Saturday, December 14, 2019

இராஜாஜி - தந்தை பெரியார்



தந்தை பெரியார்


சாதி தோன்றக் காரணம்

சாதி ஒழியவேண்டும் என்பது என்னுடைய கருத்துசிறு வயது முதல் சாதி ஒழிய வேண்டும் என்பதில் கருத்துக் கொண்டவன் நான்நாற்பதாண்டு காலமாக சாதி ஒழியவேண்டும்மதம் ஒழிய வேண்டும்வேதம் ஒழிய வேண்டும்மனுதர்மம்/வர்ணாச்சிரம தர்மம் ஒழிய வேண்டும்சாஸ்திரம் ஒழியவேண்டும் என்று சொல்லியும் எழுதியும் வந்தவன்முப்பத்தைந்து ஆண்டு காலமாக பார்ப்பானும் ஒழிய வேண்டும் என்ற உண்மைக் கருத்தை நன்றாக உணர்ந்து அதற்கு முன்னைய விட இன்னும் அதிக தீவிரமான முறையில் பாடுபட்டுக் கொண்டுவருகிறேன்அதனால்தான் இன்று மக்களிடையே தனித் தன்மை உள்ள ஒரு நிலையைக் காண முடிகிறதுஅதற்குக் காரணம் என்னுடைய நாணயமும் நியாய உணர்ச்சியும் ஒழுக்கமும்தான் என்பதை தைரியமாகச் சொல்லுவேன்.

உலகிலேயே சர்வ வல்லமையும் பொருந்தியவன் பார்ப்பான்

அதிசய அற்புதங்களைக் கண்டுபிடிக்கும் இந்த உலகத்தில் யாரா லும் எதைக் கொண்டும் அசைக்க முடியாத சர்வ வல்லமையுள்ள ஒன்று இங்கே இருக்கிறதென்றால்அது இந்தப் பார்ப்பான்தான்மதத் துறையில் பார்த்தாலும்அரசியல் துறையில் பார்த்தாலும்வேறு எந்தத் துறையைப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் பலம் பொருந்தி யிருப்பவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்நாடு முழுவதிலும் உள்ள பத்திரிக்கையை எடுத்துக்கொண்டால் இரண்டொன்றே நம்முடை யதுமற்றதெல்லாம் அவர்களுடையதுஇந்த இரண்டொன்றும் நம் முடைய ஆட்களால் நடத்தப்பட்டாலும்பார்ப்பானின் தயவில்லாமல் நடத்த முடியாத நிலைமையில் அவனுக்கு அடிமையாக இருந்து அவன் சொல்படி கேட்டு நம்முடைய இனத்தை அழிப்பதற்கே இருப்பவர்கள்இவைகளுக்கு எல்லாம் தயங்காமல்எதிர்த்து அவைகளை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பதற்குக் காரணம் என்னுடைய ஒழுக்கமும்நாணயமும்தான்இது எல்லோருக்கும் விளங்காதுஆராய்ச்சித் தன்மை உள்ளவருக்கும்என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருப்ப வர்களுக்குந்தான் விளங்கும்நான் யாருக்காக இப்படிப் பாடு படுகிறேன் என்றால் அது என்னுடைய மக்களுக்காகத்தான்.

பார்ப்பனரின் இனநலம்

தேவர்கள் என்றால் மேலான சக்தியுள்ளவர்கள்கடவுள்கள்தேவர் என்றால் பார்ப்பான் என்று பொருள்பார்ப்பானும் கடவுளும் ஒன்றுஅசுரர்களை அழிக்க அடிக்கடி அவதாரம் எடுத்துள்ளார்மகாவிஷ்ணு என்னும் கடவுள் எதற்காக வந்தார் என்றால்அசுரர் களாகிய தமிழர்கள் தேவர்களாகிய பார்ப்பனரை நாட்டைவிட்டு விரட்டியதற்குதமிழர்களை ஒழித்துக்கட்ட மகாவிஷ்ணுவே அவ தாரம் எடுத்துவந்து தமிழனுடைய தலையை சீவி அழித்தார்அந்த மகாவிஷ்ணு அவதாரம்தான் இராமன்கிருஷ்ணன் எல்லாம்’ ‘அந்த இராமனும் கிருஷ்ணனும் நான்தான்’ என்கிறார் இராஜhஜிரொம்பத் துணிவோடு மனுதர்மம் நிலைக்க வேண்டுமென்று சொல் லுகிறார்இராமாயணக் காலத்தை மனதில் வைத்துப் பார்த்தால் இப்போதுள்ள நிலைமை தெள்ளென விளங்கும்அந்தப் பக்கம் இராஜhஜிஇந்தப் பக்கம் திராவிடர் கழகம் இராமசாமிஅவர் எங்கு போனாலும் போகிற பக்கமெல்லாம் என்னை நினைத்துக் கொண்டே பேசுகிறார்நானும் அதைப் பற்றித்தான் பேசுகின்றேன்என்னுடையக் கருத்து மக்கள் எல்லோரும் மனிதத் தன்மையாக வேண்டும் என்பதுஇராஜhஜி அவர்களுடைய கருத்துமனுதர்ம முறைப்படி ஆட்சியை ஆக்க வேண்டுமென்பதுஇதைப் பார்த்தால் புரியாதாஇராஜhஜி அவர்கள் யாருக்காகப் பாடுபடுகிறார்யாருடைய முன்னேற்றத்தை விரும்புகிறார் என்று?

இன்றும் அரசியல் மூலம் பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க ஆசைப்படுகிறானே தவிரமான உணர்ச்சிக்குப் பாடுபடுபவன் யார்எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும்பார்ப்பானுக்குப் பயந்துகொண்டு இருக்கிறானே தவிரதுணிந்து காரியம் செய்ய வில்லையேமேலும் நம் நாட்டில் படித்தவன்மேல் படிப்புக்காரன்புலவன் என்று இருக்கின்றனர் என்றால்அவர்களால் நமக்கு நம் சமுதாய மக்களுக்கு என்ன நன்மைஅவனவன் பிழைப்புக்காக படித்திருக்கிறானே தவிர ஊருக்கு உழைக்க வேண்டுமென்று எவன் படித்திருக்கிறான்?

நான் தெரிந்தவரையில் நண்பர் இராஜாஜி அவர்கள் மனுவாகவே விளங்குகிறார்வருணாசிரம முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தித் தன்னுடைய இனம் வாழ வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டுக்கொண்டு வருகிறார்அதன் காரணமாகத்தான் நாங்கள் இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்ட முடியவில்லை அவர் இனத்தைக் காப்பாற்ற அவருக்கு இருக்கும் கடமையைப் போல் நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை நமக்கும் இருக்கிறதுஆனால் எடுத்தக் காரியத்தை முடித்துக் கொள்ளும் தன்மைக்கு ‘மானத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்ற ஒரு ஆயுதம் அவர்களிடம் இருக்கிறதுநமக்கு மானத்தைப் பற்றி கவலையிருப்பதால் நமக்கு வெற்றி தோன்றுவது கஷ்டம்தான்மானம்/ஈனம் என்பதைப்பற்றிக் கவலைப்படாததற்குக் காரணம் அவர்களுடைய கடவுள்களும் அதன் தர்மமும் ஆகும்.

ஆச்சாரியாரின் உள்ளக்கிடக்கை

சாதி ஒழியவேண்டும் என்று யாரோ சொல்வதை நான் ஒத்துக் கொள்ள முடியாதுஎன்னுடைய உயிர் உள்ளவரையில் அதற்கு இடங் கொடுக்க மாட்டேன்’ என்று மதுரையில் இராஜhஜி அவர்கள் கூறி யிருக்கிறார்இதை நான் சந்தேகமற உணர்ந்ததால்தான் அப்போதே காங்கிரசிலிருந்து வெளியேறினேன்அதுவும் சீனுவாசய்யங்கார் முதல் இந்த சி.ஆர்வரை என்னைத் தலைவர்தலைவர் என்று அவர்கள் அழைக்கிறபோது நான் எதற்காக வெளியேற வேண்டும்அப்போது சாதி ஒழிய வேண்டும் என்பதை எதிர்த்து நின்றவர் இந்த திருஆச்சாரியார்தான்அன்றும் அவர்தான் எதிர்த்தார்இன்றும் அவர்தான் எதிர்க்கிறார்.
நம்முடைய ஒரே லட்சியம் இந்த நாட்டில் சாதியை ஒழித்தாக வேண்டும் என்பதுஇராஜhஜியினுடைய லட்சியம் சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதுஇந்த லட்சியத்தின் அடிப்படையில் தான் அவர் பாடுபடுகிறார்.

முதல் இன உணர்ச்சி

இதே ஊரில் சென்னை மாகாணச் சங்க இரண்டாவது மாநாடு நடைபெற்றதுஅந்த மாநாட்டுக்கு கோவிந்ததாஸ் தலைவர்நான் வரவேற்புக் கமிட்டித் தலைவன்தோழர்கள் திரு.வி.., வரதராசலு நாயுடுவிஜயராகவாச்சாரி முதலியோர் வந்திருந்துவகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஅதன் பிறகு காங்கிரசில் ‘தேசீயவாதிகள் சங்கம்’ என்று புதிதாக உண்டாக்கப் பட்டதுஅதிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு அச்சங்கத்திற்கு விஜயராகவாச்சாரி தலைவர்ராஜhஜி காரியதரிசி யாகவும்நான் தமிழ்நாட்டு நிர்மாணக் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டோம்அதற்கு உபதலைவராக சிதம்பரம் பிள்ளை யினுடைய பெயரை பிரரேபித்ததில் அது ராஜhஜிக்குப் பிடிக்காத தால் அவருக்குப் போட்டியாக கஸ்தூரிரெங்க அய்யங்கார் பெயர் பிரரேபிக்கப்பட்டது.

நாங்கள் சிதம்பரம் பிள்ளைதான் உபதலைவராக இருக்க வேண்டு மென்று வற்புறுத்தினோம்அதுதான் முதலில் பார்ப்பனர்/பார்ப் பனர் அல்லாதார் என்று உணர்ச்சியைக் கிளப்பிவிட்டதுஎங்களு டைய வற்புறுத்துதலின்மேல் சிதம்பரம் பிள்ளையை உபதலைவராக வும்நிர்வாகக் கமிட்டியில் பகுதிக்கு மேல் பார்ப்பனர் அல்லாதார் களையே போட்டார்கள்இதைப்பார்த்த இராஜhஜி உங்களைவிட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நூறுமடங்கு தேவலாம் என்று கூறி மனம் புழுங்கினார்தஞ்சை மாகாண மாநாட்டில் நான் வகுப்புவாரி தீர்மானம் கொண்டுபோனேன்அதில் காங்கிரஸ் ஸ்தாபனங்களில் 100க்கு 50 ஸ்தானங்கள் பார்ப்பனரல்லாதார் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டது.

காஞ்சியில் நமது கொள்கைக்கு எதிர்ப்பு

பிறகு காஞ்சிபுரம் மாநாட்டுக்கும் கொண்டு போனோம்அங்கே திரு.வி. ஒரு பக்கமும் இராஜhஜி ஒரு பக்கமும் இந்தத் தீர்மானம் போடக்கூடாது என்று எதிர்த்தார்கள்இந்த வகுப்புவாரி பிரதிநிதித் துவம் தேசீய ஸ்தாபனத்திற்கே இழுக்கு என்றும்காங்கிரஸ் ஒரு பெரிய பலம் பொருந்திய ஸ்தாபனம் அதில் ஏன் போய் முட்டுகிறாய்உன்னால் இதை அழிக்கமுடியாது என்றும் சொன்னார்முடிகிறதோ இல்லையோ பார்ப்போம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

இராசாசியை விரட்டியடித்த காமராசர்

நாங்கள் வெளியே வந்தபிறகு நாள் ஆகஆக ராஜhஜிக்கு செல் வாக்கு ஏற்பட்டதுஅப்போதுதான் அவருடைய சாதி உணர்ச்சியும் அதிகமாக வெளிக் கிளம்பியதுஇந்தப் பார்ப்பனர்களின் உணர்ச்சிக் குக் காரணம் படிப்புதான்நமக்கு அப்படி இல்லாத காரணத்தால் 100 க்கு 90க்கு பேர் நாம் தோட்டியாகவும்பியூனாகவும் இருக்கிறோம்இந்த நிலையை உணர்ந்து அந்த இடத்திற்கு வந்தார் காமராசர்அவருக்கும் ராஜhஜிக்கும் எப்பொழுதுமே கருத்து வேற்றுமை உண்டுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருந்து கொண்டு இந்த சி.ஆரை மெம்பராகக் கூட ஆக முடியாதபடி விரட்டி அடித்தார்டில்லிக்குப் போய் ஆசாத்தைப் பிடித்து ‘இவரை காங்கிரசில் சேர்த்துக் கொள்ளவும்’ என சிபார்சு கடிதம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தும்கூட அவர் ஒப்பவில்லைஅவரை ஒழித்துக் கட்டினார் திருகாமராஜர்திருகாமராசர் வந்தவுடனே (இராஜாஜிமூடிய பள்ளிகளை விட அதிகமாகவே திறந்துவிட்டார்அதன் பலன்தான் இன்று தமிழ்நாட்டிலே இருக்கிற அத்தனை கிராமங்களிலும் 300 பேர்கள் வாழ்கிற இடத்தில் கூட ஒரு பள்ளி வீதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இன்று பள்ளிக்கூடம் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லைபகலில் சாப்பாடுதுணி எல்லாம் கொடுக்கப்படுகிறதுபுத்தகமும் வாங்கிக் கொடுத்து சம்பளமில்லாமல் 10/வது வரை படிக்க வசதி ஏற்பாடு செய்யப் போகிறார்துணி/சோறு/சம்பளம் இல்லாமல் படிப்புஇதை எல்லாம் பார்க்கிறபோது இராஜhஜிக்கு கோபம் வராதா?

கக்கூஸ் எடுப்பதுகல் உடைப்பதுவண்டி இழுப்பதெல்லாம் படிக்காதவன் வேலைஎந்தப் பார்ப்பானாவது கக்கூஸ் எடுக்கிறானாவண்டி இழுக்கிறானாகாரணம் என்னஅவன் படித்திருக்கிறான்சொகுசாக உத்தியோகம் பார்க்கிறான்திருகாமராஜ் இன்னும் பத்து ஆண்டு இருந்தால் பார்ப்பான் கையில் மண்வெட்டி இருக்கும்பார்ப்பனத்தி கையில் புல் இருக்கும்.

இங்கே நடக்கிற ஆட்சி கொடுமையான ஆட்சி என்று வடநாட்டிலே போய் சொல்லுகிறார்நேருவிடத்தில் திருகாமராசரை ஒழிக்க எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தார்கள்மற்ற மாகாணத்தைவிட தமிழ்நாட்டில்தான் அமைதியாக உயர்ந்த நிலையில் ஆட்சி நடந்து வருகிறதுஅப்படி இருக்கிறபோது இந்த திருஆச்சாரியாருக்கு ஏன் இந்த கோபம் என்றால் படிக்காத ஒரு சூத்திரன் தம்மைவிடத் திறமையாக ஆட்சியை நடத்துகிறானே என்ற பொறாமையினால் எரிந்து விழுகிறார்இன்னுமொரு மந்திரி சொல்லுகிறார்தமிழ்நாட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை நல்ல முறையில் செலவழித்துக் காட்டுகிறார்கள்கேரளாவுக்குக் கொடுத்தால் எந்த விபரமும் தெரியவில்லை.
 இப்படி நிலைமை இருக்கிறபோது இந்த ராமசாமியோடு ஏன் காமராசர் சேர வேண்டும் என்று ‘மெயில்’ எழுதியது எனக்கும் கோபமாகவே இருந்ததுசென்னைக்குப் போய் ‘மீட்டிங்’ போட்டு இந்த பத்திரிகைக்காரர்களின் அயோக்கியத்தனத்தைப் பச்சையாகவே கண்டித்துப் பேசினேன்பிறகு மறுநாள் ‘மெயில்’ பத்திரிக்கைகாரர் சமாதானம் சொல்லுவது போல் வீட்டில் வந்து கூறிப்போனார்எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால்பார்ப்பான் எதில் யோக்கியமாக நடந்துகொண்டான் இந்த ஆட்சியைக் கண்டிக்கஎன்பதற்கேயாகும்.
1938ல் இந்த ஆச்சாரியார் பதவிக்கு வர ஏதோ வாய்ப்பு இருந்தது வந்தார்வந்ததும் என்ன யோக்கியமாக நடந்து கொண்டார்மூன்று பேர் இருந்த மந்திரி சபையை இவர் பத்தாகப் பெருக்கிக் கொண்டார்அதில் தனக்கு வேண்டியவர்களைப் பார்த்தே மந்திரி பதவி கொடுத்தார். ‘கை சுத்தமில்லை’ என்று காந்தியாரிடம் சர்டிபிகேட் வாங்கியவர் களுக்கெல்லாம் இவர் மந்திரி பதவி கொடுத்தார்திருடி.எஸ்.எஸ்இராஜன் பல தடவை காங்கிரசில் நாணயக் குறைவாக நடந்து கொண்டிருந்தவர்காங்கிரசுக்கு பலவிதத்திலும் துரோகம் செய்து கொண்டிருந்தவர்அவர்மீது நடவடிக்கை எடுத்தது. 5 ஆண்டுகள் காங்கிரசிலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்த அவரை அழைத்துவந்து மந்திரியாக்கினார் என்றால்ஆச்சாரியாருடைய ஒழுக்கம் எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்மதுரையில் ஒரு பார்ப்பான் கொலைக் குற்றத்திலே மாட்டிக்கொண்டான்மனு முறைப்படி பார்ப்பான் கொலை செய்தால் அவனைத் தண்டிக்கக் கூடாதுஅதற்குப் பதில் அவன் தலைமயிரைக் கத்தரித்தாலே போதும் என்றிருக்கிறதுஅதற்கு ஏற்ப அந்த கொலைக்காரப் பார்ப்பானுக்கு உதவிசெய்தார்இதை விட்டுடில்லிக்குப்போய் மந்திரியாக இருக்கிற போது ஒரு சீஃப்ஜட்ஜஷக்கே இவருடைய சொந்தக்காரர் விஷம் வைத்தார்அவரையும் இவர் காப்பாற்றிவிட்டார்மந்திரியாக இருந்தபோதே திருஇராஜன் 200 மூட்டை நெல்லை வெளி ஜில்லாவில் கொண்டு போய் விற்பனை செய்தார்அதை பிடித்துக் கேஸ் போட்டார் ஒரு போலீஸ் அதிகாரிஅந்தக் கேஸ் ஊர் சிரித்ததேஅதையும் அமுக்கினார்பார்ப்பான் எவ்வளவுதான் அயோக்கியத்தனம் செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு அதற்கு உதவி செய்வதுஉடந்தையாக இருப்பது என்றால்திருஆச்சாரியாருடைய யோக்கியதை எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாதா?

பதவியை ஏற்க மறுத்த பெரியார்

எங்களுடைய கழகம் அரசியல் கழகம் அல்லசமுதாயத் தொண்டுக் காகவே பாடுபடுகிற இயக்கம்அதனால்தான் நாங்கள் தேர்தலில் நிற்பதில்லைஇல்லை என்றால் எங்களால் நிற்க முடியாதாஏன் இந்த ஊருக்கு கவர்னர் வந்தார்கோவையில் வைசிராய் வந்து என்னை அழைத்து மந்திரிசபை அமைக்கும்படி கேட்டார்சென்னையிலும் கவர்னர் என்னை அழைத்து ரொம்ப வற்புறுத்தி சொன்னார்அது மட்டுமல்லஇந்த ஆச்சாரியார் என் வீட்டுக்கு வந்து, ‘நாயக்கரே’ நம்ப காங்கிரசில் இருந்து கஷ்டப்பட்டதற்கு சுகம் அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறதுஇதை மறந்துவிடாதேநான் உனக்கு பக்கபலமாக இருக்கிறேன்ஒப்புக்கொள்’ என்று சொன்னார்நான் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன்

எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால்நான் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் எப்போதோ கிடைத்திருக்கும்என் வீடு தேடி வந்ததை ஒதுக்கித் தள்ளியவன் நான்அதனால்தான் நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டு காரியம் செய்கிறார்கள்நானே மந்திரியாக இருந்தாலும் இப்போது செய்கிற காரியம் என்னால் செய்திருக்க முடியாதுஎப்படியாவது என்னை இதில் சிக்கவைத்துபார்ப்பனர் முன்னேறப் பார்த்தார்கள்பலிக்க வில்லைபிறகு ஆச்சாரியாரே முடிசூட்டிக் கொண்டார்.

திருஆச்சாரியார் தர்மம் தர்மம் என்கிறாரேதர்மம் என்றால் என்னபார்ப்பானைத் தவிர மற்றெவனும் படிக்கக்கூடாதுபார்ப்பானுக்கு அடிமை வேலை செய்ய வேண்டும்சூத்திரனாக பார்ப்பானின் வைப்பாட்டி மகனாக என்றைக்கும் இருக்க வேண்டு மென்பது ஆகும்இதுதான் அவர்கள் சட்டம்ஆனால் நம் பிரசாரத் தின் பயனாக எல்லா மக்களும் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘சூத்திரன்’ என்றால் உதைப்பான் போல் இருக்கிறதுஇதனால் உத்தியோகங்களில் ஏகபோகமாய் இருந்து வந்த பார்ப்பானுக்கும்மற்ற பஞ்சாங்க பார்ப்பான்களுக்கும் ஆபத்துஆகவே தன் இன மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு புதுக்கட்சியை ஆரம்பித்துள்ளார்பார்ப்பான் என்ன அயோக்கியத் தனம் செய்தாலும்பித்தலாட்டம் செய்தாலும் பிராமணன் என்ற போர்வையில் மறைக்கப்படுகிறான்பார்ப்பானால் உண்டாக்கப்பட்ட கடவுள்இதிகாசம்,  புராணம்மதம்hதிசோதிடம் முதலிய அடிப் படைகளை அழித்துவிட்டால் இந்த தொல்லையெல்லாம் ஒழிந்து விடும்ஆகையால்தான் கோவிலிலுள்ள குழவிக் கற்களைஉடைத்து ரோடுகளுக்கு ஜல்லி போடச் சொன்னேன்புராணஇதிகாசங்களுக்கும் இவைகளைக் காப்பாற்றும் சட்டத்திற்கும் நெருப்பு வைத்துக் கொளுத்தச் சொன்னேன்மக்களும் செய்தார்கள்அந்தக் காலத்தி லேயே இராஜhஜிதமிழ்நாடு காங்கிரசில் நுழைய முடியாமல்காந்தி யார் தயவால் அகில இந்திய காங்கிரசில் மெம்பரானார்காமராசரை அழிக்க எடுத்த முயற்சிகள் ஒன்றும் பயனளிக்க வில்லைநாமும் காமராசரை ஆதரிக்கிறோம்ஆகையால் காமராசரை அசைக்க யாராலும் முடியாதுஇடிச்சப்புளி மாதிரி உட்கார்ந்துவிட்டார்நேரு மூலமாவது அழிக்கலாம் என்று பார்த்தார்ஆனால் நேருவோ இராஜhஜி தலை எடுத்தால் தனக்கு செல்வாக்கு இல்லை என்று கருதி சும்மா இருந்துவிட்டார்அதிலும் தோல்விஇனி சட்டசபைக்கும் வர இயலாதுஎவன் இவருக்கு ஓட்டு போடுவான்நம் கட்சியும் நாளுக்கு நாள் வளருவதால் பார்ப்பானால் உண்டாக்கப்பட்ட ‘சனியன்’ அவருக்குப் பிடித்துவிட்டதுஇப்படியே விட்டுவிட்டால் எப்படிஎப்படியாவது பார்ப்பானைக் காப்பாற்றியாக வேண்டுமே என்ற எண்ணத்துடன்தான் சி.ஆர்புதுக்கட்சி ஆரம்பித்துள்ளார்இராஜாஜி திருச்சியில் பேசும் போது ‘எனக்கு பரம்பரை எதிரி ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிட்டார்.

இப்போது திருகாமராசரால் ஒரு சில பதவிகள் கிடைக்கிறதே தவிர இந்து மதம்கடவுள்சாத்திரங்கள் உள்ளவரை சாதியையும்பார்ப்பானையும் அழிக்க முடியாதுகடவுளும்சாதியும் அழியும்வரை பார்ப்பனர்கள் பயப்படத் தேவையில்லை என்று சர்.சி.பிராமசாமி அய்யர் கூறுகிறார்இதைக் கூற இவருக்கு என்ன தைரியம்ஆகையால் தான் நாமும் கடவுளையும் சாதியையும் புராணங்களையும் ஒழிக்கச் சொல்லுகிறோம்இவரது கடந்தகால நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே நன்கு விளங்கும்.

1938-39 இல் நம் ஆட்களை 3000 பேரை ஜெயிலில் போட்டார். 2500 பள்ளிகளை மூடினார்இந்தியைத் திணித்தார். 1952-53 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தார். 6000 பள்ளிகளை மூடினார்உயர்நிலை பள்ளிப்படிப்பு தேவையில்லை என்றார்தன் இனப்பிள்ளைகள் மட்டும் படிக்கட்டும் மற்ற மாணவர்களை படிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன்பிறகு நான் ‘பெட்ரோலும் தீப்பெட்டியும் தயாராக வைத்திருங்கள்நான் சொல்லும்போது அக்கிரகாரத்துக்கு தீ வையுங்கள்’ என்றவுடன் எனக்குப் பயந்து உடல்நிலை சரியில்லை என்று சொல்லி ஓடிவிட்டார்.

 (ஆச்சாரியாரின் ஆட்சிக் கொடுமைகள் என்னும் நூலிலிருந்து)


No comments: