தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு வழி
சுமார் மூன்று கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக தமிழ் நாடு என்ற பெயரில்லை.
ராஜ்ய சீரமைப்புக் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் நான் பதறிப்போய், பெயரிடுவது பற்றி 12-10-1955 இல் விடுதலையில் அறிக்கை வெளியிட்டேன். (இது பின்னால் வெளியிடப்படும்)
மக்களிடையே இக் கருத்துக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டும், ஆட்சியாளர்கள் இதை நிறைவேற்றத் தவறியதையும் இந்த நாட்டு எதிர்க் கட்சிகள் என்பவைகள்- அதாவது தேர்தல் ஜனநாயகப் படுத்திக் கொண்டு, இன்றும், ‘ஒட்டுப் பிழைப்பு’ க்கு ப் பயன்படுத்தத் தங்களுக்குக் கிடைத்த நல்ல கருவி- சாதனம் என்பதாகக் கருதிக் கொண்டு பிரச்சாரம் புரிந்து வருகின்றனர். ‘தமிழ்நாடு’ என்று பெயர் வர வேண்டும் என்ற ஆசையைவிட அப்படி மாறிவிடக் கூடாது; மாறிவிட்டால் அந்த ஆயுதமும் பிடுங்கப்பட்டு விடும் என்ற பயத்தால் அவதிப்படுகின்றனர். அந்த எண்ணமே அவர்களுக்கு அதிகம். மனதில் நினைப்பதை அப்படியே காட்டுவதற்கு, உடல் உ·ணத்தைக் காட்ட தெர்மா மீட்டர் கொண்டு அறிவது போல், கருவி ஒன்று இருக்குமானால், அதை வைத்து நான் கூறிடும் இந்த உண்மையை அறியலாம்.
அதிலும் இங்குள்ள ‘காமராஜர் அரசாங்க எதிர்ப்புக் கட்சி’களைப் பொறுத்து இது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
காமராஜர் அரசாங்கம் இதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதைவிட காமராஜரோ அல்லது அவரது சம மந்திரிகளோ தாங்களே பார்த்து உடனே உத்தரவு போட்டு மாற்றும் சக்தி சட்டப்படி, அதாவது அரசியலமைப்புப்படி உண்டா? என்று கேட்பதுதான் நாணயமான காரியமாகும். ஆனால், அரசியல்தான் ‘அயோக்கியர்களுடைய கடைசிப் புகலிடம்’ ஆயிற்றே! அதிலும் இந்த அரசியல்வாதிகளிடம் நேர்மை நாணயத்தை எதிர்பார்ப்பது நமது தவறல்லவா?
இதோ இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது: ஷரத்து 3
பார்லிமெண்டு சட்டத்தினால், (அ) எந்த இராஜ்யத்திலிருந்தாவது ஒரு பிரதேசத்தைப் பிரித்தேணும் அல்லது இரண்டோ அதற்கு மேற்பட்ட இராஜ்யங்களையோ இணைத்தேணும் அல்லது எப்பிரதேசத்தையாவது ஒரு இராஜ்யத்தின் பாகத்தோடு இணைத்தேணும் புதிய இராஜ்யம் ஒன்றை அமைக்கலாம்.
ஆ) எந்த இராஜ்யத்தின் பரப்பையும் பெருக்கலாம்
இ) எந்த இராஜ்யத்தின் பரப்பையும் குறைக்கலாம்
ஈ) எந்த இராஜ்யத்தின் எல்லைகளையும் மாற்றலாம்
உ) எந்த இராஜ்யத்தின் பெயரையும் மாற்றலாம்.
எனிணும், இவற்றிற்கான எந்த மசோதாவும் இரா·டிரபதியின் சிபாரிசின் பேரில் அன்றியும் மசோதாவில் அடங்கிய பிரேரணை முதலாவது ‘அ’ பாகம் அல்லது ‘ஆ’ பாகத்தில் குறிப்பிட்ட எந்த இராஜ்யம் அல்லது இராஜ்யங்களின் எல்லைகளையாவது அத்தகைய இராஜ்யம் அல்லது இராஜ்யங்களின் பெயர் அல்லது பெயர்களையாவது பொறுத்திருக்குமாயின் அம் மசோதாவைக் கொண்டு வருவதற்காக பிரேரணையைப் பற்றியும் அதன் ஷரத்துக்களைப்பற்றியும் அந்த இராஜ்யம் அல்லது இராஜ்யங்களின் ஒவ்வொன்றின் சட்ட மன்றத்திணுடைய கருத்துக்களை இரா·டிரபதி கேட்டறிந்துகொண்டால் அன்றியும் பார்லிமெண்ட் சபை எதிலும் கொண்டுவரப்படலாகாது.
எனவே, பெயர் மாற்ற அதிகாரமும், சக்தியும் டெல்லி ஆட்சிக்கே உண்டு; அதிலும் இந்நாட்டு அரசாங்க சட்டசபைகள் கருத்துத் தெரிவித்தாலும், ‘இரா·டிரபதியோ’ அல்லது பார்லிமெண்டு சபைகளோ அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற நியதி அரசியலைப்பில் இல்லையே!
ஆகவே, இதற்காகத் தமிழ்நாடு அரசாங்கத்தோடு முட்டிக் கொள்ளுவதைவிட இந்த அநீதிக்குக் காரணமான ஆதிபத்திய டெல்லி ஆட்சியின் ஆதிக்கத்தலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் அறிவுடமை!
எனவே, தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயரில்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்ட இளை…ர்களே!தோழர்களே! புலவர்களே! பெருமக்களே! எழுத்தாளர்களே! பேச்சாளர்களே!
நாடு பிரிவினையைத் தவிர வேறு வழி உண்டா? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். நேர்மை விடை காணூங்கள். உண்மையில் நாட்டின் பெயர் மாற்றத்தில் யாருக்காவது நாணயமான கவலை இருக்குமானால் ஜுன் 5 இல் இந்திய யூனியன் படத்தை ஒரு கையிலும், தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்! தீ மூட்டுங்கள்! தீ மூட்டுங்கள்!
ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கம், பயம் இருக்குமானால் அவரவர்கள் வீட்டின் முன் வாசலில் கொளுத்திவிட்டுப் பெயர்களைக் கொடுங்கள். (pவிடுதலை–- 18-5-1960)
No comments:
Post a Comment