Saturday, December 14, 2019

கம்பராமாயணத்தைக் கொளுத்துக- தீ பரவட்டும் - பேரறிஞர் அண்ணா



கம்பராமாயணத்தைக் கொளுத்துக தீ பரவட்டும் பேரறிஞர் அண்ணா


கம்ப இராமாயணம் , பெரிய புராணம்  ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும் என்று எனது தலைவர் .வே.இராமசாமி கூறியது கண்டுமக்களுக்கு கோபம் வருவது இயற்கை என்று அமைச்சர் உரைத்தார்உண்மைமக்கள் கோபிப்பர் என்பதை நாங்க ளறிவோம்நாங்கள் துவங்கிய எக்கருத்துக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு மக்கள் கோபித்துப் பின்னர் எம்முடன் சேர்ந்து எமது பாசறைகளுக்கு வந்துற்றனர் என்பதை அவர் அறிய வேண்டுகின்றேன்.


கலைஇலக்கியம்கற்பனை நூல் ஆகியவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம்இல்லைதொல்காப்பியத்தைத் தொட்டோ மில்லைநற்றிணையைநல்ல குறுந் தொகையைகற்றறிந்தோர் ஏற்றுங் கலியைஅகத்தைபுறத்தை அழிக்கப் புறப்பட்டடோ மில்லைஆரியத்தை அழகுறப் புகுத்தித் தமிழரை அருக்கும் நூற்களையே கண்டிக்கி றோம்கலை விஷயமான கிளர்ச்சியை நாங்கள் எடுத்துக் கட்டிக்கொண்டு வர ஆசை கொள்ளவில்லைமுதலிலே ஆரியக் கலை யின் சார்பாக ஜெர்மன் பேராசிரியர் மாக்ஸ்முல்லரும்திராவிடக் கலை சார்பாக சர்ஜான் மார்ஷலும் வாதிட்டனர்

இந்தியக் கலை என்றால் ஆரியக் கலை என்று நம்பிய காலமும் ஆரிய தருமம்  நாகரிகம் என்பது குறித்துத் திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் பூரித்த காலம் உண்டு

நான் சிறுபிள்ளையில் படித்ததுஆரிய மத உபாக்கியானம் என்பதைத்தான்

பிறகு மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும்சைவத் திருவாளர் வி.பிசுப்பிரமணிய முதலியாரும் , திராவிட நாகரிக மேம்பாட்டை எடுத்துரைத்தனர்

மறைமலை அடி களாரும் இது குறித்துக் கூறினார்நாங்கள் கூறுவதைக் காட்டிலும் கடுமையாகவேஆரிய மன்னன் மகன் இராமனைத் தெய்வமாக்கித் தமிழரைச் சிறு தெய்வ வழிபாடாற்றும் சிறு மதியினராக்கிய ஆரிய திராவிடப் போராட்டக் கதையே இராமாயணம் என்று உரைத்ததைக் கூற விழைகிறேன்.


கம்பரின் திறமை பற்றித் தோழர்  சேதுப்பிள்ளை கூறுவார் பிறகுஆனால் அவரும் பண்டிதர்களும் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோஅதே திறமையேதமிழர் கெட உதவி செய்தது என்பதே எமது குற்றச்சாட்டுகாடேக இராமன் கிளம்பும் போது உடன்வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில்சீதை கூறும் மொழியின் பகுதியை யும்,சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வால்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்தெழுதியிருப்பின்அந்த  அரியப் பாத்திரங்களிடம் ஆபாசக் குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டுஅவர்களைத் தெய்வங்கள் என்று போற்றும் கீழ்நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள்.  கம்பரோ தமது கவித் திறமையினால்ஆரிய இராமனைக் குற்றங்குறையற்ற சற்பாத்திரனாக்கிக் காட்டிவழி பாட்டுக்குரிய தெய்வமாக்கி விட்டார்

இராவணன் மிக்க வலிமை சாலிதிறமையுடையோன்வேதம் பயின்றோன்சிவ பக்தன்இலங்கை சகல சுகமும் நிறைந்த இடம் என்று வர்ணித்து விட்டு இவ்வளவு குணாளனும் திறமை சாலியுமான இராவணன் ஓர் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்துஅறம் விட்டு அழிந்தான் என்று முடிப்பது திராவிட இனப் பெருமைக்கே ஊறு தேடுவதாகும்

திராவிட இன மக்கள்நாம் எவ்வளவு ஆற்றல் படைத்திருப்பினும்கல்வி கேள்வி இருப்பினும்ஆரிய மங்கையரிடம் சபலப்பட்டு சங்கடத்துக்கு உள்ளாவோமாஅழிந்துபடுவோமாஎன்ற சந்தேகத் தையும்  மண்டோதரி எனும் பேரழகியின் நாயகனாகவும்தேவ மாதரும் ஏவலராக இருக்கும் நிலை பெற்ற சுந்தரனுமாகிய இராவணனாசீதை எனும் ஆரிய மங்கையைக் கண்டதும் மையல் கொண்டான்இராவணனுக்கே அந்த நிலை வந்த தென்றால்நாம் தப்ப முடியுமா என்ற திகைப்பும் ஏற்படுமன்றோஆற்றல்மிக்க ஓர் அரசன் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழித்தான் என்ற கதையைப் படிப்பது திராவிடருக்கும் ஆபத்துஆரியருக்கும் ஆபத்து என்றுரைப்பேன்.


கவி நயத்தைக் காட்டிஇராம காதையிலே வீரம் செறிந்திருக்கிறதுதியாகம் ததும்புகிறதுநட்புக்கு உதாரம் நன்றாகக் காண்கிறோம்கற்புக்கும் காதலுக்கும்  சான்றுகள் உள என்று கூறிஅவ்வின்பத்துக் காகக் கம்பராமாயணம் தேவை என்று பேசுவோர் உரைப்பர்.


நான் கூறுகிறேன்காதலுக்கும் கற்பிற்கும் இராம காதையிலிருக்கும் இன்ப நுணுக்கப் பொருள்களைவிட மிகச் சிறப்புடைத்தான பொருள் கள் நமது அகப்பொருளில் உண்டுஎனவே கம்பராமாயணம் ஒழியின் காதலுக்கும் கற்புக்கும் கவிதை இராதே என்றுபண்டிதர்கள் கவலை கொள்ளத் தேவையில்லைநட்புக் குறித்துக் கூறுவரேல்இராமனுக் கும் படகோட்டி குகனுக்கும் கண்டதும் ஏற்பட்ட நட்பு எத்தகைய சிறப்புடையது என்று வியந்து கூறுவர்வால்மீகி நூற்படி அயோத்தி எல்லையினன்இராமனின் நண்பன் என்பது விளங்கும்

கம்பன் மொழி பார்த்திடின்குகன் இராமனைக் கண்ட அன்றே நட்புக் கொண்டான் என்று கூறுகிறார்நட்பின் சிறப்புச் சாற்ற இராமனும் குகனுமாவது கண்டதும் நட்புக் கொண்டனர்

கம்பச் சித்திரத்தின் மாண்பு அது என்றால்கோப்பெரும் சோழனெனும் அரசனும் பிசிராந்தை யாரும் ஒருவரை காணாமலே - ஒருவர் பற்றி ஒருவர் கேட்டேமாறா நட்பினராக இருந்ததை விளக்கும் சங்கக் கவி நம்மிடம் இருக்கும் மாண்பு பற்றி பண்டிதர்கட்குக் கவனமூட்டி நட்பின் பெருமையைக் கம்ப இராமாயணம் ஒழிந்தால் நாடு மறந்திடாதுமுன்னாள் இலக்கியமுண்டு என்று கூறுகின்றேன்.


தியாகத்தைக் குறித்துக் கூறுவர்இராமன் அரசுரிமை துறந்து காடேகினான்மரஉரி தரித்து மன்னன் மைந்தன்,  மாலின் அவதாரம் சென்ற போதுஅத்தியாக மூர்த்தியின் முகம் அன்றலர்ந்த  செந்தாமரை போன்றிருந்ததுதியாகத்தின் சிறப்பு இதுகம்பனின் கவித்திறம் இது என்றுரைப்பர்.  அரசு போவறிந்த  இராமனின் முகங்கோணியதை வால்மீகர் கூறினார்கம்பர் மெழுகினார்கம்பர்மொழியைக் குறை கூறாது அங்ஙனமே கொண்டு பார்ப்பினும்அந்த  தியாகத்தை மறக்க வேண்டாமென்று கூறுகிறேன்

இராமனாவது தந்தை சொல்லால் சிற்றன்னையின் கொடுமையால்அரசுதுறந்தான்இளங்கோவடிகளோதாமாகவே மன உவந்து அரசு துறந்தார்இந்தத் தியாக நிகழ்ச்சியைத் தமிழனறியஓர் ஆரிய இளவரசனுக்கு நேரிட்ட அவதியைக் கதையாக்கிக் காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன்

நாம் காணாத அந்நிகழ்ச்சிகள் கிடக்கட்டும்நம் காலத்திலேயே காதலுக்காக வேண்டித் தம் மணிமுடியைத் துறந்த எட்வர்ட் அவர்களின் மாண்பு கண்டோமேதனது இளமை எழில்செல்வம் யாவற்றையும் பரத்தைக்கு ஈந்துவறியனாகித் திரும்பிடும் கோவலனைக் கண்ணகி கண்டபோதுதனக்குற்ற இடரெல்லாம் மறந்து கோவலனிடம் கனிமொழி பேசிய அம்மாண்புடன் காட்டுக்கு மறந்து வராதே என்றதும் இராமனை நோக்கிச் சீதை பேசும் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கற்பின் மாண்புக்குச் சிலப்பதிகாரமிருக்க கம்பனின் கவிதைஅதற்குப் பயன்படவில்லை என்று கவலையுறுகிறேன்.


வீரம் செறிந்துள்ளது கம்ப இராமாயணத்திலே என்பவர் புலவர்தமிழ் நாட்டவருக்கு வீரத்தை உணர்த்த ஆரிய இராம காதையன்றி வேறு வழி இல்லையா என்று உண்மையில் கேட்கிறேன்இராமனின் போரிலே வீரமிருந்தது என்று கூறினும்அது மனிதருக்குள் நடந்த போரல்லதிருமாவின் அவதாரமாம் இராமன்மாயா அஸ்திரங்களின் வலிமை கொண்டு போரிட்டு வென்றான்இது வீரமாகாது

ஆண்டவனின் வீரத்தை வியந்துரைக்க வேண்டுமாதன் மனைவி சீதையை இராவணன் எடுத்துச் சென்றான் என்று கேள்விபட்டதும் இராமன் செய்திருக்க வேண்டியது என்னஎங்கே அந்த இராவணன் என்று முழக்கமிட்டு இலங்கை சென்றிருக்க வேண்டும்இராவணனை எதிர்த் தொழித்திருத்தல் வேண்டும்அதுவே வீரம்

யுக்தியுடன் காரியம் செய்ய வேண்டுமென்று கருதினால்உடனே அயோத்திக்கு இலக்கு வனை அனுப்பித் தன் நாட்டுப் படைகளை இலங்கை மீது படை யெடுக்க அழைத்திருக்க வேண்டும்

இராமனின் பாதுகைக்கு பட்டாபி ஷேகம் செய்வித்த பரதன் படை அனுப்பாதிரான்அப்படி அயோத்தியினின்றும் கிளம்பி இலங்கை சென்று போரிட்டால் ஆரிய வீரம் விளங்கி யிருக்கும்அதையும் செய்யவில்லை ஆரிய இராமன்

ஹிட்லருக்கு ருமேனிய படை கிடைத்தது போல வானரப் படையைப் பெற்றுஅண்ணன் தம்பி சண்டையில் புகுந்து  வானர சேனையைப் பெற்றுஅதைப் இலங்காதிபதியின் மீது ஏவினான்இது இராஜதந்திரம் என்று கூறுங்கள்ஒப்புக் கொள்கிறேன்ஆரிய தர்மம் என்று உரையுங்கள்பொருத்தமாக இருக்கும்ஆனால் இதனை வீரமென்று கூறாதீர்கள்எவரும் ஒப்பார்.


சேரன் செங்குட்டுவன்கங்கைக்கரை வரைச் சென்று வெற்றிக் கொடி நாட்டியதை வீரமென்று கூறுங்கள்பொருத்தமாக இருக்கும்.  தமிழ் இனப் புகழினைமாநிலம் அறியும்அலைகடலை அடக்கும் மரக்கலம் செலுத்தி இராஜேந்திரன் பர்மாவை வென்றதைக் கூறுங்கள்அது வீரச்செயல்.  கலிங்கத்தின் மீது படையெடுத்த மன்னன் கலிங்க நாடு மலையரன் உடைத்து,  வேழப்படையுடன் செல்க என்று பணித்த துடன்தரைப்படை செல்லுகையில் கப்பற்படையும் செல்லட்டும் என்று பணித்ததையும் காணின்,  வீரம்போர்த்திறம்போர்முறையின் மாண்புயாவும் விளங்கும்கலிங்கத்துப் பரணியிலே வீரமிருக்கிறதென்று கூறுங்கள்முறைவேறு எந்தப் பகுதிகளாகக் கம்ப இராமா யணம் இருந்ததே தீரவேண்டும் என்றுரைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்

கலைகலை என்று பேசும் அன்பர்கள்இந்நாட்டு மக்களின் நிலை உணர்ந்தனரா என்று கேட்கிறேன். 100 க்கு 93 பேர்  இங்கு பாமரர்ஓய்வும்ஆர்வமும் தெரிந்து கொள்ளக் கூடிய தன்மை யும் கொண்ட என் போன்றவர்கள் யாப்புஅணி என்பவைகள் பற்றிக் கூறிடுகை யில்இவர்களால் இதைத் தெரிந்து கொள்ள முடிய வில்லையே என்று அயர்வர்.  ஓய்வின்றிபக்குவமின்றிஎழுத்தறிவே யின்றி அவர்கள்கம்பராமாயணத்திலே உள்ள அணி யழகுஉவமை உயர்வு கூறியாதெளியவைப்பார்பொது மக்கள்இராமாயணம் என்றதும் மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்த அனுமனின் அடி விழவும்ஆரியரை வணங்கவும் அறிவரேயன்றியாப்பும் அணி யும் தெரிந்து இராமகாதை கற்பனைஅதிலே உள்ள கவித்திறனைக் கண்டுகளிப்பதே முறைமை என்றா எண்ணுகின்றனர்?

 நமது பண்டிதர் களாவது இன்று வரை பொதுமக்களிடம் சென்றுஇத்தகைய புராண இதிகாசங்கள் புனைந்துரைகவிகளின் கற்பனைமக்களுக்குச் சில நீதிகளை புகுத்தும் நூற்கள்ஒழுக்கத்துக்காகக் கருத்து கூறும் ஏடுகள்கோயில் கட்டிக் கும்பிட அல்ல  என்று கூறினது ண்டாகூறுவாரா

சன்யாட் சென் காலத்திலேசீன மக்கள் பலப்பல தெய்வ வணக்கம் செய்து கிடந்தனர்.   சன்யாட்சென்அந்நாட்டுப் படித்தோரை அழைத்துகடவுள்களின் பட்டியலைக் கேட்டாராம்.  மக்களுக்கு  ஒரு முழுமுதற்கடவுள் இருந்தால் போதுமல்லவா என்று ஆமென்றனர் அறிஞர்அப்படியானால்இந்தப் பெயர் வரிசையிலேஒன்று வைத்துக் கொண்டு , மற்றவற்றைச் சிவப்புக் கோடிட்டு விடுக என்று செப்பினாராம்பிறகு ஒன்றே தேவன் என்றனர் மக்கள்.  இங்கே நமது சைவசமயத் தலைவர்கள்ஐம்பதாண்டுகளுக்கு மேலாகவேசிறு தெய்வ வணக்கம் கூடாதுஎமது சிவமொன்றே முழுமுதற்கடவுள் என்று கூறினர்பலன் என்னஇன்றுவரை பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ் சலை கட்டும் வழக்கத்தைக்கூட ஒழித்தபாடில்லை.


எனவேதான்மக்களின் பொது அறிவு வளர்ந்த நாடுகளில்தெளிவு கொண்ட மக்கள் உள்ள தேசங்களில் இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும் கவியழகை மட்டும் கண்டு,  கருத்துரையிலே உள்ள ஆபாசத்தைமூடத்தனத்தை நீக்குகின்றனர்கிரேக்க ரோமானியர்கள்இதிகாச காலக்கடவுள்களாகக் கொண்டிருந்த வீனஸ்அபாலோ முதலியனவற்றை,  ஏசுவிடம் விசுவாசம்  வைத்ததும் விட்டோழித் தனர்பிரிட்டனிலே கிறிஸ்துவ மார்க்கம் பரவியதும்பழங்காலத்திலே வணங்கிய தார்ஓடின் எனும் தெய்வங்களை மறந்தனர்இங்கோ அன்று தொட்டு இன்று வரைஆரியக் கற்பனையான சிறு தெய்வங் களிலே ஒன்றை நீக்கவும் மக்கள் தயாரில்லை . இந்நிலைக் கண்டுபுலவர்கள் என் செய்தனர்என்று கேட்கின்றேன்ஆரியர் தம் இன வளத்துக்காக வேண்டிப் புனைந்துகொண்ட மக்களின் மதியைத் திருத்த முன்வந்தனரா என்று கேட்கிறேன்.


இராவணன் சீதையை எடுத்துச் சென்றது காமச் செயல் என்றன்றோ இன்றும் கூறுகின்றனர்அக்காலப் போர்முறையிலேஆநிரை கவர்தல்மாதரை எடுத்தல்,  கோட்டை தாக்கல் என்பன முறைகள்.  ஆகையால் இராமனைப் போருக்கிழுக்கத்,  தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர்ப் போருக்கிழுக்கஅந்தச் சமயத்திலே இராமனிடம் எஞ்சி யிருந்த விலைமதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமேஆகையால்சீதையை எடுத்துச் சென்றான் என்ற உண்மையை  உரைக்கலாகாதாகலை என்ற பெயரால் இவ்வளவு இழிவுகளையும் ஓர் இனத்துக்கு  உண்டாக்குவது ஆகுமா

கலையிலே சுயமரியாதைக்காரர்கள் கை வைத்தால்மக்களின் ஒழுக்கம்மதத்தின் மாண்பு கெட்டு விடும் என்று கூறுகின்றனர்.  சுயமரியாதைக்காரர்கள் நாத்திகர்கள் என்று நிந்திக்கின்ற னர்எங்களின் காலத்தையும் கிளர்ச்சியையும் கவனிக்க வேண்டாம்மெய்யன்பர்களும் பக்திமான்களும் தோடுடைய செவியனைப் பாடுவோரும் நிறைந்திருந்த தமிழகத்திலே,  ஆலயங்களிலே உள்ள நிலைமை என்ன என்பதைப் பாருங்கள்சுயமரியாதைக்காரர்களாகிய எங்களின் வர்ணனையை நம்ப வேண்டாம்சைவப் பெரியார் ஒருவர் ஆலய நிலைமைப் பற்றிக் கூறியுள்ளதைப் படிக்கின்றேன் கேளுங்கள்.


செடி கொடிகள் முளைத்த கோபுரங்கள்இடிந்த மதில்கள்முள் முளைத்த பிரகாரங் கள்குப்பைகள் நிறைந்த மண்டபங்கள்பாசி படர்ந்த தடாகம்பொரி கடலை சிந்திய படிகள்இருண்டு வௌவால் புழுக்கை நிறைந்த மண்டபங்கள்தடுக்கி விழக்கூடிய நடைபாதைஎண்ணெய் சிந்தியபடி அது தடவிய சுவர்மினுக்கு மினுக்கெனும் தீபம்புகை நிறைந்த உள்புகை தூசி விழும்  தளம்நாற்றம் வீசும் தீர்த்தத் தொட்டிபுழக்கள் உறையும் ஆவுடையார்கரப்பான் உலவும் திருமேனிபெருச்சாளிபூனை வசிக்கும் கர்ப்பக் கிருகம்அழுக்கு உலக மேனியும்பொடி முதலிய அநேக புனிதங்களையும் காணாமல்ஆலயம் செல்லும் ஓர் அன்பன் தன் வீட்டிற்குத் திரும்பினால் அவன் பாக்கியமே பாக்கியம்.


இது இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்துள்ளவர்மைலத்திலே ஆற்றிய சொற்பொழிவுவின் ஓர் பகுதி.


சைவப் பெரியாரின்  இவ் வர்ணனையைப் படித்துக் காட்டியதன் காரணம்கலையிலே நாங்கள் கை வைப்பதால் மக்களின் ஒழுக்கமும் பண்பும் போய்விடும் என்று கூறுகிறார்களேநாங்கள் ஏதும் செய்யா திருக்கையிலேயேமெய்யன்பர்கள் ஏன் இத்தகைய சீர்கேட்டை ஆலயங்களில் புகுத்தினர் என்பதை யோசியுங்கள் என்று கேட்டுக் கொள்வதற்கேயாகும்.


இனத்தைத் தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே பெரிய புராணத்தை யும் கண்டிக்கிறோம்அந்த புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுட் கருத்துரைகள் எவ்வளவு அறிவீனமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்பக்திக்காக அடியவன் ஏதும் செய்வான் என்று அவன் பெருமையைக் கூறப் பெரிய புராணம் எழுதப் பட்டதென்றால்ஆண்டவன் இத்தனை கடுமையும் நிரம்பிய சோதனைகளைச் செய்தார் என்று கூறுவது கடவுள் இலக் கணத்துக்கே இழிவைத் தராதா என்று கேட்கிறேன்உலகிலே எந்த நாட்டிலும் எந்த பக்தி மானுக்கும் நேரிடாத சோதனைஇங்கு மட்டும் நேரிடக் காரணம் என்னஆண்டவனுக்குமா இந்நாட்டினிடம் ஓரவஞ்சனைமற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சிதுர்பாக்கியம் மிகுந்த இந்நாட்டில் மட்டுந்தானே நடந்திருக்கிறதுபிள்ளைக்கறி கேட்பதும் பெண்டை அனுப்பி வைக்கச் சொல்வதும்கண்ணைப் பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள் இங்கு மட்டுமே உள்ளனகாரணம் என்னஇவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கெடும் என்பதைக் கண்டேநாங்கள் பெரிய புராணத்தைக் கண்டிக்கிறோம்இத்தகைய புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டேநாங்கள் அப்புராணங்களைக் கண்டிக்கிறோம்

இவை ஆரியக் கலை வேறுதிராவிடக்கலை வேறுஆரியக்கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியதுடன் திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தை பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளைக்கூறிக் கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் கண்டிக்கிறோம்கொளுத்துக என்று கூறுகிறோம்


(ஏடு -3)



No comments: