Saturday, December 14, 2019

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்



இந்திய அரசியலமைப்புச் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

அரசியல் நிர்ணயசபை
இந்தியாவிற்கு விடுதலை வழங்குவதற்கான ஆரம்ப கட்டச் செயல் கள் தொடங்குவதற்கு முன்னோடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டனஅதற்காக அரசியல் நிர்ணயசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டதுஅப்போது நாடாளு மன்றத்திலும் சட்டமன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்தவர்களால் அரசியல் நிர்ணயசபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்கள் இந்திய மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றவர்களா?

இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பு படித்தவர்கள்பெருநிலக் கிழார்கள் மற்றும் ஜமீன்தார்கள் ஆகியவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தார்கள்இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டையே பிரதிபலித்தார்கள்இவர்களே நாடாளு மன்றசட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதா?

அமெரிக்க அய்க்கிய நாடுகள் புதிய அரசியலமைப்புச்சட்டத்தை ஏற்படுத்த விரும்பியபோது தன்னுடைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதி களைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்க ப்பட்டுஅவை உண்டாக்கிய சட்ட அமைப்பை அந்நாட்டு மக்களிடம் அளித்து கருத்துக்கணிப்பு நடத்தி ஒப்புதல் பெற்றதுஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை உறுப்பினர்கள் முழுமையான  பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்க வில்லைஇதில் இருந்த  207 உறுப்பினர்களில் 80/இக்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.  

சென்னை மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 29 உறுப்பினர்களில் 12 பேர் பார்ப்பனர்களாக இருந்தனர்.

 (விடுதலை தந்தை பெரியார் 119 வது பிறந்த நாள் விழா மலர்.)

இந்திய மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஒப்புதலும் பெறப் படவில்லைஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில் ‘இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறைமை கொண்ட குடியரசு நாடாக ஆக்குவதற்கு உறுதி பூண்டு....’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதுஇது மோசடியல்லவா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக விளங்கிய டாக்டர் அம்பேத்கர்அது உருவாகிய காலக்கட்டத்தில் கொண்டிருந்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.
‘1935 ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் (வெள்ளை ஏகாதிபத்தியத் தால்உருவாக்கப்பட்ட  மத்திய அரசைக் காட்டிலும் இன்னும் வலிமையான மத்திய அரசானது வேண்டும்
என அரசியலமைப்புச் சபையில் டாக்டர் அம்பேத்கர் வாதாடினார்.

கூட்டாட்சி என்ற பெயர் கூட வழங்கப்படக்கூடாது என்பதில் உறுதி யாக இருந்தார்டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கே இந்த மன நிலை இருந்தது என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை (கு.ஆனந்தம்மலர்க மாநில சுயாட்சிபக்/369). 

பின்னாளில் டாக்டர் அம்பேத்கர் 27.9.1951/இல் அமைச்சரவை யிலிருந்து விலகிய பின் 1953/இல் தில்லி மேலவையில்,

 ‘என்ன பணியைத் தந்தார்களோஅந்தப் பணியை என் விருப்பத் திற்கு முற்றிலும் மாறாகச் செய்ய வேண்டியவனாக நான் ஆனேன்அரசியல் சட்டம் எழுதுகின்ற பேனாவை நான் பிடித்திருந்தேன் என்பது உண்மைஆனால் அப்பேனாவைப் பிடித்துச் சட்டத்தை எழுதியவர்கள் பார்ப்பனர்கள்
என்று கூறினார்.

இந்துத்துவாவையும் வருணாசிரம தர்மத்தையும் பாதுகாப்பவை யாகவும் இன்றைய அரசியலமைப்புச்சட்டம் இருப்பதால்அதிலுள்ள சட்டப்பிரிவுகள் 13, 25, 372 ஆகியவற்றைப் பிரித்து எடுத்துஅச்சிட்டு 26.11.1957/இல் தந்தை பெரியார் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்.  இதில் 10000 தோழர்கள் கலந்து கொண்டனர். 2884 பேர் கைது செய்யப் பட்டு ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை அடைந்தனர்பெரியாரும் சிறைத் தண்டனை அடைந்தார்சிறையிலேயே இருவரும்வெளிவந்த பின் பலரும் மாண்டனர் (பெரியார் கொள்கை வெற்றிக்குப் பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்னவே.ஆனைமுத்து எழுதிய சிறுநூலில்)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தோல்வி

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங் களுக்கிடையேயான  தாமோதர் நதி நீர் உடன்பாடுபஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங் களுக்கிடையே உருவான இரவிபயாசு நதிநீர் உடன்பாடுஆந்திரம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையேயான அலமாட்டி அணை உடன்பாடுதமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிடையேயான பெரியாறு அணைச்சிக்கல்மற்றும் தமிழ்நாடுகர்நாடகா இடையே யான  காவிரி நதி நீர் உடன்பாடு ஆகியவை செயல் இழந்து போய் உள்ளனஇட ஒதுக்கீடு தொடர்பாக 31 (சிபிரிவு மற்றும் 9 வது அட்டவணை ஆகிய சிறப்புக் கூறுகள் இருந்தும் மாநில உரிமைகள்  நீதி மன்றங்களால் மறுக்கப்படுகின்றனஆர்வெங்கட்ராமன் போன்ற பார்ப்பன நச்சுத்தன்மை உடையவர்களால் தமிழகத்தில் கலைஞர் ஆட்சி யும்இந்து பாசிச கருத்துக்களைக் கொண்ட வாஜ்பாய் ஆட்சியினால் உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர் களின் ஆட்சியைக் கலைக்க அரசியலமைப்புச்சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்திய விடுதலைக்கு முன்னர் காங்கிரசுக் கட்சியின் மாநில சுயாட்சிக் கொள்கை
1935 ஆம் ஆண்டைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படை யாகக் கொண்டுதான் இப்போதைய அரசியலமைப்புச்சட்டம் உரு வாக்கப்பட்டதுஇச்சட்டம் பற்றி இந்திய தேசியக் காங்கிரசுஅப்போது ‘இந்திய மக்களை என்றென்றும் அடிமைப்படுத்தி வைப்பதற்கும் இந்திய மக்களைச் சுரண்டுவதற்கும் செய்யப்பட்ட ஏற்பாடு இச்சட்டம்’ எனக் கூறியதுபின்பு காங்கிரசு அதே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது. 1942 இல் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தில் காங்கிரசுக் கட்சி பின் வருமாறு கூறியது.

ஓர் அரசியல் நிர்ணய சபையைஇடைக்கால சர்கார் அமைக்கும்எல்லா பிரிவுகளும் ஒப்புக் கொள்ளக் கூடிய இந்திய அரசியல் சட்டம் ஒன்றை அந்தச் சபை தயாரிக்கும்இந்த சட்டம் கூட்டாட்சித் தன்மை (குநனநசயடகொண்டதாக இருக்க வேண்டும்.’
என்பது காங்கிரசின் கருத்து.

1945 ஆம் ஆண்டின் காங்கிரசு தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையின் மூன்றாம் பத்தியில் அனைவருக்கும் சம உரிமைகள் என்ற தலைப்பில், ‘நிலப்பகுதிகளும்மாநிலங்களும் பண் பாட்டு அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் பிரித்து அமைக்கப்படும்அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க உறுதியளிக்கும் வகையில் ஒரு விடுதலை பெற்ற சனநாயக நாட்டைக் காணவே காங்கிரசு முனைந்துள்ளதுகாங்கிரசுக் கண்ணோட்டத்தில் தன்னாட்சிக் கொண்ட உறுப்புகளுடன் (nவைளஅதாவது மொழிபண் பாடு அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் சுதேச மன்னர் நிலப் பகுதிகளும் ‘வயது வந்தோருக்கு வாக்குரிமை’ என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமியற்றும் மன்றங்களோடு கூடிய ஒரு கூட்டாட்சியை அவ்வகை அரசமைப்பு இருக்கும்’ எனக் கூறியது

அபுல்கலாம் ஆசாத்தின் திட்டம்

1946 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரசு கட்சியின் தலைவரான அபுல் கலாம் ஆசாத் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க சில அடிப்படைக் கருத்துகளை வழங்கினார்அதில்,
நாட்டின் பாதுகாப்புஅனைத்திந்தியப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியன மட்டுமே மய்ய அரசின் அதிகாரத் திற்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்இது தவிர விருப்ப அதிகாரப் பட்டியல் இருக்கும்அந்த விருப்பு அதிகாரப்பட்டியலிலுள்ள அதிகாரங் களை மாகாணங்கள் தாங்களே வைத்துக் கொள்வதாஅல்லது மய்ய அரசிற்கு ஒப்படைத்து விடுவதாஎன்பது பற்றி மாகாணங்கள் விரும்பிமய்ய அரசிற்கு ஒப்படைத்த அதிகாரங்கள் தவிர மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாகாணங்களின் அதிகாரத்துறைக்கே சேரும்’.
என்று கூறியுள்ளார்;

 ஆசாத் அவர்கள் கூறியுள்ள இந்தக் கருத்துகளில் மய்ய அரசிடம் எந்த அதிகாரங்கள் மட்டும் அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விருப்பு அதிகாரங்கள் உள்ளடக்கியப் பட்டியல் மாகாணங்களிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது கூட்டாட்சித் தத்துவத்திற்கு சிறந்த அடிப்படைக் கூறுகளாகும்.

நேருவின் குறிக்கோள் தீர்மானம்

13.12.1946 ஆம் நாள்பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு குறிக் கோள் தீர்மானத்தை அளித்தார்அதில்,

தங்களுடைய தற்போதைய எல்லைகளுடனோ அல்லது அரசமைப்புச் சபையாலும் அதற்குப் பின்னர் அரசமைப்புச் சட்டத் தாலும் நிர்ணயிக்கப்படும் எல்லைகளுடனோ மேற்சொன்ன நாட் டாட்சிப் பகுதிகள் எல்லாம் சுயாட்சி கொண்ட உறுப்பினர் களின் (மாநிலங்களின்தகுதிகளோடு விளங்கும்எஞ்சிய அதிகாரங்களையும் பெற்று அவற்றைத் தன்னகத்தே வைத்துக் கொள்ளும்.

சிறுபான்மையினருக்கும் பிற்படுத்தப்பட்ட பகுதியினருக்கும் மற்றும் நாகரிகமற்ற குழுக்கள் வாழும் பகுதிகளுக்கும் தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் தேவையான காப்பமைதியை இந்த அரசமைப்புத் தரும்.’ என்று கூறியுள்ளத்தை காங்கிரசு வல்லுநர் குழுவும் முழுமனதோடு ஒப்புதல் அளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
 அரசியலமைப்புச் சட்டம் இறுதி வடிவம் அடையும் போது காங்கிரசு தன் போக்கை முற்றிலும் மாற்றிக் கொண்டதுஇதற்கு பாகிசுதான் பிரிவினையைக் காரணமாகக் கூறியது.

இந்திய அரசியலமைப்பச் சட்டம் பற்றி காந்தியடிகளின் கருத்து

10.11.1939 இல் ‘அரசின்’ இதழில் ஒரே வழி என்ற தலைப்பிட்டுகாந்தி யடிகள், ‘இந்தியாவில் வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் கலப்படமற்ற வாக்குரிமை வழங்கப் படும்.  அவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் ஒரு சபையே இந்தியாவின் முரணான கோரிக்கைகளை நீதியுடன் தீர்த்து வைக்கும்இந்திய நாட்டின் தனித்தன்மையைக் காட்ட வல்லதும் இந்திய மக்களைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டதுமான ஓர் அரசமைப்புச் சட்டத்தை நமது வெறும் குறிக்கோள் மட்டுமல்லநடை முறையில் நிகழ இருக்கும் ஒரு பேருண்மை’ என்று தெளிவாகக் கூறினார்.

பண்டித நேரு அவர்களின் கருத்து

நாம் உண்மையான சனநாயக சுதந்திரத்தை அடைய விரும்பினால் ஓர் அரசமைப்புச் சபை மூலமாகத்தான் அதனைப் பெற முடியும்கூர்மதி கொண்ட பல வழக்கறிஞர்கள் அமர்ந்து இதனை ( அரசமைப்புச் சபை யில்ஏற்படுத்திவிட முடியாதுசில நலன்களை மட்டும் சீர் செய்ய முயற்சிக்கும் சிறிய குழுக்களின் மூலமாகவும் அதனைச் செய்திட முடியாது.  
ஆதிபத்திய அதிகாரத்தின் நிழலில் அதனை உருவாக்கவும் முடியாதுஅரசியல் மற்றும் மனோநிலைச் சூழல்கள் அதற்குகந்ததாய் அமைந்து மக்களிடமிருந்து அதற்குரிய அதிகாரத்தையும் ஆர்வத்தையும் பெற்றால் மட்டுமே அதனைப்பயன் தரத்தக்க வகையில் உருவாக்கிட முடியும்

அரசியலமைப்புச் சட்ட மறுஆய்வுக் குழுத் தலைவராக ஓர் இந்துத்துவ பழமைவாதி

இந்திய அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக் குழுத்தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தேசிய மனித உரிமைக் குழு வின் தலைவராக இருந்தவருமாகிய எம்.என்வெங்கடசல்லையா நியமிக்கப்பட்டுள்ளார்அவர் இந்து மத வெறிப்பிடித்த ஒருவர் என்பதை குசடிவேடiநே மார்ச் 3, 2000 இதழில் A.ழுநூராணி அவர்கள் தனது கட்டுரை யில்,
பி.டி./இக்கு அளித்த ஒரு பேட்டியில் திரு வெங்கடச்சல்லையா அவர்கள்மதச்சார்பற்ற தன்மையென்பது இந்து மதத்தினருக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிடுகிறார்இது சங்க் பரிவார் அமைப் பின் கருத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளதுநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தில் அப்போதைய உத்திரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் மீது இருந்த வழக்கில் தீர்ப்பு வழங்க தாமதப்படுத்தியதால் (இவருடன் ஜி.என்.ரே என்ற நீதிபதியும் பெஞ்ச்/இல் இடம் பெற்றிருந்தார்இந்த நிகழ்ச்சி பாபர் மசூதி இடிப்பு நடைபெறக் காரணமாக இருந்தது.
நவம்பர் 25,1992 இல் அட்டர்னி bஜனரல்நீதிபதி வெங்கடச்சல்லையா விடம்பாபர் மசூதிக்கு நேர இருக்கக்கூடிய ஆபத்தைப்பற்றி விளக்கிய போதுநீதிபதி வெங்கடச்சல்லையா அவர்கள்அதற்கான ஆதாரம் இருக்கிறதாஓரு செயலுக்கான தயாரிப்புப் பணிகள் குற்றமாகக் கருதப் படமாட்டது என்று கூறினார்பாபர் மசூதி இடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்அதாவது நவம்பர் 4, 1992 இல் கூடியிருந்த கரசேவகர்களுக்கு எல்லா வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாஎன்றும் அவர்களது உடல் நலத்தைப் பற்றியும் விசாரித்ததாகவும் கூறியிருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கரின் கருத்துகள்

நமது அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு கூட்டாட்சி அமைப்புச் சட்டம் தான் என்பதை நிலைநாட்டுவதற்காக எடுத்து வைத்த வாதத்தில்,

 ‘சட்டமியற்றுத்துறை அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் மய்ய மாநிலங்களுக்கிடையே அரசமைப்புச் சட்டத்தின் மூலமாகவே பகுக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதும் அந்த அதிகாரப் பிரிவினை மய்ய அரசினுடைய ஒரு சட்டத்தால் செய்யப்படக் கூடாதென்பதும் தான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கோட் பாடாகும்நமது அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தங்கள் நிர்வாகம் மற்றும் சட்டம் செய்யும் அதிகாரங்களுக்காக மய்ய அரசை எவ்வகையிலும் அண்டிக் கிடக்க வேண்டுவதில்லைமய்ய அரசும் மாநிலங்களும் சம தகுதியைக் கொண்டவைஎனவே மய்ய அரசிற்குக் கீழ்ப்படியத்தக்க நிலையில் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது தவறான வாதமாகும்நமது அரசியலமைப்புச்சட்டம் இரட்டை அரசுகளை உருவாக்கு கிறதுஒன்றியத்தில் மய்ய அரசையும் மாநிலங் களில் மாநில அரசுகளையும் உருவாக்கி யுள்ளதுஅரசியலமைப்புச் சட்டத்தால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட அதிகார வட்டத்தினுள் அந்தந்த அரசுகள் (தத்தம்இறைமை அதிகாரங்களைப் பெற்றுள்ளனநமது ஒன்றியம் மய்ய அரசிடமிருந்து அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு இயங்கக் கூடிய மய்ய அரசின் வெறும் முகவர்களும் அல்ல.’
 என்று குறிப்பிட்டார்கள். (மலர்க மாநில சுயாட்சிபக்கம் 685)

(ஏடு /2).


No comments: