இன்றைய நிலையில் தமிழர்கள் (திராவிடர்கள்) ஒரு அளவுக்கு முன்னேற்றப் பாதையில் செல்லுகிறார்கள். அவர்கள் அடைய உரிமையுள்ள இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறமுடியாது. சமுதாயத் துறையில் ஒரு அளவுக்குப் பார்ப்பனரைப் பகி·கரித்திருக்கிறார்கள். என்றாலும் அந்த அளவு பகுதிக்கும் குறைவான அளவு என்றுதான் சொல்ல வேண்டும். கல்வித் துறையில் பார்ப்பனர்களுக்கு ஏகபோகம் இல்லையென்றுதான் சொல்லலாமே தவிர அவர்கள் தங்கள் விகிதாசார அளவுக்கு 100-க்கு 500 பங்கு முதல் 1000 பங்கு வரை அதிகமாக அணுபவித்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த விகிதம் ஒழிந்து அவர்கள் தங்களுக்குள்ள உரிமையுடன் இருக்க வேண்டுமானால் டில்லி ஆதிக்கம் ஒழிந்தே ஆக வேண்டும். டில்லி ஆதிக்கம் ஒழியும் வரை திராவிடர்கள் 4-ஆம் சாதி- இழிசாதி என்கிற இழிவும் நீங்காது என்பது உறுதி. அரசியல் தலைமைத் துறை, அமைச்சர்துறை ஆகியவற்றில் அவர்களுக்கு இடமில்லாமல் ஆகிவிட்டது என்றாலும் அவர்கள் அவற்றில் இல்லாமலே அவர்களுக்கு வேண்டிய காரியங்களும் நாம் வளர்ச்சி அடைய முடியாமல் இருக்கும் படியான காரியங்களும் தாராளமாய் அவர்களால் செய்ய முடிந்துதான் வருகிறது.
இவற்றிற்கெல்லாம் அவர்களுக்கு ஆதாரமாக `சஞ்சீவி’ மருந்தாக இருந்துவரும் சாதனம் பத்திரிகை உலகம் 100-க்கு 100 அவர்களுடையதாகவும் அவர்களுடைய அடிமைகளுடையதாகவும் இருந்து வருவதேதான். இந்தத் துறையில் தமிழர் சிறிது கூட சிந்தனை செய்ததாகவே காணமுடியவில்லை. அந்த ஒரு காரயத்தில் நாம் முயற்சி எடுத்து நமது மானாபிமானத்தைக் காட்டாத வரையில் வேறு எந்தக் காரியத்தில் நாம் வெற்றிபெற்ற போதிலும் அதன் பயனை நாம் அணுபவிக்கவே முடியாது என்பது மாத்திரமல்லாமல் நம்முடைய நாட்டிலே, அதிலும் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட
மேற்பட்டவர்களாக இருக்கும் நமது நாட்டிலே 100-க்கு 3 பேராய் இருப்பவரும் நமது பிறவி எதிரியும் நமது கேட்டிற்கும் அழிவிற்கும் இழிவிற்குமாகவே உழைத்து வரும் வெகு வெகு சிறு சாதியாரான இனத்தாரிடம் நமது நாட்டுப் பத்திரிகைகளும் பத்திரிகைகளின் ஆதிக்கமும் இருந்து வருவது என்றால், இது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு இழிவான நிலை என்பதும் யோசிக்கத் தக்கதாகும்- என்பதோடு இது (நம்) போன்ற இழிவான, மானங்கெட்ட சமுதாயம் போன்ற வேறு ஒரு சமுதாயம் நானறிந்தவரை உலகத்தில் வேறு எங்குமே இருப்பதாகத் தெரியவே இல்லை. அது மாத்திரமா?நமது பத்திரிகை என்பவைகளை நமது மக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கிப் படிக்கிறார்கள் என்றால் நமது எதிரிகளான பார்ப்பனருடையவும், அவர்கள் அடிமைகளுடையவும், அவர்கள் ஆதரவால்தான்-அவர்களுக்க நல்ல பிள்ளையாய் இருந்தால்தான் வாழமுடியும் என்று கருதுபவர்களுடையவுமான பத்திரிகைகளை லட்சக் (1,00,000) கணக்கில் நமது மக்கள் வாங்கிப் படித்து ஈனமக்களாக ஆகிவருகிறார்கள்.
சாதாரணமாகச் சொல்லுவோமானால் தமிழர் நல்வாழ்வுக்காகவே, மான வாழ்வுக் காகவே, வளர்ச்சிக்காகவேயென்று 45 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுயமரியாதை (சமூக முன்னேற்ற) இயக்கம் என்பது ஆரம்பிக்கப்பட்டு, மூலை முடுக்குகளெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தும், நம் எதிரிகளை `பிராமணாள்’ `சாமி’ என்றழைப்பது 1000-க்கு பத்து வீதமான மக்களால் கூட நிறுத்தப்படவில்லை என்பதோடு, பத்திரிகை படிப்பவர்களில் 1000-க்கு ஒருவரால் கூட நம் எதிரிகளது பத்திரிகைகளை வாங்கிப் படிப்பது நிறுத்தப்படவில்லையென்றால் நம் மக்கள் தன்மைக்கு எந்தக் குணத்தை உதாரணமாகக் கூறுவது என்பது நமக்குப் புரியவில்லை.
அது மாத்திரமா? நமது கேட்டிற்கும் இழிவிற்கும் வளர்ச்சித் தடைக்கும் என்பதற்காகவே நடத்தப்படும் நம் எதிரிகளுடைய பத்திரிகைகளால் எதிரிகள் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று, இரண்டு, மூன்று - ஏன் அய்ந்து இலட்ச ரூபாய்கள் வரை இலாப வருவாய் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
ஆகவே, நமது இழி நிலையானது நமது எதிரிகள்-மேல் சாதியார், பிராமணாள், சாமி என்று நம்மாலேயே அழைப்பவர்களாகவும், நமது செல்வத்தையே ஆண்டு ஒன்றுக்கு ஒன்று முதல் அய்ந்து இலட்ச ரூபாய் வரை இலாப வருவாய் உள்ளவர்களாக இருப்பதற்கு நாம் இடம் கொடுத்து வருகிறோம். நாம் ஆளாக இருந்து வருகிறோம் என்றால் மறுபடியும் நமது நிலை எவ்வளவு இழிவானது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். எனவே நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாக இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகி·கரிக்கும்படி செய்யும்படியான ஒரு இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன்; ஆத்திரப்படுகிறேன்.
இதற்காக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்யச் செய்வது கூடுமானவரை ஒவ்வொரு கிராமங்களிலும் `நம் எதிரிகளின் பத்திரிகை பகி·கார சங்கம்’ என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும் இந்தக் காரியத்திற்காக ஒரு இலட்ச ரூபாய் நிதி திரட்டி, பல தொண்டர்களை முழு நேர வேலைக்காரர்களாக ஏற்படுத்தி, நாடெல்லாம் தொண்டாற்றச் செய்யவும் செய்ய வேண்டும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.
நன்கொடையாளர்கள் பெயர்கள் தெரிவிக்கப்படமாட்டாது. கண்டிப்பாய் ஒவ்வொருவரும் இதற்கு நன்கொடை அளித்தாக வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும் உதவ வேண்டும். அவர்களுக்கு இதனால் ஏராளமான பலணுண்டு. மற்ற தலைவர்களும் வியாபாரிகளும் அவசியம் உதவ வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன். பொது மக்களும் இதற்கு நல்லவண்ணம் ஆதரவளிக்க வேண்டும்.
இந்தப் பணியானது கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விட, கோவில்களை இடிக்கும் பணியை விட முக்கியமானதும் பயன் அளிக்கத் தக்கதுமான பணி என்பது எனது உறுதியான எண்ணமாகும். எனவே மளமளவென்று நன்கொடை வரவேண்டுமென்றும்-என்றும் உறுதியும் தகுதியும் உள்ளவர்கள் முன்வரவேண்டுமென்றும் வேண்டிக்கொள்வதோடு, நன்கொடை அளிப்பவர்களை நண்பர் வீரமணி அவர்களிடம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன். விஷயம் மிக முக்கியமானதும் செய்து தரப்படவேண்டியதுமான இன்றியமையாத பணி என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்வதால் எனது வாழ்நாளில் ஒருபயணுள்ள காரியத்தைச் செய்ததாக நான் கருதிக் கொண்டு முடிவடைவேன்.
(92 வது பிறந்த நாள் விழா மலர் - 17.9.1970)
No comments:
Post a Comment