Saturday, December 14, 2019

தந்தை பெரியார் ஒரு சகாப்தம் -பேரறிஞர் அண்ணா



தந்தை பெரியார் ஒரு சகாப்தம்
 -பேரறிஞர் அண்ணா

பெரியாருடைய குடும்பத்தின் நிலை எப்படிப்பட்டதுஎந்தப் பக்கம் திரும்பினாலும் வாணிபத்தில் ஆதாயம்நிலபுலன்கள்வீடு வாசல்கள்இவைகள் எல்லாவற்றையும் பார்த்து, ‘இவைகள் எனக்குத் தேவையில்லை.’ என்றார். ‘என் நாட்டு மக்களுக்கு/நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்று போயிருக்கும் மக்களுக்கு/வேறு ஒரு செல்வத் தைத் தருவேன்அறிவுச்செல்வத்தைத் தரப்போகிறேன்சிந்தனைச் செல்வத்தைத் தரப்போகிறேன்அதைத் தடுப்பார் எவரேனும் குறுக்கிடு வார்களானால் அவர்களுடைய ஆற்றல்களையும் முறியடிப்பேன்இது தான் என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று சொல்லி அவர் கள் கிளம்பினார்கள்அதுதான் வாழ்க்கையின் முதல் போராட்டத்தில் அவர்கள் பெற்ற வெற்றி.

 1934,35,36 ஆம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் (பார்ப்பனர்கள்ஆட்சி மொழி என்று அல்ல; ‘தேசியமொழி’ என்றழைத்தார்கள்இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டுஅதுதான் இந்திஇந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசியமொழி இந்திதான் என்று 1935 இல் அவர்கள் சொன்னார்கள்பெரியார் அவர்களின் போர்முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகின்றேன்அவர்கள்எதிரில் உள்ள படையை மட்டுமல்லமுதலிலே அப்படைக்கு எங்கே மூல பலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூலபலத்தைத் தாக்குவதுதான் அவர் போர்முறையாகும்.

ஆகையினால்இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்று சொன்னவுடன்தேசம் என்பது மகாப்புரட்டுஇந்தியா என்கிறீர்களேஇந்தியா என்பது மிகப் பெரிய கற்பனை என்று கூறி, ‘அவை இரண்டை யும் உடைத்து எறிவதுதான் என்னுடைய வேலை’ என்று கிளம்பினார் கள்அப்படி இந்தியைக் கொண்டுவந்தவர்கள்இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று, ‘தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக் கொண்டுஇந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றனஅதில் ஒன்றுதான் இந்திஆனால் இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவ தால் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்

அப்போது பெரியார், ‘ஆட்சி மொழி என்பது இருக் கட்டும் / உங்களுடைய ஆட்சியின் இலட்சணம் என்னயார்/யாரை ஆள வேண்டும்எதற்காக ஆள வேண்டும்என்று ஆட்சி முறை யைப் பற்றி அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள்ஆட்சி மொழி இந்தி என்பதை விட்டுவிட்டு, ‘ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும்’ என்று நேசம் கொண்டாடுகிறார் கள்பாசம் காட்டுகிறார்கள்சொந்தம் கொண்டாடுகிறார்கள் ‘நாம் இணைந்திருக்க வேண்டாமா?’ என்றுஇணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப்பெரிய காரணம் பெரியார் அவர்கள் நடத்திய அறப்போராட்டம்தான்.

எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய  காரியங்களை இருபதே ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக் கிறார்கள்அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால்நாட்டி னுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள்/ அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டுகள் என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக ஒரு வால்டேர், %சோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுதான் பகுத் தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தனஇப்படி இரண்டு நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களைப் பெரியார் அவர் கள் இருபதே ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டுமெனக் கிளம்பி னார்கள்திட்டமிட்டார்கள்அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணி யாற்றிக் கொண்டு வருகிறார்கள்ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் ‘Pரவவiபே உநவேரசநைள in வடி உயpளரடநள’ என்று சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே தருவதுபோலபல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து அவர்கள் தம்முடைய வாழ்நாளிலேயே சாதித்து தீரவேண்டுமென்று அறிவோடும் உணர்ச்சியோடும் நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள்யார் போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக வைத்துக் கொண்டுஎந்த அளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட் டக்களத்தில் நின்றிருக்கிறார்கள்

(17.9.1967 திருச்சியில் பெரியார் 89 வது பிறந்தநாள் விழாவில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவு)

பெரியார் அவர்கள் சொன்னார்கள் ‘நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் கள்ஏன் அப்படிச் சொன்னாரென்று சிந்திக்க ஆரம்பித்தால் அதில் எதுவும் சிறு தவறுகூட இருக்காதுஅவர் சொன்னவையெல்லாமே உண்மை என்பது நன்றாகவே தெரியும்அதைக் கண்டுபிடிப்பதில் சிந்திப்பவனுக்குத் தைரியம் தானாகவே வந்துவிடும்அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பி வருகிற பெரியார் அவர்கள்பல ஆண்டுக்காலமாக எடுத்துச் சொல்லியும் இன்னமும் மக்கள் திருந்தாம லிருக்கிறார்களே என்ற கவலையால் கடுமையாக நம் இழிவு நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்பெரியார் அவர்கள் காலத்தில் அவரது கண்களுக் குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.

 (13.12.1967 திருப்பத்தூர் நகராட்சி மன்ற விழாவில் அறிஞர் அண்ணா)

...  எனக்கு நன்றாக நினைவு இருக்கிறதுநான் ஆயிரமாயிரம் மேடை களிலே பேசியுள்ளேன்அதற்கு முன்தமிழகத்தில் தலைசிறந்த வக்கீல்கள் யார் என்றால் ஒரு அல்லாடி கிருட்டிணசாமிதலைசிறந்த டாக்டர் யார் என்றால் ஒரு அரங்காச்சாரிசிறந்த நீதிபதி யார் என்றால் முத்து சாமி அய்யர்சிறந்த நிர்வாகி யார் என்றால் கோபாலசாமி அய்யங்கார் இப்படிதான் சொல்லக் கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது என்று சொல்லிவந்தேன்இன்றைய தினம் எந்தத்துறையில் எடுத்துக் கொண் டாலும் இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இருந்தவர்கள் முதல் தரமான வக்கீல்தலைசிறந்த மருத்துவர் என்று இப்படித்தான் இருக்கிறார்கள்சர்இராமசாமி முதலியார் அரசியலில் இருந்து விரட்டப்பட்டார் என்றாலும் அய்தராபாத் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு அய்.நாவில்பேச அவரை நேரு விரும்பி வேண்டிக்கொண்டார் என்றால் அவர் திறமையைக் கருதியே அல்லவாசர்.இராமசாமி அய்.நாசென்றுவந்தது மட்டு மல்லவென்றும் வந்தார்இப்படி நம்மிலே பல அறிஞர்கள்/படித்தவர்கள் இருக்கிறார் கள்பிற்படுத்தப்பட்ட இனம் என்று தவறான காரணங்களைக் காட்டி அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்று உயர் பதவிகளில் உத்தி யோகங்களில் நல்ல செல்வாக்கோடு இருக்கின்றனர்இந்த அளவுஅதிகப்பட வேண்டும்ஆகவே இத்தகைய வளர்ச்சி பெரியார் அவர் களால் / அரை நூற்றாண்டு இடைவிடாத் தொண்டினால் ஏற்பட்டது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

பெரியார் அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிற பணி சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகரப் பணியாகும்அரசாங்கத்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை அடியோடு மாற்றியமைத்து விட முடியாதுஅரசாங்கத் திற்கு அந்த வலிமை இல்லைஎன்னிடம் ஒரு அரசு அளிக்கப்பட்டி ருக்கிறதுஎன்றாலும் அது ஒரு பெரிய சர்க்காருக்குக் கட்டுப்பட்டுக் காரியமாற்ற வேண்டிய ஒன்றே தவிர தன்னிச்சையாகக் காரிய மாற்ற முடியாதுஇதனைப் பெரியவர்கள் நன்கு அறிவார்கள்உலகத்திலே எந்த நாட்டிலேயும் சர்க்காரால் சாதிக்கப்பட்டதைவிடத் தனிப்பட்ட சீர்திருத்தவாதிகளாலேயே சமூகம் திருத்தப்பட்டிருக்கிறதுபெரியார் அவர்கள் எடுத்துச் சொல்லுகிற கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்புவதற்குசெயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன்சர்க்காரில் இருந்து கொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவாஅல்லது விட்டுவிட்டு உங்களிடம் வந்துதமிழகத்திலே இதே பேச்சை பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா என்பதை முடிவு செய்யும் பொறுப்பைப் பெரியாரவர்களுக்கே விட்டுவிடுகிறேன்அவர்/என்னோடு வந்து, ‘பணியாற்று’ என்றால் அதற்குத் தயாராக இருக்கி றேன்.

(19.1.1967 நாகரசம்பட்டியில் பெரியார் இராமசாமி கல்வி நிலையத் தினைத் திறந்து வைத்து அறிஞர் அண்ணா ஆற்றிய உரை)

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?

தந்தை பெரியார் அவர்கள், ‘சுயமரியாதை இயக்கத்தை ஏன் தோற்றுவித்தேன்?’ என்று விளக்கம் கூறுகின்ற நேரத்தில் உலகில் எங்குமில்லாத பிறவிக் கொடுமையாக இருக்கக் கூடிய இந்த சாதி இழிவு பேதம் இந்த சமுதாயத்தில் ஆழமாகப் பற்றி இருக்கிற காரணத்தால் ஒரு மனிதனை விட இன்னொரு மனிதன் உயர்ந்தவன்ஒரு மனிதனுக்கு இல்லாத வாய்ப்பு இன்னொரு மனிதனுக்கு இருக்க வேண்டும்ஒரு மனிதனை மதிக்காத இன்னொரு மனிதனை மட்டுமே மதிக்க வேண்டும் என்று இருக்கிற சாதி வருணாசிரம தர்மம் என்பதை இந்த நாட்டில் அறவே அழித்து மனித குலம் ஒன்றுபட வேண்டும் என்பதை அடிப்படை யாகக் கொண்டே அவர்கள் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்

1924 இல் கேரளத்தில்அன்றைக்கு திருவிதாங்கூர் என்று அழைக்கப் பட்டிருந்த மாநிலத்தில் வைக்கம் என்ற ஊரில் தெருக்களில் ஈழவ சாதிகீழ்ச் சாதிபிறவியினால் உயர்ந்த சாதியல்லாதவன் என்ற காரணத்தி னால் அவன் நடக்கக்கூடாது என்று சொல்லிகோயிலின் சுற்றுப்புற வட்டாரத்தில் அந்தத் தெருக்கள் அமைந்திருந்த காரணத்தால் அந்த மனிதனுக்கு தெருக்களில் நடக்க உரிமையில்லை என்று சொன்ன நேரத்தில்அதனை எதிர்த்து ஒரு போரட்டத்தை மனித நேய அடிப்படை யில் தொடங்கினார்கள்வர்ணாசிரம தர்மம் என்ற சாதி தர்மத்தைக் காப்பாற்றுவதற்குதான் அரசு/ஆட்சிகள் இருந்தனஅந்த போராட்டத் தின் காரணமாக டி.கேமாதவன்ஜார்ஜ் ஜோசப் போன்றவர் களெல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்சிறையில் இருந்தபடியே அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.

தமிழகத்தில் இருந்த தந்தை பெரியார் திருவிதாங்கூரில் எங்கோ ஒரு மூலையில் தானே அந்த கொடுமை என்று எண்ணாமல்மனித உரிமை எங்கு பறிக்கப்பட்டாலும்மனிதநேயத்துக்கு எங்கு அறைகூவல் விடப் பட்டாலும் அதற்கு விடை கண்டாக வேண்டும் என்பதற்காக நேரடி யாக அங்கே சென்றார்கள்அங்கே சென்று அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபடுவார் என்று அந்த அரசரோ அல்லது ஆட்சியோ எதிர்பார்க்கவில்லைகாரணம் அந்த அரசர் டெல்லிக்குச் செல்கிற நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் வீட்டில் விருந்தினராக இருந்து ஈரோட்டில் தங்கிவிட்டுச் செல்வது வாடிக்கைஎனவே பெரியார் அவர்கள் அங்கு போகும் போது அவர் களுக்கு அரசு மரியாதையோடு அதிகாரிகளை அனுப்பி வரவேற்பு கொடுத்த நேரத்தில் ‘நான் இங்கே வந்திருப்பது விருந்துக்காக அல்ல உரிமைப்போராட்டத்திற்காகஎனவே அருள்கூர்ந்து நான் அதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அவருக்கே உரிய தனித்தன்மையோடு தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறியதோடு தன்னுடைய அந்தப் போராட்ட உணர்வை நியாயப்படுத்திஅந்த மக்களையெல்லாம் தட்டி எழுப்பும்படியாகச் செய்தார்கள்அங்கு வாழ்ந்த  பாமர மக்களுக்குக் கூட அந்த உணர்வை ஊட்டினார்கள்

பேசும்போது அவர்கள் சொன்னார்கள் ‘நாயும் பன்றியும் தெருக்களில் நடக்கிறது என்று சொன்னால் அவைகளெல்லாம் என்ன சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமைகளைப் பெற்றன?’ என்று கேட்டார்கள்எனவே வைக்கத்தப்பன் என்று இருக் கின்ற இந்தக் கடவுள் இந்த மக்கள் அந்தத் தெருவிலே நடந்தால் தீட்டாகி விடும் என்று சொன்னால் அவன் கடவுள் என்ற தகுதிக்கு உரியவனாஎல்லா மக்களும் ஆண்டவன் முன் சமம் என்று சொல்லும்போது எப்படி ஒருவனை மட்டும் கீழாகப் படைத்திருப்பான்இன்னொருவனை மட்டும் எப்படி மேலாகப் படைத்திருப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா என்று கேட்டார்கள்தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு இரண்டு மாதத்தண்டனை தரப்பட்டதுசிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த வுடன் விட்டுவிடவில்லைஅந்தத்தெருக்களில் நடக்கின்ற உரிமை பெறும் வரை மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன் என்று சொல்லிஅவர் மட்டுமல்லஅவருடைய துணைவியார் அன்னை நாகம்மையார் அவருடைய தங்கை கண்ணம்மையார் அவர்களையெல்லாம் அந்த  போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள்இது நடந்தது 1924 இல்.

சேரன்மாதேவி குருகுலத்தில் வர்ணாசிரம தர்மம்

அந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மாதேவியில் .வே.சு அய்யர் ஒரு தேசிய குருகுலத்தை உருவாக்கி அதில் பிள்ளைகளையெல்லாம் ஒன்றாகப்படிக்க வைத்து அவர்களுக்கு தேசிய உணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று கருதிய காலத்தில் அதற்காக ஏராளமானோர் பணம் கொடுத்து குழந்தைகளை தயார் படுத்திய நேரத்தில் பார்ப்பனப் பிள்ளைகள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்பதற் காக அவர்களுக்கு விடுதி உள்ளே உணவுபார்ப்பனரல்லாத பிள்ளை களுக்கு திண்ணையிலே வேறு வகையான உணவு என்று வேற்றுமை காட்டிய நேரத்தில் அதை காலஞ்சென்ற ஓமந்தூர் இராமசாமி (பிற் காலத்தில் தமிழக முதல்வராக இருந்தவர்அவர்கள் சுட்டிக்காட்ட அதை இராஜகோபா லாச்சாரியிடம் பெரியார் அவர்கள் எடுத்துக்கூறிபின்பு .வே..சு அய்யரிடம் இது உண்மையா எனக் கேட்ட போது, ‘ஆமாம் வைதீகர்கள் நிறைந்திருக்கிற காரணத்தினால் அதை செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது’ என்று கூறிபிறகு இந்த எதிர்ப்பை கைவிட்டு விடலாம் என்ற காந்தியார் வரையிலே போய் சமாதானம் செய்ய சென்ற நேரத்தில்கூடடாக்டர் வரதராஜிலு நாயுடு அவர்களோதந்தை பெரியார் அவர்களோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லைமாறாக, ‘இப்படி இளம் உள்ளங்களில் சாதி நச்சைப் புகுத்துவது நியாயம் தானா?’ என்று கேட்டு அந்த குருகுலத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டியது மட்டு மல்லாமல் அதற்குப் பிறகு போராட்டத்தின் காரணமாக அந்த குருகுலம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பார்ப்பனர்கள் யார்

திராவிட நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அத்தனை பேரும் பித்தலாட்டக் காரர்கள்வஞ்சனைக்காரர்கள்தமிழுக்கு தாய்நாட்டுக்கு மொழிக்குத் துரோகிகள் என்பதற்கு அவர்கள் சுதந்திரம் வருமுன்பே இந்தியை ஆதரித்ததும் வரவேற்றதும் இந்த நாட்டில் பள்ளிகள் வைத்துப் பரப்பியதும் அரசியலின் மூலம் இந்திக்கு ஆக்கமும் ஆதரிப்பும் செய்த தான காரியங்களின் மூலமே விளங்கவில்லையா? (விடுதலை 24.7. 1952) நீங்கள் ஒன்று நினையுங்கள்பார்ப்பான் எவ்வளவு அக்கிரமம் பண்ணி யும் கொடுமை செய்தும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றே வருகின்றான்எதனால் அப்படி வெற்றி பெறுகின்றான்அவர்கள் எல்லோரும் ஒரே மனதாக ஒற்றுமையாக இருந்து வருகின்றார்கள்அவர்களோடு போராடுவது மிகவும் கடினந்தான்திராவிடர்கழகம் தவிர பார்ப்பான் ஒழியணும் என்று எவனும் சொல்லமாட்டேன் என்கிறானேபார்ப்பான் ஒழியணும் என்று சொல்ல நடுங்குகின்றார்களே[ ‘பார்ப்பானேநாட்டை விட்டு போ’ என்றால் அவன் ‘எங்கே போவது?’ என்று கேட்கிறான்அதற்கு நீ எங்கேயாவது போ[’ என்று சொல்கிறோம் நாம்நான் இங்கேயிருந்து எங்கே போவது என்றால் ‘நீ எதுக்கப்பா இங்கே இருக்க வேண்டும்என்று கேட்கிறேன்இந்த நாட்டில் கக்கூசு எடுக்கிற வன் இருக்கணும்சலவை செய்பவன் இருக்கணும்ஆனால் நீ எதுக்கப்பா இருக்கணும்இதை 2000 ஆண்டுகளாகப் பார்த்து விட்டுதானே சொல்கிறோம். (விடுதலை 15.5.1954)

இராஜகோபாலாச்சாரி படித்தது எப்படி? - பெரியார்

நேற்றுவரை மந்திரியாக இருந்தாரே இராஜகோபாலாச்சாரியார் அவர் என்ன பிரபுவின் மகனாஅவர்தானே சொல்லி இருக்கிறார்,‘ஸ்காலர்சிப்பில்’ படித்ததாகஅவருடைய பாட்டன் புரோகிதர்இவர் முதல் மந்திரிஇந்த நாட்டை ஆளுகின்றாரே நேருஒரு காஸ்மீரத்து பார்ப்பனர்.. இங்கே எப்படிக் கல்யாணம்கருமாதி செய்கின்ற பார்ப்பனரைப் புரோகிதர் என்று சொல்லுகிறோமோ அப்படி நேரு குடும்பம் அங்கே ‘பண்டா’ என்று சொல்லுகிற புரோகிதக் குடும்பம்அவருடைய பாட்டன் அப்படிப்பட்ட பண்டா என்று சொல்லும் புரோகிதர்அவருடைய அப்பன் வக்கீல்இவர் பெரிய தலைவர்/காங்கிரஸ் ராஷடிரபதி/இந்நாட்டுக்கே முதல் மந்திரிஇராஜ கோபாலாச்சாரியின் பாட்டன் ஒரு சாமியார்அவரே சொல்லி யிருக்கிறார்எனக்கு மைசூரில் ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள்அதில் தான் நான் படித்தேன் என்று. (விடுதலை 6.5.1954) நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து சிலர் கெட்டு உழல வேண்டும் என்பதுதான் பார்ப்பனர் தர்மம்ஆதலால் எந்த நிலையிலும் பார்ப்பனர் நம் யாருக்குமே நல்வழி காட்டமாட்டார்கள்? (விடுதலை 4.31967)

பார்ப்பனர்களே வெளியேறுங்கள் கூறுகிறார் காந்தியார்

தோழர் காந்தியார் எப்பேர்பட்டவர்எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்அந்தக் காந்தியார் இல்லாவிட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப்பார் கள்இவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி ஆளாக்கி அதிகாரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத்தாரே காந்தியார்/அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதிராகச் சொன்னார்அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய், ‘எங்கள் பிள்ளை களுக்குப் படிக்க இடம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்’ என்பதாகப் புகார் செய்த போதுகாந்தியார், ‘நீங்களெல்லாம் பிராமணர்கள்கடவுளைத் தொழப்போங்கள்அவர்கள்தான் படிக்கட்டுமே’ என்று  சொன்னார் என்ற உடனேயே ஒரு பார்ப்பான்பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மைதேடித்தந்த உயர்வையெல்லாம்கூட மறந்து சுட்டுத் தள்ளி விட்டானேமற்றொரு பார்ப்பனர் நாம் படிக்கவே கூடாது என்று சட்டம்போட்டு சூழ்ச்சி செய்துவிட்டாரேஇந்த அளவுக்குப் பார்ப்பனர் களிடம் இன உணர்ச்சியும் வெறியும் இருக்கின்றன. (விடுதலை 18.11.1953)

திருக்குறள் பற்றி தந்தை பெரியார்

அவ்வளவு தூரம் ஆரியக் கருத்துக்களை எதிர்த்து அதற்காக இன்னல்கள் பல பட்டிருக்கும் சமணர்களும் திருக்குறளை ஆதரிக்கிறார்கள்சைவ சமயத்தவரும் வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல் என்று ஒத்துக் கொள்ளுகின்றனர்இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் களும் கிறித்துவ மதத்தின் கீழிருப்பவர்களும் திருக்குறளைப் போற்று கிறார்கள்இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல் மக்களின் வாழ்க்கைக்கு மக்கள் தங்களுடைய வாழ்க்கை யில் கையாள வேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறதுபாட்டுகளிலும் ஒரு இடத்திலாவது இந்து என்ற சொல் காணப் படவில்லைஅது மட்டுமல்லாமல் குறளாசிரியர் கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை.

குறளில் நீங்கள் அறம்பொருள்இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர வீடுமோட்சம் என்பது பற்றி அவர் கூறியிருப்ப தாக இல்லை. (விடுதலை, 30.5.1950)

(இதழ்க் குறிப்பு:  ஏடு /7)


No comments: