Tuesday, December 31, 2019

தமிழின் பெருமை-ஜாதியின் தீமை : தோழர் நமச்சிவாய (முதலியார்) பிரசங்கம்


தமிழின் பெருமை-ஜாதியின் தீமை 
தோழர் நமச்சிவாய (முதலியார்) பிரசங்கம்

ராசீபுரத்தில் 6.6.35 மாலை 4 மணிக்கு உயர்தரப்பாடசாலைக் கட்டிடத்தில், தோழர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் தமிழரும் அவர்தம் நாகரீகமும் என்பது பற்றிப் பேசினார். அவைத்தலைவர் தோழர் நமச்சிவாய முதலியார் தமது பின்னுரையில் குறிப்பிட்டதாவது:

உலகத்தில் நாகரீகம் பெற்ற நாடுகளில் முதன்மை வாய்ந்தது தமிழ்நாடு. மனித உற்பத்தி, முதன் முதலில் பூமத்திய ரேகையை அடுத்த பிரதேசத்திலேயே உண்டா யிற்று. இதற்கு அநேக சான்றுகள் உள்ளன. இச்சான்றுகளை எடுத்தாளுவதில் முற்காலத்தில் சமஸ்கிருத பாஷையிலிருப்பதைப் பெருமையாக எடுத்தாளுவதும், தற்காலத்தில் வெள்ளையர்கள் சொல்வதைப் பெருமையாக எடுத்தாளுவதும் வழக்க மாகயிருக்கிறது.

ஆனால் இவ்விரண்டும் அறியாமையே, நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி எவ் வி­யத்தையும் ஆராய்ந்து முடிவுகொள்ளவேண்டுமேயன்றி, அவர் சொன்னார், அதில் சொல்லப்பட்டிருக்கிறதென்ற வி­யத்தை ஆதாரமாய்க் கொள்வது அறியாமை. அந்த முறையில் பார்க்குமிடத்து மனித உற்பத்தி பூமத்திய ரேகைப் பிரதேசமென்பதற்குப் பல ஆதாரங்களுள் ஒரு காலத்தில் இமாலயப் பிரதேசம் கடலாகவும் , இந்து சமுத்திரப் பிரதேசம் நிலமாகவுமிருந்தது. மற்ற சமுத்திரங்களைக் காட்டிலும் இந்து மகா சமுத்திரம் ஆழமற்றதாகவும் அமெரிக்கப் பெருங்கப்பல்களின் போக்குவரவுக்குத் தகுதியற்றதாகவு மிருப்பதன்றி அநேக தீவுகளைக் கொண்டிருப்பதும், இமாலயப் பிரதேசத்தில் கடலின் அடிப்பாகத்திலுள்ளதைப் போன்ற வஸ்துகள் இருப்பதாக பூதத்துவ ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் மேற்கூறிய வாதத்தை உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறுள்ள இந்துமகா சமுத்திரப் பிரதேசத்திற்குலெமூரியாகண்டமென்று பெயர். அக்கண்டத்தில் ஆதியில் வழங்கி வந்த மொழி தமிழ் மொழியேயாம்.

தமிழின் பெருமை

இத்தமிழ் மொழி அக்காலத்தில் இந்தியாவெங்கும் பரவியிருந்தது. லெமூரியா நாடு கடல் கொள்ளப்பட்டதும் இமாலயப் பிரதேசம் நீர் வடிந்து தரைப் பிரதேசமாகி விட்டது. இவ்வாறு நீர் ஒரு புறம் ஏறுவதும், மறுபுறம் இறங்குவதும் இயற்கையே யாகும். இந்த இயற்கை நிகழ்ச்சியை ஓர் ஆதாரமாக வைத்துக் கொண்டே, இதைச் சிவன் தலையிலேற்றி அகத்தியரைத் தென்னாட்டிற்கனுப்பிய கதையைப் புனைந்தனர் போலும்!

தமிழரின் மொழியாகிய தமிழ், லெமூரியா கடலில் ஆழ்ந்த பின்னருங்கூட , இமாலயம் வரையில் வியாபித்திருந்ததென்பதற்கும் அநேக ஆதாரங்களுள, இதற்குப் பண்டையத்தமிழ்க் காப்பியங்களே தக்க ஆதாரமெனினும் , அதை நீக்கி நமது அறிவைக் கொண்டு பார்த்தாலும் பல உண்மைகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக பெலுசிஸ்தானத்துப் பாஷையில் தமிழ் சிதறிக்கிடக்கின்றது. ஆப்பிரிக்கரின் மொழியிலும் அவ்வாறே காணப்படுகின்றன. இவ்வாறாய் காரணங்கள் பலவற்றால் தமிழும், தமிழும் மிகப்பழைமையானவர்யானவை என்பது மிகையாகாது.

மேலும் அக்காலத்தில் மத பேதம், ஜாதி பேதம் இருந்ததாகக் கூற முடியாது. மக்கள் ஒவ்வொரு காரணம்தொழில் பற்றி தத்தமக்கேற்பட்ட காரணப் பெயர்களைப் பிற்காலத்தில் ஜாதிப் பட்டப் பெயர்களாகத் தத்தம் பெயர்களினிறுதியில் புனைந்து கொண்டு, முதலி, நாயுடு, ஐயர் என்ற இறுமாப்புடன் வாழ வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டனர்.

உண்மையை ஆராய்ந்து பார்க்குமிடத்து, அக்காலத்தில் அரசர் காரியங்களிலும், தெய்வ காரியங்களிலும், முதன்மை பெற்றிருந்த கூட்டத்தார் முதலியயன்றும், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு நாயகமாக விளங்கிய (ஆண்டு வந்த) கூட்டத்தாருக்கு நாயக்கர், நாயுடு என்றும் செட்டாக வர்த்தகம் செய்து வந்த கூட்டத்தாருக்கு, செட்டி என்றும் பெயர்கள் ஏற்பட்டனவே யயாழிய, இக்கூட்டத்தாருக்குள் தற்போதுள்ளதைப் போன்ற உண்பன, கொள்வன, கொடுப்பன போன்றவற்றில் வித்தியாசம் இருந்ததில்லை.

400-500 ஆண்டுகளுக்கு இப்பால்தான் இவ்வளவு வி த்தியாசங்களும், ஜாதி இறுமாப்புகளுமேற்பட்டனவே யயாழிய அதற்கு முன் இல்லை.

தமிழரின் பெருமை குன்றிய காரணம்

ஆனால் இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழர் - தனித்தமிழர் யார் என்பதை இப்போது அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலிருக்கிறோம்ஆரியர் இந்நாட்டில் புகுந்த பின்னர், அவ்வாரியரின் ரத்தக் கலப்பினால் தனித்தமிரென்ற பெருமை குன்றிவிட்டது. ஆரியர் இந்நாட்டில் நுழையும் போது ஆடவராகவே வந்தனர். இந்நாட்டுத் தமிழ்ப்பெண்களை மணந்து மக்களைப் பெற்றனர். அக் கூட்டத்தினர் எங்கும் நிலவியிருக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது.


 இவ்வாறே தனி ஆரியர் இன்னாரென்பதும் அறுதியிட்டுக் கூறமுடியாத வி­யமாகும். ஆகவே, ஆரியரும் தமிழரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒன்றாயினர். ஆயினும் ஆரியரெனப் படும் ஆடவர்க்கு ஜாதி இறுமாப்பு இன்னும் குறைந்ததாகக் கூறமுடியவில்லை.

அவர்கள் பெண்களை சூத்திரத்துவமுடையவர்களென்று கருதுகிறார்கள். அதனாலேயே வேத மந்திரங்களைப் பெண்கள் உச்சரிப்பதும், செவியுறுவதும் கூடாதென்று சட்டமேற்படுத்தினர். இவ்வாறு தமிழ்ப்பெண்களை மணந்து குடும்ப வாழ்க்கையை நடத்தியவர்கள் கலப்பு ஆரியரேயாயினும், தம் தந்தை வழியை வேறு பிரித்துக் காட்டுவான் வேண்டி, மற்றவர்களுக்கு இல்லாதபூணூல்என்ற ஒரு அடையாளத்தை அணிந்து கொண்டனர்.

இந்த முறையில் பிற்காலத்திலும் பல பூணூல்காரரும், புதுப்புது ஜாதிப் பெயர்களும் தோன்றலாயின. ஆகவே நம்நாடு தற்போதிருக்கும் நிலையில் முதலில் இந்த ஜாதி வித்தியாசங்களொழிய வேண்டும். அதற்கு இளைஞர்கள் முன்னின்று உழைக்க வேண்டும். தமிழரின் பண்டை நாகரிகத்தை நிலைநாட்ட வேண்டும். அந்த முறையில் பிராமணீயத்தை ஒழிக்க வேண்டும். ஒற்றுமை வேண்டும். (குடிஅரசு, சூன் 16, 1935)


No comments: