சட்டத்தைக் கொளுத்துங்கள்-1
நான் மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும்; மற்றும், பிரிட்டி·காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலுங் கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே!
நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை; பயந்து விட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்துவிட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இ·டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற-பெயர் கொடுங்கள். (விடுதலை 11-11-1957)
சட்டத்தைக் கொளுத்துங்கள்-2
சாம்பலை மந்திரிக்கு அணுப்புங்கள்!
சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம், அரசாங்கத்தினர் ‘சாதியைக் காப்பாற்றித் தான் தீர வேண்டும்’ என நமக்குச் சவால் விட்டு இருக்கின்றனர். இந்தச் சவாலுக்கு, நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?
சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அணுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன் மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்! (விடுதலை-15.11.1957)
சிறை செல்லுமுன் தந்தை பெரியார் வேண்டுகோள்:
நவம்பர் 25 ஆம் தேதி நடக்கும் விசாரணையில் எனது ‘மூச்சலிக்கா பாண்டு’ கேன்சல் ஆகி என்னைச் சிறைப்படுத்தும்படியான நிலைமை பெரும்பாலும் ஏற்படலாம். இந்தச் சமயத்தில் பொதுமக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியது அவசியமாகும்.
நான் சிறைப்படுத்தப்பட்டு விட்டேன் என்பதாலேயோ, அல்லது பொதுமக்கள் கொளுத்துவார்கள் என்கிற எண்ணத்தால் அதைத் தடுக்க அரசாங்கத்தார் ஏராளமான மக்களைக் கைது செய்து விட்டார்கள் என்ற எண்ணத்தாலேயோ புதிய சட்டத்தின் படி நீண்டநாள் தண்டிக்கப்பட நேரிடும் என்ற அச்சத்தினாலேயோ-யாரும் அதாவது கொளுத்த வேண்டியது அவசியந்தான் என்று கருதுகிறவர்கள், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அரசியல் சட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிற, நமக்குக் கேடான நாலைந்து பிரிவுகளைக் கொண்ட பிரசுரத் தொகுப்பைக் கொளுத்தியே தீர வேண்டியது முக்கியமான காரியம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை விட முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது. என்னை, ‘ரிமாண்டு’ செய்ததனாலேயோ மற்றும் இப்பொழுது ‘செஷன்சில்’ நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக் குள்ளாக்கி விடுவதாலேயோ பொது மக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச் செய்தியை வரவேற்க வேண்டும். எந்த விதமான கலவரமோ, பலாத்காரமோ-பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ துன்பம், வேதனை உண்டாக்கக் கூடியதான எப்படிப்பட்ட பலாத்காரமான செய்கையையும்; ந·டம் உண்டாக்கக் கூடிய தான செய்கையையும்-அதாவது ஆயுதப் பிரயோகம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டுமென்றும் சொன்னதும், சொல்லி வருவதும் உண்மை. ஆனால் அவை இப்பொழுது இல்லை. அதற்கான காலம் இன்ணும் வரவில்லை-வரக் கூடாதென்றே ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதற்குக் காலம் எப்போது வரும் என்றால், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்ணும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளில் ஒன்றும் பயனில்லை, வெற்றிக்கு அவை பயன்படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நாம் அவற்றில் இறங்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஆனால், இந்த என்ணுடைய தாழ்மையான வேண்டுகோளை ஒவ்வொருவரும் கருத்தில் வைக்க வேண்டும்.
இப்பொழுது எனக்கு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தண்டனையானது நம்முடைய அடுத்த திட்டங்களுக்கு வலுவான ஆதரவுகளையும், உணர்ச்சியையும் ஊக்கத்தையும்-துணிச்சலோடும் வேகத்தோடும் ஈடுபடுத்துவதற்கு வலுமையான சாதனமாக அமையும். பொதுமக்கள் மீது எனக்குப் பலமான ஆதிக்கம் இருக்கிறது என்று அரசாங்கமும், இந்தியாவிலுள்ள மற்ற மக்களும் எண்ணியிருக்கிற ஒரு எண்ணத்திற்குப் பாதகம் ஏற்படாமல் பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென்றால்- நான் மேலே வேண்டியிருக்கிற படி எந்த விதமான தண்டனைக்குப் (ஏற்பட்டால்) பிறகு பொது மக்களிடையில் மேற்சொன்ன படி - எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளிடத்தில், போலிஸ்காரர்களிடத்தில் மரியாதையாகவும் கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். (விடுதலை-25.11.1957)
No comments:
Post a Comment