ளதுமேலும் பெங்களுர் பகுதிக்கும் சுற்றியுள்ள பகுதிக்கும் காவிரி நீரைக் குடிநீராக கர்நாடகம் பயன் படுத்துகிறதுஇந்த விபரங்களெல்லாம் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் வெளியாகியுள்ளதுஉண்மை இவ்வாறிருக்கசோ தமிழகம் தனது காவிரி நிலப்பரப்பை உயர்த்தியுள்ளதாக எழுதியுள்ளார்.
மேலும் அதே தலையங்கத்தில் `முந்தைய மைசூர்/மெட்ராஸ் ஒப்பந்தம் காலம் 1974 இல் முடிவடைந்துவிட்டது’ என்ற ஒரு பொய்யையும் எழுதி யுள்ளார்.

குஜ்ரால் தலைமையிலிருந்த மைய அரசு நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை தயார் செய்ததுதமிழகம் மற்றும் கர்நாடகத்தின் கருத்தையும் கேட்டறிந்ததுஇதில் கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கின்ற நிலையில்கர்நாடகத்தில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி நதி நீர் ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் அதிகா ரத்தை வழங்கியிருந்ததுஅணைகளில் உள்ள நீர்மட்டத்தை கண் காணிக்கும் மையத்தை கோயமுத்தூரில் அமைக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததுஆனால் தற்போது நடைமுறையில் உள்ள நதிநீர் ஆணை யத்தின் அதிகாரத்தில் இவ்விரண்டு கூறுகளும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவராகவும் உறுப்பினர் களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களே நியமிக்கப்பட குஜ்ரால் அரசின் வரைவுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்ததுஆனால் இவர்கள் மைய மாநில அரசுகளின் ஊதுகுழலாகவே இருப்பார்களே தவிர சொந்தமாக முடிவெடுக்க முடியாது என்று வியாக்கியாணம் கூறுகிறார் சோஇது அவருடைய முட்டாள்தனத்துக்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டு

எந்த ஒரு நீதிமன்ற நீதிபதியும் மைய மாநில அரசுகளின் ஊது குழலாக செயல்படுவதும் இல்லைசெயல்படவும் முடியாதுதன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையமாக அமைய குஜ்ரால் அரசின் வரைவு திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்ததுஆனால் இவையல்லாம் வாஜ்பாய் அரசின் உடன்பாடு நீக்கிவிட்டதுஎனவே காவிரி நதி நீர் ஆணையத்தை அதிகாரமுள்ள ஆணையமாக மாற்ற மைய அரசு முன்வர வேண்டும்அதற்கு நாம் போராட வேண்டும்இப்போராட்டம் திருச்சிதஞ்சைநாகை மற்றும் திருவா%ர் மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறதுஇது தமிழகம் முழுமைக்குமான பிரச்சனையாக மாறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டும்.


No comments: