Saturday, December 14, 2019

பெரியாரும் மறைமலையடிகளும்



மறைமலையடிகள் இளமைக்காலம்
நாகப்பட்டினத்தில் உள்ள காடம்பாடி என்னும் சிற்றூரில் 15.7.1876 இல் பிறந்தார் மறைமலையடிகள்தந்தையின் பெயர் சொக்கநாதப் பிள்ளைதாயார் சின்னம்மையார்.
ஒன்பதாம் வகுப்போடு தனது பள்ளிக் கல்வியை இழந்த மறைமலை யடிகள்சுவடிகளை விற்பனை செய்து வந்த மகாவித்துவான் திரிசிர புரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடமும் உறையூர் இலக்கணப் புலவர் முத்து வீரைய உபாத்தியாயர் அவர்களிடமும் இலக்கணமும் இலக்கியமும் பயின்ற நாரயணசாமிப்பிள்ளை அவர்களிடம் வேலைக் குச் சேர்ந்து அவரிடமே தமிழ்ப் பயின்றார்இவரின் மாணாக்கர் பேராமனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதுஅந்த காலக்கட்டத்தில் அச்சில் வெளிவந்திருந்த தொல்காப்பியம் (1847, 1868, 1885ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தது), சிலப்பதிகாரம் (1880ஆம் ஆண்டுசிந்தாமணி மற்றும் கலித்தொகை (1887) பத்துப்பாட்டு (1889), மணிமேகலை மற்றும் புறநானூறு (1894)ஆகிய நூல்களை எல்லாம் தனது 21 வது வயது முடிவதற்குள்ளேயே (1897 ஆம் ஆண்டிற்குள்ளேயேகற்றுள்ளார் என்பது வியக்கத்தகுந்த ஒன்றாகும்.
மனோன்மணியம் நாடக நூலை ஆய்ந்துதனது கருத்துக்களை பேராசுந்தரம் பிள்ளைக்குக் கடிதம் எழுதினார் அடிகள்அவரின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரத்தில் 1896 இல் ஒர் ஆங்கிலப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இரண்டரை மாதங்கள் பணியாற்றினார்மார்ச் 1898ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சென்னை கிறித்து வக் கல்லூரியில் பரிதிமாற் கலைஞருடன் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்இவருடைய மாணவர்களில் .சுசெங்கல்வராயப் பிள்ளைஇரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்நாவலர் சோமசுந்தர பாரதியார்பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
ஞானசாகரம் (அறிவுக்கடல்)
1902 ஆம் ஆண்டு ‘hனசாகரம்’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கினார் மறைமலையடிகள்பின்னர் இதை அறிவுக்கடல் எனத் தனித்தமிழில் பெயர் மாற்றம் செய்தார்முதல் இதழிலேயேதமிழ் வட மொழியினின்றும் பிறந்ததாதமிழ்ச்சொல் உற்பத்திசைவம்சைவ நிலைகாப்பியம்மணிவாசகர் கால நிருணயம்தமிழ் மிகப் பழைய மொழிதமிழ் வேத பாராயணத் தடை மறுப்பு போன்றவற்றைப் பற்றியக் கட்டுரைகளை எழுதினார்.
அருட்பா மருட்பா போர்
வள்ளலார் இராமலிங்க அடிகள் எழுதிய பாடல் தொகுதிக்கு ‘அருட்பா’ என்பது பெயர்இதற்கு சிலர் அறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்இதற்கு தலைமை தாங்கியவர் ஆறுமுக நாவலர்தேவாரத் திருவாசகப் பாடல்களே ‘அருட்பா’ என வழங்கப்பட வேண்டும் என வாதிட்டனர்இது 1828/1889 ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற முதல் போராகும்ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இராமலிங்க அடிகளும் ஆறுமுக நாவலரும் இறந்தபின் இப்போர் இரண்டாவது கட்டமாகஅருட்பா/மருட்பா என்ற வகையில் உருமாற்றம் பெற்றதுஈழத்து பேரறிஞர் நா.கதிரைவேற்பிள்ளை ‘மருட்பா’ என்ற பெயரில் இராமலிங்கரின் பாடல்களை விமர்சித்து எழுதினார்நாகதிரைவேற்பிள்ளை ஆறுமுக நாவலரின் மாணாக்கர். (கதிரை வேற்பிள்ளையின் மாணாக்கர் திரு.வி.கலியாணசுந்தரனார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). இதன் காரணமாக வள்ளலாரின் பாடல்களை ‘அருட்பாவே என வாதிட்டார் மறைமலையடிகள்வழக்கு மன்றத்தில் சொற்போர்களும் தனித்தனியே நடைபெற்றனஇப்போருக்கு முடிவு கட்டும் வகையில் 18.10.1903 இல் சென்னை வேணுகோபால் மைய மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டதுகதிரைவேற் பிள்ளை அதற்கு வரவில்லை.  அடிகளார் மட்டும் சொற்பொழிவு ஆற்றினார்இறுதியில் வள்ளலார் இயற்றியவை அருட்பாக்களே என முடிவு செய்யப்பட்டது.
மதுரை தமிழ்ச்சங்கம்
தமிழ்ச்சங்க மூன்றாம் ஆண்டு விழாவில் அடிகள் பொதுஉரை ஆற்றினார்பின் 1904 இல் நான்காம் ஆண்டு விழாவுக்கும் மறைமலை யடிகள் அழைக்கப்பட்ட போது 24.5.1904 மற்றும் 25.5.1904 ஆகிய இரண்டு நாட்கள் சொற்பொழிவில் ‘தமிழர் நாகரீகத்தின் பழமையும் அதன் சிறப்பும்’ என்பது பற்றியும் ‘பண்டைக்காலத் தமிழர் ஆரியர்’ என்பது பற்றியும் உரையாற்றினார்ஏழாம் ஆண்டு தமிழ்ச்சங்க விழாவில் ‘குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
சைவ சித்தாந்த மகா சமாசம்
மறைமலையடிகள் தாம் நிறுவ விரும்பும் அமைப்புக்கு தலைவராக கடலூர் hனியர் அடிகளை அமர்த்த விரும்பினார். 1905 ஆம் ஆண்டு இச்சமாசம் அமைக்கப்பட்டதுஇதன் கிளைகளாக திருவருட்பிரகாச சபைமெய்கண்ட சித்தாந்த சபைசைவ சித்தாந்த சபை ஆகியவை செயல்பட்டனமறைமலையடிகள் தமிழ் உரைகளில் தமிழ் மணமும் சைவ மணமும் தழைத்தோங்கச் செய்தார்.
சென்னை பல்லாவரத்தில் அடிகளார் வாழ்க்கை
1.5.1911 இல் சென்னை பல்லவபுரத்தில் அடிகளார் குடிபுகுந்தார்வள்ளலார் மேல் பற்றுக் கொண்ட அடிகளார்வள்ளாலாரின் உயிர் இரக்கக் கொள்கைசாதி சமயப் பிணக்கறியா பெரு நெறிபோலிச் சடங்குகளை ஒழித்தல்உயிர் கொலைபுலைப் புசிப்பு நீக்கம் ஆகிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ‘சமரச சன்மார்க்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்பின்னர் இது பொது நிலைக் கழகமாக மாறிற்று. 27.8.1911 இல் அடிகளார் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தனித் தமிழ் இயக்கம்
தனித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்ற எண்ணம் 1916 இல் அடிகளாருக்கு ஏற்பட்டதுவழக்கம் போல் ஒரு நாள் காலையில், ‘பெற்ற தாய்தனை மறந்தாலும் பிள்ளையைப் பெறு தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற வள்ளலாரின் பாடலை தனது மகள் நீலாவதியுடன் பாடும்போது இப்பாடலில் உள்ள ‘தேகம்’ என்ற வடசொல்லுக்குப் பதில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச் சொல் இருந்தால் எவ்வாறு நன்றாக இருக்கும் என வினவினார்?, வட மொழிக் கலப்பில் தமிழின் இனிமை குறைகின்றது என்பதையும் எடுத்தியம்பினார்இனித் தனித் தமிழில் எழுதுவது எனவும் முடிவு செய்தார்சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார். ‘hனசாகரம்’ என்ற இதழின் பெயரை ‘அறிவுக் கடல்’ என்றும் ‘சமரச சன்மார்க்கச் சங்கம்’ என்பதை ‘பொது நிலைக் கழகம்’ என்றும் தூயத் தமிழில் மாற்றினார். ‘பொதுநிலைக் கழகம்’ மூலம் தனித்தமிழ் மொழிப் பயிற்சியும் தனித் தமிழ் நூற்பயிற்சியும் மாணவர்களுக்கு அளித்து வந்தார்.
தந்தை பெரியாரும் மறைமலையடிகளும்
2.2.1927 இல் தனது மகள் நீலாம்பிகையாரை திருவரங்கனாருக்கு மயிலை கபாலிசுவரர் கோவிலில் எவ்விதச் சடங்குமின்றி திருமணம் செய்துவைத்தார்இதில் கோயில் குருக்கள் கலந்து கொண்டார்திருமணத்தின் போது அங்கிருந்த தோழர் என்தண்டபாணி பிள்ளைகோயில் குருக்கள் பார்ப்பனர் அல்லவாஅவரை வைத்து திருமணம் செய்யலாமாஎன்று கேள்வி கேட்டார்அதற்கு மறைமலையடிகள் அவர் பார்ப்பனரல்லர்ஆதிசைவர் அவரை ஆதரிப்பது என் கொள்கைக்கு முரண் அல்ல என்று கூறினார்இதன் தொடர்ச்சியாக பெரியார் அவர்களும் மறைமலையடிகளைக் கண்டித்து ‘குடிஅரசில் கட்டுரைகளை எழுதினார்இருவருக்கும் எழுத்துப்போரே நடைபெற்றதுஇறுதியில் இருவருக்கும் திரு.வி. அவர்களும் ..சி அவர்களும் சமதானம் செய்து வைத்தனர்இறுதியில் குடிஅரசில் தந்தை பெரியார்,
உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும் (மறைமலையடிகள்திருவாளர் காசுப்பிரமணிபிள்ளை அவர்களும் தமிழ்நாட்டிலேயே தமிழ் மக்களின் நாகரிக விசயமாய்த் தக்க ஆராய்ச்சியுள்ளவர்கள்ஏனையவர்களை இவர்களுக்குச் சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம்’ என்றும், ‘உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர்களான கா.சுப்பிரமணிய பிள்ளை/திரு.வி.கலியாணசுந்தர முதலியார் இவர்கள் நம்முடைய சுயமரியாதைசமத்துவம்மனிதத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர் என்றும்மதசமய ஆராய்ச்சி விசயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்யவந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப் போவதில்லையானாலும் அப்பேர்பட்ட இடையூறுகளுக்கும் அம்முறையிலுங் கூட நமக்கு இப்பெரியார்கள் பின்பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலை போல் நம்பி வருகிறோம்’ என்றும் எழுதினார்.
இதுதான் பெரியாரின் ஒழுக்கமும் நாணயமும் நேர்மையும் ஆகும்.
மேலும் 1935 இல் மறைமலை அடிகளார் எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ என்னும் நூலை பல்கலைக் கழகங்களில்  பி..பட்ட வகுப்பிற்கு பாடமாக வைத்து இருந்தனர்அதில் சில குறைகள்  இருப்பதாகக் கூறி அந்நூலைப் பாடமாக வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்செய்தித்தாள்களில் கட்டுரை எழுதினார்இந்நிலையில் பெரியார் ‘குடிஅரசு’ இதழிலும் ‘பகுத்தறிவு’ இதழிலும் பல கட்டுரைகள் எழுதினார்நாடெங்கிலும் சொற்பொழிவாற்றினார்இறுதியில் அந்நூல் பாடநூலாகவே வைக்கப்பட்டதுபெரியாருக்கும் அடிகளாருக்கும் கொள்கை ஈதியாக வேறுபாடு இருப்பினும் அடிகளாரைப் பெரியார் தூக்கிப் பிடித்தமை இன உணர்ச்சியை வெளிக்காட்டியது.
இந்தி எதிர்ப்புப் போர்
இராசாசி ஆட்சியில் இந்தி திணிக்கப்பட்டதை எதிர்த்து போரட்டங் கள் வெடித்தபோதுஅடிகளார் 11.9.1937 இல் திருவல்லிக்கேணி கடற் கரைக் கூட்டத்திலும் 3.6.1938 இல் சைதாப்பேட்டையில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் தலைமை தாங்கினார். 4.10.1937 இல் கோகலே மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா?’ என்னும் பெயரால் நூல் ஒன்றை யும் வெளியிட்டார்இந்தி எதிர்ப்புப் போரில் அவர் மகன் திருநாவுக்கரசும் அவர் மனைவி ஞானம்பாளும் தம் கைக் குழந்தையுடனும்மகன் மாணிக்கவாசகத்தின் துணைவியாரும் தம் மூன்று வயது குழந்தையுடனும் சிறைச் சென்றார்நீலாவதி அம்மையாரும் இந்தி எதிர்ப்புப் பெண்கள் மாநாட்டில் தலைமை ஏற்றார்இவ்வாறு தமது குடும்பம் முழுமையையும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடுத்தினார். 17.7.1948 இல் சென்னை தூயமேரி மன்றத்தில் கூடிய ‘தமிழ் மகாண இந்தி எதிர்ப்பு’ மாநாட்டில் கட்டாய இந்தியைக் கொணராதீர் என அறைகூவல் விடுத்தார்இம்மாநாட்டில் பெரியார்திரு.வி.அறிஞர் அண்ணாபாரதிதாசன் மற்றும் மா.பொ.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர் மத மாநாடு
தமிழர் சடங்குகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்கோயில் களில் தமிழிலேயே வழிபாடு நடத்தப்பட வேண்டும்தமிழர் திருமணங்கள் தமிழர் முறைப்படி நடைபெற வேண்டும் என்பன போன்றவை அடிகளாரின் கொள்கைகளாகும்இம் மாநாட்டின் முடிவில் ‘தமிழர் மதம்’ என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார்.
திருவள்ளுவராண்டு
தமிழர்க்கென ஒரு  ஆண்டு முறை வேண்டுமென்றும் அது உலகம் போற்றும் அறிவு ஆசான் வள்ளுவன் பெயரில் அமைய வேண்டும் எனவும் அடிகள் விரும்பினார்கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் பிறந்தார் என தீர்மானித்தார்இதை தமிழ்ப் பற்றாளர்கள் ஏற்றுக்கொண்டனர்ஈழத்தில் .பொஇரத்தினம் அவர்கள் இதை ஏற்று அங்கு வலியுறுத்தினார்இதன் தொடர்ச்சியாக ‘திருக்குறள் ஆராய்ச்சி’ என்னும் நூலையும் எழுதினார்.
அடிகளாரின் இறுதிக்காலம்
நீலாம்பிகையின் மகள் மங்கையர்கரசியின் இறப்பு அவர்களது பெற்றோரை வாட்டிய;துநீலாம்பிகையார் படுத்தப்படுக்கையானார்அவர் கணவர் திருவரங்கனார் 28.4.1944 இல் இறந்தார்இதை தொடர்ந்து நீலாம்பிகையாரும் 5.11.1945 இல் மறைந்தார்இவை மறைமலை அடிகளை மிகவும் தாக்கின. 15.8.1950 இல் நோய்வாய்ப்பட்டார். 15.9.1950 இல் இறந்தார்.


No comments: