Tuesday, December 31, 2019

திருச்சி ஜில்லா ஜஸ்டிஸ் மகாநாடு தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் M.L.C.அவர்களின் தலைமைப் பிரசங்கம்

திருச்சி ஜில்லா ஜஸ்டிஸ் மகாநாடு
தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் M.L.C அவர்களின்
 தலைமைப் பிரசங்கம்

28.9.36 ந் தேதி திருச்சியில் நடைபெற்ற திருச்சி ஜஸ்டிஸ் மகாநாட்டுத் தலைவர் தோழர் டாக்டர் சி. நடேச முதலியார் எம்.எல்.சி. அவர்களின் தலைமைப் பிரசங்கம் வருமாறு:

திருச்சி ‘ஜஸ்டிஸ்’ கட்சி மகாநாட்டிற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்ட வரவேற்புக் கழகத்தாருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். இந்த மாகாணத்தின் வடபகுதியிலும் தென்பகுதியிலுள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மகாநாடுகள் கூட்டி நமது கட்சியின் உயரிய லக்ஷ்யத்தையும் நமது கட்சி சாதித்த காரியங்களையும் நமது எதிர்கால வேலைத் திட்டத்தையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி தேச மக்களின் அரசியல் அறிவை விருத்தி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜஸ்டிஸ் கட்சி நமது மாகாணத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுமையிலுமே ஒரு விசே­ நிலைமையில் இருந்து வருகிறது. அது மிகவும் அருமையான பல காரியங்களையும் சாதித்திருக் கின்றது.

ஐஸ்டிஸ் கட்சி தோற்றம்

எல்லா ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார் காரியாலயங்களிலும் வந்த சமூகமும் உத்தியோகங்களை ஏகபோக உரிமையாய் வகிக்கக் கூடாதென்பது 1810‡லே ரெவினியூ போர்டார் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அந்த உத்தரவு அலட்சியம் செய்யப்பட்டது. சர்க்கார் காரியாலயங்களிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்களிலும் தமது பங்குக்குரிய ஸ்தாபனங்கள் அளிக்கப்பட வில்லை யயன்று மாகாண முழுவதும் பல சமூகத்தாரும் குறை கூறிக் கொண்டி ருந்தனர்.

 ‘ஹோம் ரூல்’ கிளர்ச்சிக்காலத்து இந்த அதிருப்பதி மிகவும் உச்சஸ் தானத்தை அடைந்தது. தாம் எந்நாளும் அடிமைப்படுத்தி  வைக்கப்படுவதாகப் பாமர ஜனங்கள் உணர்ந்தனர். இருப்பதா, இறப்பதா, சுயமரியாதையைக் காப்பாற்றத் திரண்டெழுவதா அல்லது எந்நாளும் அடிமையாக வாழ்வதா என்ற பிரச்சனையை பாமர ஜனங்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. எனவே சில இளைஞர்கள் தைரியமாக முன்வந்து பலதிறப்பட்ட சமூகங்களின் உரிமைகளையும் தேச மகாஜனங்களுக்கும் சர்க்காருக்கும் எடுத்துக்காட்ட முயன்றனர். இந்தியாவுக்கு சுய ஆட்சியோ அல்லது வேறு எத்தகைய ஆட்சியோ கொடுக்கப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதில் பங்கு கிடைக்க வேண்டுமென்று அவர்கள் உரிமை பாராட்டினார்கள்.
அவர்களின் ஸ்தாபனமான சென்னை திராவிட சங்கம் அந்தக் காலத்துக்கு சர்க்காருககும் பாமர ஜனங்களுக்கும் இடையினின்று பாமர ஜனங்களின் உரிமைகளையும் குறைபாடுகளையும் சர்க்காருக்கு உணர்த்தி ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையையும் விளக்கிக் காட்டி பாமர மக்களைத் தட்டி எழுப்பிற்று.

கலாசாலைப் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் பொருட்டு 1915 ல் கூடிய திராவிட சங்கக் கூட்டத்தில் தோழர் ஸி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் நாயர் பட்டாதாரிகளுக்கு பிரசங்கம் செய்தார். இதுவரை பரம சத்துருக்களாயிருந்த டாக்டர் நாயரும் , ஸர். தியாகராய செட்டியாரும் அந்தக் கூட்டத்தில்தான் சந்தித்து நண்பர் களானார்கள். கோகலே மண்டபத்தில் கூடிய திராவிட சங்கக் கூட்டம் ஒன்றில் இப்பொழுது கொச்சி திவானாக இருக்கும் ஸர்.­ண்முகம் செட்டியார் ‘இந்த திராவிட சங்கமே பிற்காலத்து‘ ஜஸ்டிஸ் கட்சி’யாகமாறியது’ என்று பேசியுள்ளார்.

ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் திராவிட சங்கம் செய்த வேலைகள்
அநேகமாக சர்க்கார் காரியாலங்களில் எல்லா உத்தியோகங்களுக்கும் முக்கியம் மதராஸ் போர்டு ஆபீஸ் உத்தியேகங்களுக்கு பி.எ. பட்டாதாரிகளே நியமிக்கப்பட்டு வந்தார்கள். ‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சைக்குப் பட்டாதாரிகளே அனுமதிக்கப் பட்டார்கள். ‘ஸ்பெ­ல் டெஸ்டு’ பரீட்சையில் தேர்ச்சியடையாத பட்டாதாரிகளுக்கு 40 ரூபாய்க்கு மேல் சம்மபளமுள்ள உத்தியோகங்கள் பெற முடியாமலிருந்தது. சர்க்கார் காரியாலயங்களில்முக்கியமாக போர்டு ஆபீஸில் மிகச் சொற்ப பார்ப்பனரல்லாதாரே 40 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் பெற்றுவந்தார்கள். திராவிட சங்கம் செய்துவந்த கிளர்ச்சியினால், குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீட்சை தேறியவர்களுக்கும் போர்டு ஆபீஸில் உத்தியோகம் பெற முடிந்தது. பி.ஏ.பட்டம் பெறாதவர்களும் ஸ்பெ­ல் டெல்லி பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டார்கள். 40 ரூபாய் சம்பளத்துக்கு மேல் பெற முடியாதிருந்த எத்தனையோ பேர் அதிகப்படியான சம்பளம் பெற்றார்கள். பலர் சப் மாஜிஸ்டிரேட் போன்ற உயர்ந்த உத்தியோகங்களும் பெற்றார்கள். இரண்டு டிப்டி கலெக்டர்களுக்குப் பதிலாக 12 டிப்டி தாசில்தார்கள் எடுத்தார்கள். கலெக்டரால் அந்த உத்தியோகங்கள் பல சமூகங்களுக்கு வீதாசாரப்படி வழங்கப்பட்டன. பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நிர்வாகசபை மெம்பர் பதவி முறைப்படி கொடுக்கப்பட்டதினால் ஒரு முஸ்லீமுக்கோ இந்திய கிறிஸ்தவருக்கோ ஒரு நிருவாக சபை மெம்பர் பதவியளிக்க வேண்டுமென்று திராவிட சங்கத்தார் கிளர்ச்சி செய்தனர். பிற்காலத்து ஒரு முஸ்லீம் சபையின் நிர்வாக சபை மெம்பரானார்.

இந்த சங்கத்தின் முயற்சியினால் ஒரு ஹாஸ்டல் ஸ்தாபிக்கப்பட்டது. சஞ்சம் முதல் கன்னியாகுமரி வரை மாகாணத்துள் பல பாகங்களிலுமிருந்து வந்த 40 மாணவர்கள் ஜாதி மத வித்தியாசம் பாராட்டாமல் அந்த ஹாஸ்டலில் வசித்து வந்தார்கள். அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த சில மாணவர்களில் சிலர் பெயரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் பட்நாய்க்கு. அவர் அப்பொழுது சட்ட மாணவராக இருந்தார் ; இப்பொழுது வக்கீலாக இருக்கிறார். இனாம்தார் மசோதாவுக்காக நிபுண மெம்பராக நியமிக்கப்பட்டருந்த பட்நாய்க்கின் சகோதரரே அவர். மற்றவர்கள் இப்பொழுது திருச்சி பப்ளிக் பிராசிக்யூட்டராயிருப்பவரும் மாஜி சட்டசபை மெம்பரும் ஜில்லா போர்டு தலைவருமான தோழர் டி.எம். நாராயாணசாமிப் பிள்ளை, டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பாயிருக்கிற சுப்பிரமணியமும்.

ஜஸ்டிஸ் கட்சி சாதித்த காரியங்கள்

இவ்வண்ணம் ‘ஜஸ்டிஸ்’ இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஸர். தியாகராய செட்டியார் ஒரு அறிக்கை வெளியிட்டார். ஒரு ஆங்கில தினசரியும் ஆரம்பிக்கப் பட்டது. அந்த தினசரிக்கு டாக்டர் நாயர் ‘ஜஸ்டிஸ்’ எனப் பெயர் சூட்டினார். ஸர். தியாகராய செட்டியாரும் டாக்டர் நாயரும் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். காலஞ்சென்ற பனகால் ராஜா தென்னிந்திய ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.

சென்னையிலும் வெளி ஜில்லாக்களிலுமுள்ள சில பார்ப்பனரல்லாதார் சேர்ந்து சென்னை மாகாணச் சங்கம் என்னும் பெயரால் ஒரு போட்டிச் சங்கம் ஸ்தாபிக்கவும் டாக்டர் நாயரும் ஸர். தியாகராய செட்டியாரும் தாம் தலைவர்கள் அல்லவென்றும் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகை  பிராமணரல்லாதாரின் பொதுப்பத்திரிகை அல்லவென்றும்  கூறமுயன்றார்கள். அவர்கள் முதல் கூட்டத்தை கோகலே மண்டபத்தில் கூட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் நகரத்திலுள்ள இளைஞர்களும் சில தலைவர்களும் சும்மா இருக்கவில்லை. சென்னைமாகாணச் சங்கத்தின் முதல் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. அந்தச் சங்கமும் கருவிலேயே அழிந்தது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஒருவர் அக்கூட்டத்திலிருந்து வெளிவந்த போது பொது ஜனங்கள் சுமார் 5000 பேர் பேரானந்தமடைந்து ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு ஜே’ என்று ஆரவாரம் செய்தார்கள். இது சென்னை நகர இளைஞர்களும் திராவிட சங்க ஹாஸ்டல் மாணவர்களும் சாதித்த காரியமாகும். சென்னை இளைஞர்கள் சுமார் 3000 பேர் தொடர்ச்சியாக கிளர்ச்சி செய்துகொண்டே இருந்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி சபை அமைக்கும்வரை அந்தக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்
ஜஸ்டிஸ் கட்சி அதிகார பதவி வகிக்க சேர்ந்த போது சகல சமூகங்களின் முன்னேற்றத்துக்காக தன் சக்தி முழுமையையும் பிரயோகம் செய்தது. ஸ்தலஸ்தா பனங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் அதுவரை பிரதிநிதித்துவம் பெறாமலிருந்த சமூகங்களுக்கெல்லாம் ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் அளித்தது.

 ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்ட சபைகளிலும்  மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் ஒரு ஜாதி இந்துவின் பக்கத்தில் உட்கார்ந்தறியாத ஒடுக்கப்பட்ட சமூக அங்கத்தினரும் ஜாதி ஹிந்துப் பிரதிநிதிகள் பக்கத்தில் உட்காரும்படி உரிமையும் பெற்றார்கள். தீண்டாமையும் ஓரளவு ஒழிக்கப்பட்டது. இவ்வண்ணம் சமூகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு புரட்சி செய்யப்பெற்று வெற்றியும் அடைந்தது. சீர்திருத்தம் வருவதற்கு முன்னமேயே, ஜஸ்டிஸ் கட்சியார் கிளர்ச்சியின் பயனாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டசபை மெம்ப ரானார். மற்றொருவர் சைமன் செண்டிரல் கமிட்டி மெம்பரானார். வேறொரு ஆதி திராவிட கனவான் லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பப் பட்டார். சொற்ப தினங்களுக்கு முன் ஒரு ஆதிதிராவிட கனவான் திவான் பகதூரானார்.  இந்தியா முழுமையிலும் ஒடுக்கப்பட்டவர்களில் அவர் ஒருவரே திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.

கனவான்களே! ஜஸ்டிஸ் கட்சி தோன்றுமுன் ஒடுக்கப்பட்ட சமூகம் இருந்த நிலைமையைச் சிந்தித்துப் பாருங்கள். இவையயல்லாவற்றிற்கும் மேலாக, சில வரு­ங்களுக்கு முன்னே ஒரு ஹிந்துவின வீட்டுக்கு பத்தடி தூரம்வரை பிரவேசிக்க முடியாத ஆதிதிராவிட கனவானும் அவரது மனைவியாரும் சக்கரவர்த்தியாலும் சக்கரவர்த்தினியாராலும் பக்கிங்காம் அரண்மனையில் வரவேற்று உபசரிக்கப் பட்டார்கள். 

ஆதிதிராவிடர்களின் க்ஷேம லாபங்களை கவனிக்கும் பொருட்டு ஒரு லேபர் கமி­னர் நியமிக்கப்பட்டார். பொதுக் கிணறுகளிலும் ரஸ்தாக்களிலும் பொது வீதிகளிலும் ஒடுக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டார்கள். லேபர் ஸ்கூல்களும்  ஹாஸ்டல்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஒரு சர்க்கார் உத்தரவினால் மாகாணக் கல்லூரி, வைத்தியக்கல்லூரி போன்ற  கல்லூரிகளிலும் பள்ளிக் கூடங்களிலும் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மாணவர் களுக்கு சர்க்கார் உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டன. உபகாரச் சம்பளங்களும் அளிக்கப்பட்டன. நிலங்களும் அவர்களுக்குப் பதிவு செய்து கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு வீடுகட்ட ஸ்தலங்களும் வாங்கப்பட்டன.

ஹிந்து அரசர்கள் காலத்தில் ராமானுஜர் போன்ற சமயாச்சாரியர்களினால் சாதிக்க முடியாத காரியங்களை பிரிட்டிஷ் சர்க்கார் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் சாதித்திருக்கிறார்கள்.

கிறித்துவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மைகள்

கிறித்துவர்கள் லா காலேஜ் பிரின்ஸிப்பாலாக நியமனம் செய்யப்பட்டதற்கும் சட்டசபை  தலைவராக நியமிக்கப்பட்டதற்கும் பப்ளிக் சர்விஸ் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியே காரணம். ஹைக்கோர்ட் ஜட்ஜுகளாகவும் ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ்கட்சியாரே நேர்முகமாகவும் மறைமுகமாகவும் காரணஸ்தராயிருந்திருக்கிறார்கள். இன்னும் இங்கு விளக்கிக் கூற முடியாத எவ்வளவோ இருக்கின்றன.

முஸ்லீம்களுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஆக்க வேலைகள்

முஸ்லீம்களுக்கு ஒரு தனி கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். ஒரு முஸ்லீம் கார்ப்பரே­ன் கமி­னராக நியமிக்கப் பட்டதற்கும், ஒருவர் பப்ளிக் சர்விஸ் கமி­ன் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் சென்னை மேயராக நியமிக்கப்பட்டதற்கும் ஒருவர் ஹோம் மெம்பராகவும் ஆக்டிவ் கவர்னராகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். அவர்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். அவைகளை இங்கு விளக்கிக் கூறுவது சாத்தியமல்ல. ஜஸ்டிஸ் கட்சியாரின் நன்முயற்சியின் பயனாக தென் னாட்டில் ஹிந்து முஸ்லிம் பிணக்குமில்லை. இந்த மகாணத்தில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகவே இருந்து வருகிறார்கள். நாங்கள் முஸ்லீம்களை சகோதர்களாக மதித்து அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 11)

ஆங்கிலோ இந்தியர் சென்னை கார்ப்பரே­ன் கமி­னராகவும், ரெஜிஸ்ட் ரே­ன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் மற்றும் பல பெரிய உத்தியோகஸ்தர் களாகவும் நியமிக்கப்பட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். சர்க்கார் சர்வீஸில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு விசே­ சலுகை காட்டவேண்டுமென்று வட்டமேஜை மகாநாட்டில் அவர்கள் பிரதிநிதி ஸர் யஹன்ரி கிட்னியுடன் சேர்ந்து கொண்டு வற்புறுத்தியதும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரதிநிதியே யாகும்.
சமூக வாழ்வில் பின்னணியில் நிற்கும் வகுப்புகளையும் ஜஸ்டிஸ் கட்சியார் அலக்ஷ்யம் செய்யவில்லை. அவர்களுடைய பிரதிநிதிகள் ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபையிலும் நியமனம் செய்யப்பட்டார்கள்.

பள்ளிக்கூடங்களிலும் கலாசாலை களிலும் அவர்களுக்குப் பிரத்தியேக ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. பின்னணியில் நிற்கும் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கெல்லாம், பாதி பீஸ் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இவ்வண்ணம் மகாணத்திலுள்ள சகல பெரிய சிறிய சமூகங்களுக்கும் பிராமணர்களும் பிராமணரல்லாதாருக்கும் ஒடுக்கப்பட்டவர் களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பின்னணியில் நிற்பவர்களுக்கும் முன்னணி யில் நிற்பவர்களுக்கும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள், இந்தியப் பிரஜைகளான ஐரோப்பியர்கள் ஆகிய சமஸ்த சமூகங்களுக்கும் ஐஸ்டிஸ் கட்சி தயங்காமல் உதவி புரிந்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாட்சியில், நீதி மன்றங்களிலும் மற்றய உயர் பதவிகளிலும்  மற்றைய உயர் பதவிகளிலும் வீற்றிருந்து, அரும்பணியாற்றக்கூடிய மணிகள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றன என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியது ஜஸ்டிஸ் கட்சியேயாகும். அது இல்லாமற் போயிருப்பின் அம்மணிகள் மங்கி மாசு படிந்து மறைந்தேயன்றோ போயிருக்கும்?
நகரங்களிலும் கிராமாந்தாங்களிலும் உள்ள கீழ்த்தர மத்திய வகுப்புகளுக்கும் அவைகளில் க்ஷேம லாபங்களுக்கான காரியங்களை ஜஸ்டிஸ் கட்சி தாரமாகச் செய்து வருகிறது. பிரசவத்துககு முன் தாய்மாரைப் பராமரித்து சிசு மரணத்தைக் குறைக்கும் பொருட்டு சிகிச்சைச் சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. தாய்ப் பாலில்லாக் குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் ஒரு வயது அடையும் வரை சிசுப் பாதுகாப்புச சங்கத்தார் கவனித்து வருகிறார்கள். 5 வயது வரையுள்ள குழந்தைகள் பிரத்தியேகமாக கவனிக்கப்பட்டு வருகிறார்கள். சில குறிப்பிட்ட இடங்களில் 6 வயது முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக் கூடங்களில் வைத்திய பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிக் வடங்களில் குழந்தைகளுக்கு மத்தியானச் சாப்பாடு கொடுக்கப்பட்டு வருகிறது.

பின்னணியில் நிற்கும் சமூகங்களிலுள்ள பிள்ளைகளுக்கும் எல்லா பள்ளிக்கூடங் களிலும் கலாசாலைகளிலும் பாதிப் பீஸ் சலுகை காட்டப்பட்டு வருகிறது. இவ் வண்ணம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகள் முதல் பக்குவ வயதடைந்த பிறகு ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தினால் பல ஜாதியார்கள் கவர்மெண்ட் உத்தியோக முறையில் பிரதிநிதித்துவமடைய உரிமை உண்டாயிற்று.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, வேலை நேரக் குறைப்பு, விடுதி வசதி யாரையும் வேண்டுமென ஜஸ்டிஸ்கட்சியே கிளர்ச்சி செய்து வந்தது.

ஜஸ்டிஸ் கட்சியின் உதய காலத்திற்கு முன்பே, காலஞ்சென்ற நமதியக்கத் தலைவர் டாக்டர் நாயர், தொழிலாளர் சுதந்திரத்திகாகப் பாடுபட்டு வந்தார்.
சிவில் மெடிக்கல் உத்தியோகங்களை மாகாணச் சர்க்கார் அதிகாரத்திற்குள்ளாக வும் இந்தியமயமாக்கவும் ஜஸ்டிஸ் கட்சியார் சாத்தியமான ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறார்கள். அம்மாதிரி ஏற்பாடுகள் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இதுவரை செய்யப்பட்டதே இல்லை.
நகரத்திலுள்ள வாடகைக் குடியிருப்போர் ரயத்துக்கள் முதலியவர்கள் பாதுகாப்புக்காக நகர டெனண்டு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மற்ற வெளி ஜில்லாக்களிலுள்ளவர்களுக்கு மலையாள குடி சட்ட எஸ்டேட் லேண்ட்ஸ் சட்டம் அமெண்ட்மெண்ட்ஸ் இனாம் பில்லும் நிறைவேற்றியிருக்கிறார்கள். தேவையான உதவியளிப்பதற்காக நில அடமானச் சட்டம், கூட்டுறவுச் சங்க சட்டம், விவசாயக் கடன் சட்டம், தற்கால கடன்களுக்காக ஏற்பட்ட கொடூரமான தீர்மானங்களை ஒழிக்க ஏற்பாடுகள் முதலியவை இயற்றப்பட்டன.

ஐஸ்டிஸ் இயக்கம் ஆரம்பமானது முதற்கொண்டு கிராமப்புனருத்தாரணம் அவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. அதற்காக ஒரு திட்டமும் போடப்பட்டிருந்தது. நில அடமான பாங்கிகள் ஏற்படுத்தியும், கூட்டுறவு ஐக்கிய நாணயச் சங்கங்கள் ஸ்தாபித்தும், விவசாயிகளுக்குக் கடன் உதவியும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைக்கச் சட்டங்கள் செய்தும், விளை பொருட்களை விற்பனை செய்ய வசதிகள் அளித்தும் கால்நடைகளை வளர்க்க புதுமுறைகளை போதனை செய்தும் குடிசை கைத்தொழில் விருத்தி செய்தும் ஜல சப்ளை, சுகாதாரம் முதலியவை சீர்படுத்தியும் ஆரம்பக் கல்வியை வளர்த்தும் கிராமவாசிகளுக்காக ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ நன்மை செய்திருக்கிறார்கள்.

இவ்வண்ணம் தாங்கள் செய்துள்ள வேலைகளினால் கிராமவாசிகளுக்கிடையில் ஒரு நல்லுணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறார்.

ஆங்கில வைத்தியம் சென்னை மாகாணத்தில் அமலில் வந்த போது தேச மக்களில் 100 க்கு 90 பேர் நாட்டு வைத்தியத்தைக் கையாண்டும் சர்க்கார் நாட்டு வைத்தியத்தை அலக்ஷ்யம் செய்து வருவதாக ஒரு குறை கூறப்பட்டு வந்தது. மெடிகல் காலேஜில் நாட்டு வைத்தியப் பயிற்சிக்கு ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமென்று ஒரு சிபார்சு செய்யப்பட்டது. அது பலிக்காததினால் நாட்டு வைத்தியத்துக்கென ஒரு தனிக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அங்கு சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம் முதலிய 3 வித வைத்தியமும் கற்பிக்கப்படுகின்றன. அங்கு பயிற்சி பெறுகிறவர்கள் சர்க்கார் பரீட்சையில் தேறி டிப்ளோமாவை பெற்றவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். தற்கால வைத்தியர்களிலும் கிராமவாசிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதென்று கண்டவுடனே கிராம வைத்தியர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். உத்தியோகத்திலுள்ள வைத்தியர்களின் சம்பளங்களை உயர்த்தினார்கள்.

தர்ம மத ஸ்தாபனங்களை சர்க்கார் மேற்பார்வையில் கொண்டுவர வேண்டு மென்று ஒரு நூற்றாண்டு காலம் நடந்து வந்த கிளர்ச்சியின் பயனாய் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

மாகாண சட்டசபைகளிலே, மாதருக்கு ஜஸ்டிஸ் கட்சி ஓட்டுரிமை வழங்கிற்று. பிறப்பாலோ, பழைய கொள்கையின் படியோ, மனிதருக்குள்ளே வித்தியாசங் கூடா தென்றே ஜஸ்டிஸ் கட்சி கருதி வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வந்த மாபெருஞ் சேவையின் பயனாகவே இப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தாரிடையும். முன்னேற்றமடையாத வகுப்பாரிடையும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஜனங்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்தச் செயலையும் செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை தவறியதே இல்லை. ஆகவே இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சி ஒரு முக்கியமான ஸ்தானம் வகித்து வருகிறது.

எமது சேவையின் அளவையோ, மதிப்பையோ அளக்க ஆரம்பிப்போர், நாங்கள் எமது சேவைகளை அரசியல் அமைப்பின்படி ஏற்பட்டுள்ள எத்தனைவித சிக்கலுக் கிடையே செய்துவர நேரிட்டது. எத்தனை தடைகள் இருந்தன என்பதை மனதில் இருத்த வேண்டும். வேறுகட்சி ஒன்றும் இதைவிட அதிகமாகச் செய்திருக்க முடியாதென நான் தீரமாகச் சொல்லுவேன்.
பல பெரிய பிரமுகர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்குள் நிர்வாகத்திறனைப் பற்றியும் , சட்ட ரீதியான வேலை செய்ய அதற்குள்ள ஆர்வத்தைப் பற்றியும் புகழுரை தந்துள்ளனர். சுயாட்சிக்குச் சென்னை சிறப்பாகத் தகுதியுடையது எனக் கூறப்படுகிறது. இந்த உன்னத நிலைமைக்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியேயாகும். ஜஸ்டிஸ் தலைவர்கள் விடாப்பிடியாக, சுயாட்சிக்காகவே பாடுபட்டு வந்துள்ளனர்.

நமது தலைவர்

நமது தலைவர் ஒரு அதி அற்புதமான கனவான். அவர் ஜனநாயக லட்சியத்தில் மூழ்கிய ஒரு ஜமீந்தார். தலைவராக இருக்க வேண்டியவர்கள் மூன்று ‘ளீ’கள் அதாவது ‘(ளீழிஸ்ரீஷ்மிழியி)’பணம், ‘(ளீழிஸ்ரீழிஉஷ்மிதீ)’திராணி, ‘(ளீஜுழிrழிஉமிer)’ஒழுக்கம் உடையவர் களாயிருக்க வேண்டுமென்று ஸர். முகமது உஸ்மான் கூறுவதுண்டு. எனது அபிப் ராயத்தில் அவற்றுள் மிகவும் முக்கியமானது ஒழுக்கம் ; இராண்டாவது திராணி, அந்த மூனறு அம்சங்களும் நமது தலைவரிடத்தில் ஏராளமாக அமைந்திருக்கின்றன. ஜமீன் நிலச் சட்டத்தினாலும் இனாம் சட்டத்தினாலும் அவர் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இழந்தார். 5 லக்ஷம் விவசாயிகள் விடுதலை பெற்றார்கள்.

‘பொப்பிலி ராஜா இல்லையானால் ஜமீன் குடிகளுக்கும் இனாம் குடிகளுக்கும் விடுதலையில்லை’ என்று கூடச் சொல்லலாம். அந்த இரண்டு சட்டங்களையும் அவர் நிறைவேற்றி வைத்ததினால் சட்டசபையிலுள்ள எல்லாக் கட்சியாருடைய பாராட்டை யும் பெற்றார். அவரது அதிகாரத்திலுள்ள துறைகளைப் பற்றி அவருக்குப் பரிபூரண ஞானமுண்டு. நெருக்கடியான விவாத காலங்களில் அஞ்சாமல் விடையளிப்பார். அவர் கொண்டுவந்த மசோதாக்களையயல்லாம் வெகு சாமர்த்தியமாக நிறைவேற்றி வைத்திருக்கிறார். சட்டசபையிலும் வெளியிலும் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் அவரது அபார ஞானத்தை விளக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. நெருக்கடி யான ஒரு காலத்து அவர் நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜஸ்டிஸ் கட்சியின் அதிர்ஷ்டமே. பொப்லி இல்லாவிட்டால் ஜஸ்டிஸ் கட்சியே இல்லை என்று கூட எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்காக அவர் செய்துள்ள, செய்கின்ற உதவிகளுக்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.

நமது கட்சிப் பத்திரிகை

ஜஸ்டிஸ் நமது கட்சிப் பத்திரிகை. சென்ற 20 வரு­ காலமாக அது நமது உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. இந்த மகாணத்திலுள்ள லக்ஷக்கணக்Vன மனிதர்கள் குடிகளிள் உரிமைகளை அது விளக்கிக் காட்டி வருகிறது. கட்சியும் கட்சி பத்திரிகையும் பல லக்ஷக்கணக்கான மக்களுக்கும் பலன் தந்து வருகிறது. மாகாண மக்களில் 100 க்கு 90 பேரும் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்கும் பக்ஷத்தில் இதுவே மாகாணத்தில் தலைசிறந்த பத்திரிகையாக இருந்திருக்கும். எ;லா சமூகங்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் அப்பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு சமூகத்தினுடைய கடமையாகும். குறைந்த பக்ஷம் 50,000 பிரதியாவது செலவாகும்படி செய்ய வேண்டும், ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையோ, ‘விடுதலை’ பத்திரிகையோ ஏதாவது ஒன்று ஒவ்வொரு கிராமவாசி கையிலும் இருக்கும்படி செய்ய வேண்டும். தம் கையில் ஜஸ்டிஸ் பத்திரிகையை வைத்துக் கொண்டிருப்பதை ஒவ்வொருவரும் ஒரு பெருமையாக மதிக்க வேண்டும். ஏனெனில் அது பாமர மக்களின் குறைகளை எடுத்துக் கூறுகிறது. ஒரு பொழுதும் பொய் பேசுவதில்லை. ஜஸ்டிஸ் கட்சியாலும் பத்திரிகையாலும் பலனடைந்தவர்கள் லக்ஷக்கணக்கான வர்கள் இருக்கிறார்கள். நன்றியறிதலைக் கருதியாவது அவர்கள் ஒவ்வொருவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையை ஆதரிக்க வேண்டும்.

இப்பொழுது கட்சியை முனனேற்றமடைய அதிக பாடுபடுபவரும் ஜஸ்டிஸ் பத்திரிகையையயாரு திறமையாக நடத்தி வருபவருமான தோழர் டி.எ.வி.நாதனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். (குடிஅரசு, 1936, அக்டோபர் 18)

No comments: