Sunday, April 26, 2026

நமது இழிநிலை - பெரியார்

 நமது இழிநிலை

தமிழ் மக்கள் என்று சொல்ல வேண்டுமானால் நாம் உலகத்திலில்லாத காட்டு  மிராண்டித்தன்மையில் வாழ்கிறோம். உலகத்திலுள்ள எந்தச் சமூகத்திலும், பார்ப்பாணும் பறையணும் சூத்திரணும் இல்லை. இப்படிப்பட்ட நிலை, நீக்ரோக்களிடம் கூட இல்லை. மோசமான காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களெல்லாம் இன்று பெரிய விஞ்…hனிகளாக இருக்கிறார்கள்.

நாம் எப்படி இருந்தோம் என்பதற்குச் சரித்திரமும் இலக்கியமும் இல்லை; நிசமாக நாம் எப்படி இருந்தோம் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு உண்டு. அது என்ன வாய்ப்பு? அது தான்  நம் எதிரிகளால் சொல்லப்பட்டிருக்கிற சங்கதிகள். நம்மை ஒழிக்க வேண்டுமென்று இருப்பவன்-நம்மைக் குறை கூற வேண்டும் என்றே எழுதியவைகளில் இருந்தே நாம் காண்கின்ற அளவில், நாம் நல்ல நிலையில் இருந்திருக்கிறோம் என்பதைக் காணலாம்.

ஆணூம் ஆணூம் சேர்ந்து பிள்ளை பெற்றார்கள்; மீணுக்குப் பிறந்தான்; சாமியும் சாமியும் கலியாணம் செய்து கொண்டன; என்றெல்லாம்-காட்டுமிராண்டித்தனமாக இருந்தவன், அந்தக் காட்டுமிராண்டி உணர்ச்சியிலிருந்து எழுதியவன்- இராவணனைப் படு அயோக்கியன் என்று எழுத வேண்டும் என்று கருதி எழுதியுங்கூட, என்ன எழுதியிருக்கிறான்?‘அவன் மதிற்சுவர் அப்படி இருந்தது; ஆட்சி இப்படி இருந்தது; இப்படிப் படித்தவன்’ என்று புகழ்ந்துதான் எழுதியிருக்கிறான்! காலத்தைப் பற்றிச் சந்தேகம் வந்தாலும், கற்பனையாக எழுதியிருந்தாலும், அதில் பகுதி இருந்தாலும்-நாம் அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளாய் வாழவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

அப்பயிருந்த நம்மை, இன்று சூத்திரன், பஞ்சமன் என்கிறானே! இன்று அய்க்கோர்ட் தீர்ப்பில், ‘இவன் சூத்திரன்; அவன் பிராமணன்; இவன் சாதியில்லாத இந்து’ என்று எழுதுகிறானே! இன்ணும் எத்தனை காரியங்களில் இழிவாக நடத்தப்படுகிறோம்! இதற்கெல்லாம் சமாதானமாக ‘பார்ப்பான் செய்து விட்டான்’ என்று கூறிவிட்டால் போதுமா? அவர்கள் மூன்றுபேர்தான்; நாம் மூன்று பேருக்கு முப்பது மடங்கு பேர் இருக்கிறோமே! மான உணர்ச்சி இருந்தால் அவன் புகுத்தினான் என்று சொல்ல வாய்ப்பிருக்குமா?

இராமாயணத்தில், பாகவதத்தில் என்ன இருக்கிறது? அவன் காட்டுமிராண்டியாக இருந்தாலும் நாம் மேலான வாழ்க்கை உடையவர்களாக இருந்தபோதிலும் நம்மை ஒழிப்பதானால்-இராவணனை ஒழிக்க அவன் தம்பியையும்; இரணியனை ஒழிக்க அவன் மகனையும் சரி செய்து கொண்டது போல் நம்மை ஒழிக்க நம்மில் சில பைத்தியக் காரனையே பிடித்துக் கொள் என்ற தத்துவந்தானே அந்தக் கதைகளிலிருந்;து தெரியவருகிறது?

புத்தனை ஒழிக்க என்ன செய்தான்? அவனா பிரச்சாரம் செய்து, அதற்கு மறுப்புச் சொல்லியா ஒழித்தான்? நமது ஆட்களைப் பிடித்து, நீ ஆழ்வார், நீ நாயன்மார் என்று சொல்லித் தூக்கிவிட்டுத்தானே புத்தனை ஒழித்திருக்கிறான்? இன்றுதான் என்ன? பார்ப்பான் இன்று ஆள்கிறான். அவன் வைத்ததுதான் சட்டம் என்கிறான்; அவனேயா ஆள்கிறான்? சட்டசபையில் அவனேயா உட்கார்ந்திருக்கிறான்? இது இன்று மாத்திரமல்ல. இராவணன் காலந்தொட்டு இப்படியே இருக்கிறதென்றால்-இந்நிலை மாறாதிருந்தால் என்னாவது? இந்தக் கொள்ளைக்கார ஆட்சி ஒழிந்து நமது நிலை மாற வேண்டாமா? நாணும் இருபது வருடமாகச் சொல்லுகிறேன்; பார்ப்பானை ‘பிராமணாள்’ என்று சொல்லாதே’; அவனைப் பிராமணன் என்று கூறினால், நீ யார்? ஓருத்தி, உன் தெருவில் தன் வீட்டில் ‘இது பதிவிரதை வீடு’ என்று ‘போர்டு’ போட்டுக் கொண்டால்-மற்றவர்கள் வீடு என்ன என்று அர்த்தம்? என்று கத்திக் கத்தி என் தொண்டையில் இரத்தம் வரச் சொல்கிறேன். இந்தச் சின்னக் காரியம் செய்யவும் எவன் கேட்கிறான்?

என்னைப் பார்க்கும் போது, ‘ஆகா இந்தப் பார்ப்பானை ஒழிக்க நீ தான் சரியான ஆள்’ என்கிறான். அந்தப் பக்கம் போய், ‘ பிராமணாள்’ என்கிறான். எந்தக் கேவலமான பார்ப்பான் தன் இனத்தைக் காட்டிக் கொடுக்க முன் வருகிறான்? மாணிக்க நாயக்கர்தான் சொன்னார், ‘நாய் நன்றியுள்ள பிராணி. ஆனால், யாருக்கு நன்றியாக இருக்கும்? எலும்பு போடுகிறவணுக்குத்தான். ஆனால், தன் இனத்தைக் கண்டால் முன்பின் விரோதமே வேண்டியதில்லை. கண்டாலே ‘உர்’ என்ணும். அது போல்தான் தமிழன் தன் இனத்துரோகியாக இருந்து பார்ப்பாணுக்கு நல்ல பிள்ளையாக நடக்க விரும்புகிறான்’ என்று.

ஒரு நண்பர் சொன்னார் வேடிக்கையாக! ‘நீ இப்படிக் கத்துவதால் பயனில்லை. பேசாமல் வெளிநாட்டுக் போய் கொஞ்சம் துலுக்கன் இரத்தமும், வெள்ளைக்காரன் இரத்தமும் வாங்கிக் கொண்டு வா! தமிழன் உடம்பிலுள்ள தமிழ் இரத்தத்தை ஒரு சொட்டு விடாமல் எடுத்துவிட்டுப் pபுது இரத்தம் பாய்ச்சினால்தான் பயன்படும்” என்றார். 2000 ஆண்டுகளாக இழிநிலையிலிருந்தே பழகிவிட்டதால் இது தோன்றுவதில்லை. ஒரு துலுக்கனிடம் ‘பன்றி’ என்று சொல்லுங்கள் அந்தப் பேச்சே பிடிக்காது ஏன்? அப்படியே பழகியாய் விட்டது.

நமது பிள்ளைகள் பார்ப்பான் உயர்ந்தவன் என்ற பேச்சைக் கேட்டாலே முகத்தைச் சுளிக்க வேண்டும். எதற்குப் பார்ப்பான் வேண்டும்? பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்காது? எனக்காக - நான் சாப்பிட - பலகாரம் செய்து வைத்துக் கொண்டு உன் கடையில் ‘பிராமணாள்’ என்று போர்ட் போட்டுக் கொண்டால் ‘சூத்திரப் பயலே,  வாடா’ என்று தானே கூப்பிடுகிறாய்? அதை எடுத்துவிடு என்றால் இந்த 1958 இல் கூட மாட்டேன் என்கிறானே (விடுதலை -30-8-1958)

No comments: