Saturday, December 14, 2019

மொழிப் பிரச்சனையில் தந்தை பெரியாரின் அணுகுமுறை என்ன? -விடுதலை இராசேந்திரன்



மொழிப் பிரச்சனையில் தந்தை பெரியாரின் அணுகுமுறை என்ன

விடுதலை இராசேந்திரன்

(பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள்  ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்ப வாதிகள்’ என்னும் நூலில் எழுதியுள்ளவை களிலிருந்து ஒரு கட்டுரை இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளதுஇது துக்ளக் சோவுக் கும்குமுதம் இதழுக்கும் பார்ப்பனர்களுக்கும் விடையாக அமையும் என நம்புகிறோம் / கவி.)

மொழிப் பிரச்சனையில் தந்தை பெரியாரின் பார்வையும் அணுகு முறையும் பார்ப் பனியத்தனமாகக் கொச்சைப்டுத்திக் காட்டப்படும் ஒரு போக்கை பெரியாரியல் எதிர்ப்பாளர் களிடம் பார்க்கிறோம்தமிழகத் தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற பார்ப்பன சமஸ்கிருதக் கலாச்சாரத்தைப் பரப்பும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் பேசும் மேடைகளில் தந்தை பெரியாரை தமிழுக்கு எதிரியாகச் சித்தரித் துக் கொச்சைப் படுத்து கிறார்கள்மொழித் தொடர்பான சிந்தனைகள்/பின்னர் படிப்படியாக ஒவ்வொரு தேசத்தின் தன்மைக்கேற்ப பல அறிஞர்களாலும் சிந்திக்கப்பட்டனமொழிக்கும் இனத்துக்கும் பண் பாட்டுக்கும் உள்ள தொடர்புகள் ஆராயப்பட்டனமொழியும்இனமும் சமநிலையில்,  சம தளத்தில் இருக்கும் போதுஇரண்டையும் சமமாகவே கருதுவதில் முழுமையான நியாயம் உண்டுமொழி ஒடுக்கப்படுகிற அளவும்இனத்தின் ஒடுக்கப் படுகின்ற அளவும் வெவ்வேறான நிலையில் இருக்கும் போதுமுதலில் இனத்தை நிலைப்படுத்திக் கொள்வதுதான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்இனத்தைக் காப்பாற்றும் முயற்சிக்கு முன்னுரிமையும் அதே நேரத்தில் மொழியை வளர்தெடுக்க வேண்டிய கடமையையும் ஆற்றுவதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் தமிழ் மொழியைப் பார்ப்பனியம் ஊடுருவி முழுமை யாகக்கெடுத்து தமிழர் பண்பாட்டை அடிமைப் பண்பாடாக்கி யதில் வெற்றி பெற்ற நிலையில்தமிழர்களின் உரிமைக்கும் விடுதலைக்கு மான போராட்டத்தைத் தீவிரமாக நடத்தும் போது தமிழர்களைப் பண்பாட்டு ரீதியாகப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகும் மொழிப் பிரச்சனையைப் பண்பாட்டு விடுதலையோடு இணையாக முன்னெடுத்துச் செல்வது சிக்கலானது.   எனவேதான்தந்தை பெரியார் மொழி/இனம் என்பதை ஒரே சம நிலையில் இங்கே இணைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்இன விடுதலைக்கான பண்பாட்டு கலாச் சாரப் போராட்டங்களுக்கே முன்னுரிமை தருவதோடு-அந்த இன கலாச்சாரப் போராட்டங்களுக்கு உட்பட்டதாகவே மொழிப் பிரச்சனை யைப் பார்க்க வேண்டிய சமூக சூழலே இங்கு நிலைவியது.

 எனவே தந்தை பெரியார் எழுதினார்:
தமிழும்தமிழ் நாடும்தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும் திராவிட மக்கள் என்றும் திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். ‘தமிழ்’ என்பதும் ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப்போராட்டத்திற்குத் தான் பயன்படுமே யொழிய இனப் போராட்டத்திற்கோகலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன் படாது

சரிஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்திதான் நம்மை வெற்றி கொண்டார்கள்நம் கலாச்சாரத்தைத் தடுத்துதான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள்நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான்அவர்களுக்குக் கீழான மக்களாக/அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக/சூத்திரர்களாகபஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம் ‘எனவேஅக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால்மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாதுகலாச்சாரத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும்அதில் வெற்றி பெற வேண்டும்அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம்மொழிப் போராட்டம்,   கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர மொழிப் போராட்டம் மட்டுமே-தமிழர்களின் விடுதலைக்கான முழுமையான போராட்டம் ஆகிவிட முடியாது என்று கருதிய தந்தை பெரியார்-மொழிகலாச்சார விடுதலைக்கும்இன விடுதலைக்கும் பயன்படும் என்ற நிலையில் எல்லாம்-மொழிப்போராட்டத்தை-கலாச்சாரஇனவிடுதலைப் போராட்டத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறார்

அதே நேரத்தில்-தமிழ் மொழியில் ஊடுருவியுள்ள பார்ப்பனியத்தை எதிர்த்து-மொழி அறிவியல் ரீதியாக வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும்-கவலையும் அக்கறையும் கொண்டு ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டிருக்கிறார். ‘மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ-நாட்டு நினைவோ எப்படி வரும்நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும்/மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும்’ (விடுதலை 25.7.1972) என்று கூறும் தந்தை பெரியார், ‘நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல்எல்லா வளப்பங்களும்  கொண்ட சிறந்த மொழி’  (விடுதலை 20.6.1959) என்று தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமை யுடனே சுட்டிக்காட்டுகிறார்இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த தந்தை பெரியார் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

இந்தி நுழைவு என்பது வடமொழி ஆதிக்கம் மட்டுமல்லாமல்சிறு பையன்களின்தூய பையன்களின் தூய மனதில் பச்சை மரத்தில் ஆணி அடிப்பது போல் ஆரிய வர்ணா சிரம கலாச்சாரத்தைப் புகுத்தும் அநீதியேயாகும்ஆகவே மொழிப் பிரச்சனையோடு மாத்திரமின்றி நம் நாட்டுக் கலாச்சாரம்பண்பாடு ஆகியவைகளிலும் வட நாட்டு ஆதிக்கம் வைத்து அழிக்கும் சூழ்ச்சி என்பதை மறக்கக்கூடாது’ (விடுதலை 3.5.1959) என்று இந்தித் திணிப்பின் மூலம் நுழையக் கூடிய வர்ணாசிரமக் கலாச்சாரத்தின் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

நாம் இந்தியை எதிர்ப்பது என்பது இன்று அது தேசிய மொழியாகி விட்டது என்பதற்காக மாத்திரமல்லஆரியர்களின் கலைமதம்சாத்திரம் முதலியவைகளை இந்த நாட்டில் புகுத்த அது ஒரு சாதன மாகக் கையாளப்படுகிறது என்பதற்காகவும் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்’ (விடுதலை 8.8.1953) என்று தெளிவாக விளக்குகிறார்

இந்தி மொழித் திணிப்பால்/தமிழர் பண்பாடு மேலும் பார்ப்பனியத்தால் கெட்டுச் சீரழியும் என்று இந்தியை எதிர்த்த தந்தை பெரியார்/ஏற்கனவே பார்ப்பனிய ஊடுருவலால், தமிழர் பண் பாட்டையே அடிமைப் பண்பாடாக்கிடத் துணை புரியும் தமிழ் மொழியையும், பார்ப்பனியத்தி லிருந்து மீட்டெடுக்கத் துடித்தார்இந்தித் திணிப்பை எதிர்க்க, தமிழை பயன்படுத்திய பெரியார், தமிழர்களின் பண்பாட்டு மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் தமிழ் பயன்பட வேண்டும் என்கிற போது, மொழியை சமுதாய வளர்ச்சிக்கான கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறார்ஓர் இனத்தின் சொந்த மொழியே, அந்த இன மக்கள் வணங்கும் கோயிலுக்குள் தீண்டப்படாத மொழியாக்கப்பட்டதுதமிழ் பேசும் மக்களை, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத ‘சூத்திரர் கள்’ ஆக்கப்பட்டனர்

இந்த நிலையில் தமிழ் நூல்களின் தன்மையையும்/மொழி படித் தோரின் போக்கையும் தந்தை பெரியார் இப்படி படம் பிடித்துக் காட்டினார்.

தமிழ் படித்தால் நல்ல சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதே ஒழிய அறிவுவாதியாக ஆக முடிவதேயில்லைஅது மாத்திரம் அல்லாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ்ப் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அவனது கண்கள் முதுகுப் பக்கம் சென்று கூர்ந்து பார்க்க முடிகிறதே தவிர,  முன் பக்கம் பார்க்க முடிவதில்லை’ என்ற தந்தை பெரியார், ‘இலக்கியங்கள் என்பவை பெரிதும் சமய உணர்ச்சியோடு பழமைப் கற்பனைகளேயல்லாமல்அறிவு நிலையில் நின்று பழமைப் பற்றில்லாமல் ஏற்பட்ட/ ஏற்படுத்தப்பட்ட இலக்கியங்கள் காண்பது அமாவாசை அன்று சந்திரனைப் பார்ப்பது போலத்தான் முடிகிறது’ என்கிறார்.

/இப்படி நன்றாகத் தமிழ் படித்தவர்கள்/நல்ல மதவாதிகளாக மாறி/ பார்ப்பனிய  பண்பாட்டிலிருந்து விடுபட முடியாமல் போகும் நிலையைக் கண்ட தந்தை பெரியார்/தமிழை அறிவியல் ரீதியாக தமிழ்ப் புலவர்கள் வளர்க்க முன்வராததைச் சாடினார்சமூக அரங்கில் /தங்கள் கலாச்சார ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்ட பார்ப்பனர் கள்/அதே நேரத்தில் தங்களின் வளர்ச்சிக்கும்/பயன்பாட்டுக்கும் உரியது ஆங்கிலமே என்பதைப் புரிந்து கொண்டு ஆங்கிலத்தைப் படிக்க ஆரம்பித்தார்கள்

இந்தப் பின்னணியில் வளர்ச்சியடையாத நிலையில்ஒரு புறம் தமிழ் மொழிஇன்னொரு புறத்தில்/தமிழர்கள் கல்வி/உத்தியோகங்களில்/பார்ப்பனர்களோடு போட்டியே போட முடியா மல் தலைகீழாகக் கிடந்த நிலைதமிழ் மொழியை வளர்த்து / அதற்கு அரசியல் அங்கீகாரத்தை உருவாக்கித் தம் காலம் வரை / தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடைப்படுத்தி வைத்து/தமிழர்களை/மீளாப்படுகுழி யில் / ஆழ்த்தி வைக்கக் கூடாது/என்பதை உணர்ந்த பெரியார்/தமிழர்கள் ஆங்கிலத்தைப் படித்து முன்னேறுவதற்கு முயல வேண்டும்அப்போதுதான் பார்ப்பனர்களோடு போட்டிப் போட்டு நிற்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் ஆங்கிலம் படிப்பதை வற்புறுத்தினார்அதோடு/சர்வதேச மொழியான ஆங்கிலத்தில்/பார்ப்பனியத்தின் தாக்கமும் அறவே கிடையாதுஇனம் இருந்தால்தான் மொழியைக் காப்பற்ற முடியும் என்ற உன்னத நோக்கத்தோடும்/உண்மையான கவலையோடும் தந்தை பெரியார் முன்வைத்த கருத்துதான் /ஆங்கிலத்தைப் படியுங்கள் என்பது.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூட/ஒரு கட்டத்தில் சொல்லிய பெரியார் அதற்குச் சொன்ன காரணம் என்ன? ‘இப்போது நாம் காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறோம்நாம் எதில் முன்னேறி இருக்கிறோம்சிந்திக்க வேண்டும்நம்மால் /நம் பணத்தால் நம் உழைப்பால் கட்டப்பட்ட கோயிலில் இன்றைக்கும் நம்மை உள்ளே போகக்கூடாதுதொடக் கூடாது என்கிறானே [ உன் மொழி/முதலை உண்ட பாலனை மீட்டது/சிவன் பேசியது/எலும்பை பெண்ணாக்கியது/பூட்டியக்கதவைத் திறந்தது என்றெல்லாம் பெருமை பேசுகிறாயேஅத்தகைய மொழியைக் கடவுளிடம் சொல்லக் கூடாதுநீச மொழி என்கிறான்அதைப் பற்றி எவன் சிந்தித்தான்வெட்கப்பட்டான்?’

தமிழரைக் காட்டுமிராண்டி என்றேன்படித்தவன்அரசியலில் உள்ளவன் எல்லாம் கோபிக்கிறானேஉன்னை உள்ளே (கர்ப்பக்கிரத் தினுள்விட மாட்டேன் என்கிறானேஇதற்கு என்ன செய்தாய்இன்னமும் சொல்லுகிறேன்உன் சாமி காட்டுமிராண்டிசாமிஉன் மதம் காட்டுமிராண்டி மதம்உன் மொழி காட்டுமிராண்டி மொழிஉன் இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்’ (விடுதலை 14.2.1967).

தமிழர் சமுதாயத்தின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதில் தந்தை பெரியாருக்கு உள்ள ஆவேசத்தின் வெளிப்பாடு இதுஇதைத் தமிழர்களுக்கு எதிரான கருத்தாக சித்தரிக்க/ நல்ல மனநிலையில் உள்ள எந்தத் தமிழனும் முன் வரமாட்டான்.

தந்தை பெரியாரின் கட்டுரை 16.1.65/இல் ‘விடுதலை’  நாளேட்டில் வெளியிடப்பட்டிருக்கிறதுஅந்தக் கட்டுரையில் / தமிழ்ப் புலவர்கள் இராமாயணத்தையும் பாரதத்தையும் / கந்தபுராணத்தையும்  பரப்பு வதையே தனது வேலையாகக் கொண்டிருக் கிறார்களே என்பதைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியார் வேதனைப்படுகிறார்இந்த துறை யிலேயே ஆராய்ச்சி செய்கிறவர்களாகவும் புத்தகம் வெளியிடுகிறவர் களாகவும் மட்டும் இருக்கிறார்களே என்பதை இனமான உணர்வோடு சுட்டிக் காட்டுகிறார்புலவர்கள்/ தான் எழுதிய இந்தக் கட்டுரையைப் பார்த்த பிறகாவது ‘ரோஷப்பட்டு’ நல்ல இலக்கியங்களை உருவாக்க வேண்டும் என்று சொன்னதோடு அப்படி எழுத முன்வருகிற புலவர் களுக்குப் பாராட்டும்/சன்மானமும் தரத்தயாராக இருப்பதாகவும்/அதே கட்டுரையிலேயே தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்அந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி இதோ....

இந்தப்படி நான் எழுதுவதைப் பற்றி ரோஷப்பட்டு எந்தப் புலவரா வது திருந்திகந்த புராணத்துக்கு மறுப்புஇராமாயணபாரதத்துக்கு மறுப்புசிலப்பதிகாரத்துக்கு மறுப்பு மற்றும் இலக்கியங்களுக்கு மறுப்பு அல்லது ஆராய்ச்சி நூல் என்னும் பெயரால் பகுத்தறிவாளர்கள் ஏற்கும் படி/100/200 பக்கங்களில் அடங்கும் படி புத்தகங்கள் எழுதித் தருவார்களேயானால் வரவேற்பதோடுசன்மானங்களும் தந்து பாராட்டு விழாக்களும் நடத்தப்படும்அவை அச்சுப் புத்தகமாக்கப்படு மானால் 1000/இக்கு 100 புத்தகங்கள் சன்மானமாகக் கொடுக்கப் படும்.  இப்போதையப் புலவர்கள் பலரின் நடத்தை எனக்கு வேதனையை உண்டு பண்ணியதால் தமிழ் மக்களின் நலத்தை முன்னிட்டே இது எழுத நேர்ந்தது. (தமிழ்ச்செய்தி /பொங்கல் மலர் 16.1.65) .



No comments: