சிறை புகுமுன் அறிக்கை
நான் இன்று தண்டனை அடையப்போவது உறுதி. ஏன் என்றால், இந்தியப் பிரதமர் என்ணும் பதவியிலுள்ள பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிக்கே வந்து எனது வழக்கு நடைபெறும் நியாயஸ்தல நீதிபதியாக செஷன்ஸ் ஜட்ஜ் அவர்கள் முன்னிலையிலிருந்து, ‘பார்ப்பனர்களைக் கொல்லு என்று சொல்லியிருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும்; அது மாபெரும் தேசத் துரோகக் குற்றமாகப் பாவிக்கப்பட வேண்டும். அந்தக் கருத்துடையவன் ஜெயிலில் இருக்க வேண்டியவன்’ என்பதாகச் சொல்லித் தூண்டி விடும்படியான அளவுக்குப் பேசிவிட்டுப் போயிருக்கும் போது, எந்த நீதிபதிதான் என்னைத் தண்டிக்காமல் விட்டுவிட முடியும்?
அது போலவே, சட்டம் எரித்ததாகக் குற்றம்சாட்டி ஜெயிலில் பிடித்து அடைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் 4000 குற்றவாளிகள் பற்றியும், ‘ அதன் குற்றம் தேசத் துரோகக் குற்றமாகும்; அவர்கள் கடினமாகத் தண்டிக்கப்படவேண்டியவர்கள்; ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள்’ என்பதாகவும் விசாரணை செய்து தீர்ப்புக் கூற வேண்டிய மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையிலும் சொல்லிவிட்டுப் போயிருக்கும் போது எந்த ஜட்ஜ்தான்- எந்த மாஜிஸ்திரேட்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டியாமல்-கடினமாகத் தண்டியாமல் விட முடியும்?
உதாரணமாக, பண்டித நேரு அவர்கள் திருச்சிக்கும், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் வந்து இப்படியாகப் பேசுவதற்குமுன் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் போட்ட வழக்குகள்- இவர் வந்து, இந்தப்படிப் பேசியபின் 9 மாதம், ஒரு வருடம், ஒன்றரை வருடம், 2 வருடம் வீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால். என்னை, ‘ஜட்ஜ்’ தண்டிக்கப் போவது உறுதி.
நான் தண்டிக்கப்பட்டால் பொது மக்களும், குறிப்பாகக் கழகத் தோழர்களும், ‘இந்தத் தண்டனையும் நம் கழக முயற்சிகளும் வெற்றி பெறும் நாள், பயனளிக்கும் காலம் நெருங்கிவிட்டது- பூக்க, காய்க்க ஆரம்பித்து விட்டது’ என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு கழகப் பணியாற்ற ஒவ்வொருவரும் முன் வர வேண்டும். பங்கு கொள்ள வேண்டும். ஆதரவளிக்க வேண்டும். எப்படியோ இது ஒரு இனப் போராட்டமாகப் பார்ப்பனர்கள் செய்து விட்டார்கள்.
ஆதலால், கழகத் தோழர்களும், மற்றவர்களும் எவ்விதமான பலாத்காரமான, இம்சையான, கொல்லுவதான, நாசகரமான காரியம் எதையும் செய்ய முன்னடையாமல்-மனத்திலும் செய்ய நினைக்காமல்-பிறர் சொல்லும்படியும் நடவாமல், சாந்தத்தோடும் சமாதானத்தோடும் கழகப் பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
மற்றும் இன்று நமது தோழர்கள் 3000 பேருக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டுக் கடினமான தண்டனைக் கொடுமை வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம்- நாம் செய்த எந்த விதமான குற்றங்களுக்காகவும் அல்ல. அதாவது, நாம் நம் உரிமைக்கு விரோதமாய், நீதிக்கு விரோதமாய் எந்தவிதக் காரியமும் செய்துவிடவில்லை. யாருக்கும் எந்த விதமான கேடும் செய்துவிட வில்லை. ஏற்பட்டுவிடவுமில்லை.
இதை இன்றைய நம் மந்திரிமார்களே சொல்லிவிட்டார்கள். சொல்லியும் வருகிறார்கள். அப்படியிருந்தும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான கூப்பாட்டிற்காகவும், மாய்மால நடிப்பிற்காகவும். பார்ப்பனப் பத்திரிகைகளின் கட்டுப்பாடான பொய் விஷமப் பிரச்சாரத்தின் காரணமாகவும் மத்திய அரசாங்க அதிபர்கள்- ஆதிக்கக்காரர்களின் சர்வாதிகாரக் கட்டளைக்காகவும் வேறு மார்க்கமில்லாமல் இணங்கித் தீர வேண்டிய அவசியத்தின் காரணமாக ஏற்பட்டவகைகளாகும்..
ஆதலால், நமது மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கும் சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும், பார்ப்பனரல்லாத போலிஸ் நீதி நிர்வாக அதிகாரிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாகக் கருதி, அவர்களிடம் எவ்வித வெறுப்பும் அதிருப்தியும் கொள்ளாமல் அடங்கி நடப்பதாய் இருக்க வேண்டும்.
இதை நல்ல வாய்ப்பாகக் கொண்டு தங்கள் சுயநலத்திற்காக வெறுப்பு அதிருப்தி ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தக் கோ·டியாருடணும் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதாகவும்; அப்படிப்பட்டவர்களுடைய முயற்சி வெற்றி பெறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியதும் பொது மக்களுடையவும் கழகத் தோழர்களுடையவும் இன்றியமையாததுமான கடமையாகும். கழகத் தோழர்களும் பொது மக்களும் பார்ப்பனர்களின் இப்படிப்பட்ட பாதகமான செயலுக்கு நாம் பரிகாரம் தேடுவது என்பதற்காக நான் மேலே வேண்டிக் கொண்டிருக்கிறபடி எந்தவிதமான பலாத்கார, இம்சையான, நாசமான செயலிலும் ஈடுபடாமல் பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அணுபவிக்கும் வண்ணம்- அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.
அவர்கள் உறவை நீக்க வேண்டும். அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும்
அவர்களுடன் எவ்வித உறவாடலும் சம்பந்தமும் கூடாது;
கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்களை நாம் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது.
அவர்களிடமும் நாம் எந்த வேலைக்கும் இருக்கக் கூடாது.
பார்ப்பன வக்கீல்களைப் பகி·கரிக்க வேண்டும்.
அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக் கூடாது.
அவர்களைக் கண்டிப்பாக - நமது நன்மை தீமை காரியங்களுக்கு அழைக்கவோ, சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும் விட., அவர்கள் பூசை செய்யும்-தொண்டு செய்யும் எந்தக் கோவிலுக்கும், தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது.
அவர்களுக்கு உணவுப்பண்டங்கள் விற்பதோ கொடுப்பதோ கூடாது.
நமது வண்டி வாகனக்காரர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) ஏற்றக் கூடாது இன்ணும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட, பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகி·காரம் செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மற்றும், இந்தப் பார்ப்பனர்களைப் போலவே வட நாட்டார்களையும் கருத வேண்டும்.
பார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்று மேலே எடுத்துக் காட்டிய அவ்வளவையும் - வட நாட்டாருடணும் வைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக நிர்மாணத்திட்டமாக, வட நாட்டான் கடைகளை வியாபாரத் துறைகளில் பகி·கரிக்க ஏற்பாடு செய்ய - கழகக் கமிட்டி கூட்டி யோசித்து நடத்த வேண்டும். வட நாட்டான் கடைகளில் நம்மவர் வியாபாரம் செய்யக் கூடாது என்று, நம்மவர்களை வட நாட்டார்களின் வியாபார ஸ்தலங்களில் நின்று பணிவாக, சமாதான முறையில், சாந்தமான தன்மையில் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்விதக் காரியங்களை அரசாங்கத்தார் தடுத்தால் அதற்கு மாத்திரம் நாம் இணங்காமல் இருக்கலாம் என்பது எனது கருத்து.
தமிழ்நாடு முழுவதிலும்-கன்னியாகுமரி மாவட்டம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இலட்சம் அங்கத்தினர்களையாவது சேர்க்க வேண்டும்.
அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்கு, நல்லபடி படித்த பெண்களை மாவட்டத்திற்கு இருவர் அல்லது மூவர் வீதம் தேவையான அளவுக்கு அலவன்ஸ் கொடுத்து மெம்பர் சேர்க்கும் பாரங்கள் இலட்சக் கணக்கில் அச்சடித்துக் கொடுத்துச் சேர்க்க வேண்டும்.
அவர்கள் மூலமே இயக்கப் புத்தகங்களையும் இந்த அறிக்கை முதலியவைகளையும் குறைந்த விலைக்கு விற்கச் சொல்ல வேண்டும். இந்தப் பெண்களுக்கு சிவப்புக் கரை போட்ட கறுப்புச் சேலை, சிவப்பு ரவிக்கை சப்ளை செய்ய வேண்டும். திருமதி. நகரம்பட்டி விசாலாட்சி அம்மையார். ஆனைமலை ராமகிருட்டின அம்மாள் முதலியவர்கள் இந்த நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிக்கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது இருவர் ஆன தோழர்களை இந்தக் காரியத்திற்கு ஏற்படுத்தி, அவர்களுக்கும் தேவையான அலவன்ஸ் கொடுத்து இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். முழு நேரத் தொண்டர்களாக வரும் ஆண்களையும் பெண்களையும் ஏற்று, அவர்களுக்கு உணவு , போக்குவரத்துச் செலவு அளித்து மேற்படி வேலை செய்யச் செய்யலாம். ஓவ்வொருவரின் வேலையையும். செய்த அளவையும் அறிந்து வேலைக்குத் தக்க படி உற்சாகப்படுத்தி அலவன்ஸ் கொடுத்து வேலை செய்யச் செய்ய வேண்டும்.
மற்றக் கட்சிக்காரர்களைப் பற்றியோ, கோ·டிகளைப் பற்றியோ, காங்கிரசைப் பற்றியோ, மந்திரிகளைப் பற்றியோ எவ்விதக் குற்றம் குறைகளும் நம் பேச்சாளர்கள் யாரும் பேசக் கூடாது. அவர்கள் நம் மீது சுமத்தும் விஷமப் பிரச்சாரக் குற்றங்களுக்குக் கண்ணியமான முறையில் சமாதானம் சொல்லலாம். நமது இயக்கத்தின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் என்கிற முறையில் உயர் திரு. வேதாசலம் அவர்களும் திருமதி. மணியம்மை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் வெளியிலிருக்கிறார்கள். திரு. வேதாசலம் அவர்கட்கு உடல் நலம் சரியாக இல்லாததால் முழுப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. என்றாலும் தோழர்கள் அவர்களது கட்டளையை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
திருமதி. மணியம்மையார் கூடுமான அளவு தக்க பேச்சாளர்களுடன் நாடு முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வார்கள். ஆங்காங்குள்ள - நமது கழகம் அமைத்தல், மெம்பர் சேர்த்தல், புத்தகம் அறிக்கை விற்றல் ஆகிய காரியங்களைக் கவனிப்பார்கள்.
நான் இராண்டாண்டுக்கும் குறையாமல் தண்டிக்கப் பட்டுச் சிறைவாசம் செய்து, திரும்பி வரும் வாய்ப்பு இருந்து வந்து சேருவேனாயானால் ஒரு இலட்சம் அங்கத்தினர். மூவாயிரம் கழகங்கள், 1500 ரூபாய்க்குக் குறையாத அறிக்கை புத்தக விற்பனைக் கணக்கு காண்பேனேயானால் நாணும் மற்றும் அன்பான தோழர்கள் 4000 பேரும் சிறை சென்றது நல்ல பயனை அளித்தது என்றே கொள்ளுவோம்.
பல நண்பர்கள் நமக்குக் கூடுமான அளவு பொருளுதவி செய்ய முன் வந்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு நண்பர் பெரும் அளவுக்கு, அதாவது 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித்துள்ளார்.
இந்தச் சிறைப் பிடிப்பில் போகமுடியாமல் வெளியிலிருப்பவர்களும்,. சிறைப்பிடித்து நாள் கணக்கில் வைத்திருந்து விடுதலையானவர்களும் மேற்குறித்த எனது வேண்டுகோள் பணிக்கு நல்லஆதரவு தரவும், எங்கள் தண்டனைக் கால அளவுக்கு முழு நேரத் தொண்டு செய்யவும் பலர் தாங்களாகவே முன் வந்திருக்கிறார்கள். தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை-என்றாலும் அவர்களது முழுச் சம்மதத்துடன் பெயர்களை மணியம்மையார். திருவாளர்கள் வேதாசலனார், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் யோசித்து வெளியிடுவார்கள். அவர்களைக் கழகத் தோழர்கள். அபிமானிகள் ஆதரவாளர்கள் நல்லபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடைசியாக பலாத்காரம்,. இம்சை, நாசவேலை, கலவரம் சாந்த சமாதான பங்கம். தனிப்பட்டவர்களிடம் நேரிடையான வாக்குவாதம், கலவரம் ஆகிய காரியம் எதுவும் சிறிதும் தலைகாட்ட இடமில்லாமல் எனது தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அவர்கள் எனக்கு எதிரிகளும் கழகத்திற்குக் கேடு செய்பவர்களுமாவார்கள்.
என்பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும் என்ணுடையவும் தாய்நாடான தமிழ்நாட்டைப் பனியா-பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழி செய்வதுமான தனித்தமிழ்நாடு பெறுவதும் என் உயிரிணும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள். ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்லுகிறேன். சென்று வருகிறேன்.
வணக்கம்! வணக்கம்! வணக்கம் (விடுதலை 15-12-1957)
No comments:
Post a Comment