ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு
தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!
ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு என்பதாக இரண்டாவது நாள் (24..1.54)மாநாடு கூட்டினோம்.
அம்மாநாட்டின் தீர்மானமாக ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியிருக்கிறோம். அதாவது,
‘ஆச்சாரியார் கல்வித் திட்டமாகிய, புதிய 3 மணி நேரக் கல்வித் திட்டத்தை மாற்றி பழையபடியே செய்ய வேண்டும் என்று சென்னை அரசாங்க மந்திரி சபைக்கு 3 மாத வாய்தா கண்டு ஒரு வேண்டுகோள் விடுவது என்றும்; 3 மாத வாக்கில் அரசாங்கம் இதற்குத் தயவுகாட்டிக் கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்காதபட்சத்தில் ஒரு ‘ஸ்பெஷல் மாநாடு’ கூட்டி அதில் தீவிர நேரிடை எதிர்ப்பு நடவடிக்கை எடுத்து மந்திரி சபையைப் பணியச் செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது’என்று.
தோழர்களே! இந்தக் கல்வித் திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்துகிறார்கள்; அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு இந்தக் கல்வித் திட்டமே போதுமானது என்பது விளங்கும்; எவ்வளவு தைரியம்,! இந்தக் காலத்தில் இவ்வளவு தைரியமாக நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்களே!
பண்ணாத கொடுமைகளை, அக்கிரமங்களையெல்லாம் செய்கிறார்கள். இவ்வளவும் போதாதென்று நமது மக்களின் கண்ணையும் சேர்த்துக் குத்துகிறதா? ஏன் இந்த அக்கிரமம்! என்றால் ‘பொறு, பொறு! இந்தத் திட்டத்தை ‘டவுணுக்”கும் கொண்டு வருகிறேன்’ என்று சொல்லுகிறார்கள்! இந்த நாட்டில் உழைக்கிறவர்கள் யார்? நம்மவர்கள்தானே! பாடுபட்டு, க·டப்பட்டு எல்லாவற்றையும் செய்கிறோம். உடலால் பாடுபடுகிற வேலைகள் அத்தனையும் செய்கிறவர்கள் திராவிட மக்கள்தானே! இன்ணும் சர்காருக்கு வரி கொடுப்பது நம் மக்கள்-கிராமத்து மக்கள்தானே கொடுக்கிறார்கள்? இப்படியிருக்கும் போது ‘உழைக்கிற நமது மக்கள் படிக்கக் கூடாது; பாடுபடாத சோம்பேறிக் கூட்டம்தான் படிக்க வேணடும்; உத்தியோகம் பார்க்க வேண்டும்’ என்று திட்டம் கொண்டுவருவது என்றால் என்ன நியாயம்? இதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது? இவர்களைச் சும்மா விட்டு வைத்திருப்பதால்தானே, இப்படியெல்லாம் தைரியமாகச் செய்கிறார்கள்? என்ன அநியாயம்! ‘சாஸ்திரத்திலே, புராணத்திலே, இன்ணும் மத, கடவுள் ஆதாரங்கள் எல்லாவற்றிலும் அக்கிரமமான முறையில் எங்களை அடக்கி ஒழிப்பதையே இலட்சியமாகக் கொண்டு வைத்து இருப்பது போதாமல் இன்று நடப்பிலும் அந்தப் படியே செய்யப்பட்டு வருகிறதே!
எங்கள் நாட்டிலே வந்து உட்கார்ந்து கொண்டு எப்படி எப்படியோ தந்திரமாய் அதிகாரத்தை-ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டு தகுதியில்லாதவணுக்கு எல்லாம், அயோக்கியர்களுக்கெல்லாம், அவர்கள் பார்ப்பன அடிமைகள்-கூலிகள்-பிரச்சாரத்தால் பிழைக்க வேண்டிய கூலிகள் என்பதற்காகவும், அவர்களுக்குப் பதவியும் செல்வாக்கும், பெருமையும் கொடுத்து வருவது என்றால் என்ன நியாயம்? உள்ளபடி யோக்கியன்- திறமைசாலிகள்-நல்லவர்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லையே! நாம் கேட்டால்- ‘நீ சட்ட சபைக்கு வாயேன், வந்து உன் காரியத்தைச் செய்து கொள்ளேன்’ என்றா சொல்வது?
அந்தச் சட்டசபை யோக்கியதைதான் என்ன? சென்ற தடவை நடைபெற்ற தேர்தலிலே காங்கிரசின் கதி என்னவாயிற்று? காங்கிரஸ் தோற்றுப் போய் எதிர்க் கட்சிகள் தானே மெஜாரிட்டியாய் இருந்தன? உண்மையிலேயே யோக்கியமான ஆட்சியாய் இருந்தால், ஜனநாயகத்தை உள்ளபடியே கருதுபவர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மெஜாரிட்டியாய் இருந்த காங்கிரஸ்-எதிர்ப்பாளர்களைக் கூப்பிட்டல்லவா மந்திரிசபை அமைத்திருக்க வேண்டும்? அதை விட்டு, தேர்தலுக்கே நிற்காத ஒருவரை சட்டத்திற்கு-சட்டத் தத்துவத்திற்கு விரோதமாக-கவர்னர் நாமினேஷன் என்பதன் மூலமாகப் பதவிக்குக் கொண்டு வந்து மந்திரிசபை அமைக்கப்பட்டுவிட்டது! இதுதானே சட்டசபையின் யோக்கியதை!
இது மட்டுமா? அந்தச் சட்டசபையில் காரியந்தான் எப்படி நடைபெறுகிறது? இந்தக் கல்வித் திட்டத்தைப் பற்றியே எடுத்துக் கொண்டாலும்-‘இந்தத் திட்டத்தை அமுல் படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று சட்டசபையில் மெஜாரிட்டியான உறுப்பினர்கள் தீர்மானம் செய்யவில்லையா? அந்தத் தீர்மானம் என்னவாயிற்று? வெகு சாதாரணமாக, இது வெறும் சிபாரிசுதானே தவிர, இந்த முடிவை அமுல் நடத்த வேண்டிய அவசியமில்லை’ என்று தள்ளப்பட்டுக் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டதே!
இப்படியிருக்கும் போது, சட்டசபைக்கு நாம் போனால் அவர்களிடம் கூலி பெறுவதல்லாமல் வேறு என்ன செய்ய முடியும்? இன்ணும் சொல்ல ஆசைப்படுகிறேன்-இன்றைக்கு இந்த இராஜ்யத்தின் முதல் மந்திரியாய் இருக்கிறாரே, தோழர் ஆச்சாரியார் அவர்கள், அவர் எந்த ஜனநாயகத்தின் மீது, எந்த ஓட்டின் மீது, எந்தச் சட்டசபைத் தன்மையின் மீது மந்திரியாக இருக்கிறார்? காரணம் வேண்டும்! எந்தத் தொகுதியிலும் நிற்காமல், யாரிடமும் ஓட்டு வாங்காமல் முன் சொன்னது போல் யார் தயவிலோ மந்திரியாக ஆனார்.
அந்தப்படி வந்த முதல் மந்திரி, தமக்கு உதவி மந்திரிகளாகத் தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கிறாரே, அந்த மற்ற மந்திரிகளின் தகுதி-திறமைதான் என்ன? அவர்களுக்குள்ளேயே-இருப்பவர்களுக்குள், இந்த ஆட்கள்தாம் மந்திரி வேலைக்கு அணுபவஸ்தர்களா? அவர்களுக்கு, எந்த அர்த்தத்தில் மந்திரிகளாகப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது? தேர்தலில் நின்று மக்களால் கூடாது என்று துரத்தியடிக்கப்பட்ட ஒருவருக்கு மந்திரிப் பதவி? அது போலவே தேர்தலிலே நின்றறியாத, யாருக்குமே தெரியாத-இன்ணும் சொல்லப்போனால் காங்கிரசிலேயே கூட இல்லாத ஒருவர் திடீரென்று மந்திரியாக ஆக்கப்பட்டிருக்கிறார். இதுவெல்லாம் என்ன நியாயம்? இப்படிப்பட்டவர்கள்தாம் நம்பிக்கையானாவர்கள் என்றால், அதன் அர்த்தம் என்ன? சுத்தமான பார்ப்பன அடிமைகளாகவும் தலையாட்டிப் பொம்மைகளாகவும் இருக்க இவர்கள் ஒப்புக்கொண்டு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்; ஆகவே அப்படிப்பட்டவர்கள்தாம் வேண்டும் என்பதுதானே அர்த்தம். உள்ளபடி யோக்கியமான சர்க்கார் நடப்பாய் இருந்தால், இப்படி மக்களால் துரத்தப்பட்ட-மக்களுக்குத் தெரியாதவர்களுக்கா பதவியும், பெருமையும், ஆதிக்கமும் கொடுக்கும். மக்கள் யாரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, யாரை மக்கள் மதிக்கிறார்களோ அவர்களுக்கல்லவா கொடுக்க வேண்டும்?
இப்படி அக்கிரமம் செய்துகொண்டு. மேலும் செய்கிற மாதிரி-திராவிட மக்கள் படிக்கக் கூடாது என்பதாகக் கல்வித்திட்டம் கொண்டு வருவது என்றால், நமக்கு ஆத்திரம் வராதா? எந்தப் பார்ப்பனர் மீதும் கோபமோ, குரோதமோ இல்லை. ஆனால், அவர்களுடைய நடத்தையும் போக்கும் நம்மைப் பார்ப்பனர்கள் மீது கோபம் கொள்ளுகிற மாதிரி-அதைவிட ‘இந்தப் பார்ப்பனர்களை இங்கே வைத்திருக்கிற வரையில் நம்முடைய இன மக்கள் தலையெடுக்க முடியாது; ஆதலால் இந்தப் பார்ப்பனர்களைக் கண்டிப்பாக இந்த நாட்டை விட்டுத் துரத்தித்தான் ஆக வேண்டும்’ என்று சொல்லத்தக்க மாதிரியான அந்த அளவுக்கு அல்லவா எண்ணம் போகிறது!
உள்ளபடி இந்தப் பார்ப்பனர்களைத் துரத்தாதபடிக்கு இந்த நாட்டில் திராவிடர்கள் எப்படி இன்னமும் சகித்துக் கொண்டிருப்பது? எனவேதான், இந்த முடிவுக்கு அதாவது, ‘பார்ப்பானே வெளியேறு’ என்ற முடிவுக்கு வரவேண்டியதாய்ப் போய்விட்டது. பார்ப்பனர்களின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமுமேதான் இதற்குக் காரணம்! குத்துவெட்டு வேண்டாம்; கலவரம் வேண்டியதில்லை. அந்த நிலை ஏற்படுவதற்கு முன் ‘பார்ப்பனர்களே பேசாமல் வெளியேறி விடுங்கள்’ என்கிறோம். போகவும் முடியாது’ இங்கேயேதான் இருப்போம், இப்படித்தான் செய்வோம், அதை நீங்கள் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்’ என்றால், பலாத்காரமாய்த் துரத்துவதைத் தவிர வேறு வழிதான் என்ன என்று பார்ப்பனர்களே சொல்லட்டுமே!
இந்தக் கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக் கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்படும் அழிவுத் திட்டம் என்பதாகச் சொன்னால் இவர்கள், ‘இல்லை இதுதான் நல்ல திட்டம்’ இதன் மூலம்தான் படிக்க முடியும்; மக்களைக் கெடுப்பதற்காக இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்’ என்று நமக்குச் சொல்லுகிறார்கள். இது எந்த விதத்தில் பொருத்தமானது, யோக்கியமானது என்று கேட்கிறேன். நாங்கள் தான், ஆயிரம் காரணங்களை விளக்கி, இன்னின்ன காரியங்களால் இத்திட்டம் கேடானது என்று சொல்லுகிறோமே? நாங்கள் சொல்லுகிற காரணங்களை மறுத்தால் சரி; அல்லது நாங்கள் சொல்லுவது இன்ன விதத்தில் தவறானது என்று சொல்லுவதானால் நியாயம், அதை விட்டுவிட்டு, என்னமோ-இவர்கள் (பார்ப்பனர்கள்) தான் மக்களைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு பாடுபடுகிற மாதிரியும்-எங்களுக்கெல்லாம் அதைப்பற்றிக் கவலையே இல்லை என்றும் பேசுவது என்பது எவ்வளவு தவறானது?
நான் கேட்க ஆசைப்படுகிறேன்-இந்தத் தோழர் ஆச்சாரியார் அவர்களுக்கோ, அல்லது அவருடைய இனத்து மக்களுக்கோ இந்த நாட்டைப்பற்றி, இந்த நாட்டு மக்களைப் பற்றி எதில் எங்களைவிட அதிகமான கவலை இருக்க முடியும்? அவர்களுடைய கவலையெல்லாம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு-பாதுகாப்புக்கு என்பது தவிர, பொதுவுக்கென்று என்ன இருக்கிறது? எங்களைவிட என்ன இந்த நாட்டுக்கு அதிகமாகப் பாடுபட்டு விட்டார்கள்? இந்தப் பார்ப்பனர்களால் நாம் இந்த 2000, 3000 ஆண்டுகளாக எதில் முன்னேற்றம், மேன்மை அடைந்திருக்கிறோம்? வெள்ளையன் சிறிது முன்னேற்றமடையச் செய்தான். இந்தப் பார்ப்பனர் அவன் இடத்திற்கு வந்து நம்மைப் பழையப்படி கீழே தள்ளப் பார்க்கிறார்கள்; சாண் ஏறினதற்கு முழம் இறக்கிவிட்டார்கள்.
இன்றைக்கு இருக்கிற எவர்தானாகட்டும்; ஆச்சாரியாரேதான் ஆகட்டும், என்னை விட அதிகமாக என்ன இந்த நாட்டுக்குப் பாடுபட்டு விட்டார்கள்? அல்லது மற்றவர்களுடைய உழைப்புக்கு, நாணயத்திற்கு, தியாகத்திற்கு-என்ணுடைய பொதுநல உழைப்பு என்பது என்ன, எவ்வளவு குறைந்தது என்று சொல்ல முடியும்? இவர்கூட அல்ல; இவருக்குப் பெரியவர்கள் என்று சொல்லப்படுகிற நேரு, இராஜேந்திர பிரசாத் போன்றவர்கள்தான் ஆகட்டும், என்ன, என்னைவிட அதிகமாகப் பாடுபட்டு விட்டார்கள் என்று கேட்க ஆசைப்படுகிறேன்.
இந்த ஆச்சாரியாரும், பிரசாதும், நேருவும் 4 முறை, 5 முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள் என்றால், நான் 13 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அந்தஸ்தில், பணம் காசில் இவர்களில் யாருக்கு நான் குறைந்தவன் என்று சொல்ல முடியும்? இரண்டு தலைமுறையாக நாங்கள் பெரிய வியாபாரக் குடும்பம்; செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ள நல்ல பெரியதனக் குடும்பக்காரர்களாயிற்றே, மற்ற எந்தப் பார்ப்பனத் தலைவர்கள் என்பவர்களாகட்டும் அவர்களுடைய முன் தலைமுறையை எடுத்துப் பார்த்தால், அவர்கள் புரோகிதர்கள்தானே! அவர்கள் வீதி விளக்கு வெளிச்சத்திலே படித்துக் கொண்டிருக்கிற போதே அந்தஸ்துள்ளவனாக, பெருமைக்கு உரியவனாகத்தான் நானிருந்தேன்.
இன்ணும், ‘பாடுபட்டோம்’ என்று செல்லுகிற மற்றவர்கள்-நேரு,பிரசாத், ஆச்சாரியார் உட்பட அத்தனை பேரும், இன்று அந்தப் பாட்டுக்குப் பலனை அணுபவிக்கிறார்கள், இராஜபோகம் அணுபவிக்கிறார்கள்; 10 இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சேர்க்கிறார்கள். ஆனால், நான் இந்தப் பொதுவாழ்க்கை என்பதன் பேரால் இத்தனை ஆண்டு பாட்டுக்கும் இன்றுவரை நான் ஏதாவது பலன், பதவி, பணம் அடைந்திருக்கிறேனா? சொல்ல முடியுமா? வேண்டுமானால், இந்தக் காரியத்துக்கு வந்ததனால் எனக்கு என் சொந்தத்தில் ஏராளமான பொருள் நட்டத்தையும், எதிர்ப்பையும் அணுபவித்திருக்கிறேன் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, ஒரு செல்லாத காசு அளவாவது இலாபம் பெற்றிருப்பேனா? அப்படி இருக்கும் போது என்னைப் பார்த்து ‘எங்களுக்குத் தான் மக்கள் மீது கவலை, உனக்கு இல்லை’ என்றால், என்ன யோக்கியதை என்றுதானே கேட்க வேண்டி வரும்? ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதம் இருக்கிறது என்றால் இந்த முறையிலா நடந்து கொள்வது? ஓரு முறை வேண்டாமா?
என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பாணுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதி இல்லை; திறமையில்லை என்கிறார்கள்! படிக்கவும் வசதி தரமாட்டேன் என்கிறார்கள்! பெரிய படிப்பு படிக்க வசதியில்லை-விடமாட்டேன் என்கிறார்கள், கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல்-‘கல்வித்திட்டம்’ என்ற பேரால் அவனவன் சாதித் தொழிலுக்குப் போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள். அடக்குவது என்றால் இப்படியோ? எதிரி என்றால் வாழவே கூடாது என்றா நினைப்பது? இதுதான் பெரிய பண்பு என்பதா?
உள்ளபடி இந்தக் கல்வித் திட்ட எதிர்ப்பு என்பதை ஒரு அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்க வில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு-திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக் கல்வித்திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை, போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான, உயிர் நிலைப் போராட்டமாகக் கருதுகிறோம்.
இப்போதே சொல்லுகிறேன்; இந்தக் கல்வித் திட்டம் எடுபட்டால் மட்டுமே போதாது; நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடியான விகிதாச்சாரம், பார்ப்பாணுக்கு 100-க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும். இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான-உரிமையான பிரச்சினைகள். இந்த இரண்டு காரியங்கள் நிறைவேறுவதற்காக இந்த இனம் கடைசிவரை உயிரைப் பணயம் வைத்துப் போராடியே தீரும்! இதில் சந்தேகமே இல்லை. உள்ளபடி சொல்லுகிறேன்-இந்தப் பார்ப்பனர்களை ஒழிக்கிறோமோ இல்லையோ- எங்களிலே 1000 பேர் இந்த முயற்சியில், பார்ப்பனர்களை வெளியேற்றுகிற இந்த நல்ல காரியத்திலே, சாவோம்! ஓர் ஆயிரம் பேர் செத்துவிட்டால் -என்ன இந்த இனத்துக்கு நட்டம் வந்துவிடப் போகிறது? நான் பலமுறை கூறியது போல் இந்த நாட்டுத் திராவிட மக்களின் எண்ணிக்கையில் இந்தச் சாவு என்பது-தலை வாருவதில், சிக்கெடுப்பததில் கழியும் ஒரு சில முடிகள் போன்றதுதானே தவிர, பெரிய நட்டம் ஒன்றுமில்லை, ஆனால், இந்த 1000 பேரில் பகுதி வீதம் பார்ப்பனர்கள் தீர்க்கப்படுகிறார்கள் என்ற நிலைமை ஏற்படுமானால் உள்ளபடி அந்தச் சமூதாயத்துக்கு அது எவ்வளவு கேடு, நட்டம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கட்டும்! ‘நாங்களும் தயாராய் இருக்கிறோம்’ என்று மடி கட்டுவதும். கசரத் பழகுவதும் பார்ப்பாணுக்கு முட்டாள்தனமாக-போங்காலமாகவே முடியும்
உள்ளபடி ஆச்சாரியாருக்குச் சொல்ல விரும்புகிறேன்; அவர் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ, இல்லையோ அது வேறு விஷயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாய் இருக்கப் போகிறது. சும்மா நான் ‘டூப்’ விடவில்லை. இதை நன்றாக உணர்ந்து கொள்ளட்டும். திராவிட மக்கள் இன்ணும் இந்தக் கொடுமைகளையும் அக்கிரமத்தையும் நிச்சயமாகச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப்பதும் தவறான காரியம்; தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்றே சொல்லுவேன்.
கடைசியாய்ச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தோழர்களே! இனி அகிம்சை, அமைதி என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. ஏன் என்றால், அணுபவத்திற்கு அவை பயன்படவில்லை. எந்த முறையால் காரியம் கை கூடுமோ அந்த முறையைக் கையாளுவோம்; அதற்குப் பலாத்காரம், அராஜகம் என்ற பெயர் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல்!
தோழர்களே! இப்பெருத்த போராட்டத்தில் கலந்துகொள்ள எல்லா மக்களும் தயாராய்ப் பயணம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு வாருங்கள்! கூடவே சொல்லிக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் பெருமையும் செல்வாக்கும் கிடைக்கும் தேர்தலுக்கு நின்று மந்திரியாகலாம்-அதாவது ஜெயிலுக்குப் போய்வந்தவுடன் நாமினேஷன் பாரத்திற்கு ஓடுவது என்கின்ற எண்ணத்தின் மீது யாரும் வர வேண்டாம். எதற்காகச் சொல்லுகிறேன்; இன்றைக்கும் பொது வாழ்வு என்பது 100-க்கு 90 பாகம் சுயநலத்துக்கும், சொந்த இலாபத்துக்கும் வாழ்வுக்கும் ஆகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொதுவாழ்க்கை என்பதை ஒரு ஏணிப்படியாக வைத்துக் கொண்டு தாங்கள் மேலே மேலே ஏறுவதற்கு இதை ஒரு வாய்ப்பாய் பயன்படுத்திக் கொள்கிறார்கள்., எல்லாப் பொது நல வாழ்வுக்காரர்கள் என்பவர்களுமே அப்படித்தான் இருக்கிறார்கள். அதனாலேயே பொதுவாழ்வுக்கு மதிப்பு இல்லை; சுயநலம் தவிர பலணும் இல்லை.
நான் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்-பொதுவாழ்வில் எந்தவிதமான இலாபத்தையும் கருதாமல், எந்தப் பெருமயும்-சட்டசபை ,ஜில்லா போர்டு என்பதாக எதையும் கருதாமல் கை நட்டப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு உள்ளதையும் விட்டுவிடடு, உள்ளபடி, பொதுநன்மை என்கிறதையே இலட்சியமாக் கொண்டு யாராவது பாடுபடுகிறார்கள் என்றால் அது திராவிட கழகத்தார் என்கிற இந்த ஒரு கழகத்தாரைத் தவிர வேறு யாருமேயில்லை. ம;ற்றவர்கள் எல்லாம் பாடுபடுவார்கள் என்றால் அந்தப் பாட்டை எலேக்ஷணுக்கும் மற்ற வாழ்வுக்கும் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள். பலர் அதனாலேயே வயிறு வளர்க்கிறார்கள். மற்றும் எடுத்துப் பாருங்கள் ஒவ்வொருவரும் பொதுவாழ்வுக்கு வந்த போது அவர்களுக்கிருந்த யோக்கியதை, அந்தஸ்து, செல்வம் முதலியவைகளை-அவர்கள் இன்றைக்கு இந்தப் பொது வாழ்வின் பேரால் எல்லாத் துறையிலும் எத்ததைகய பெருமையான வாழ்வு நடத்துகிற்hர்கள் என்பவைகளை!
எனவே தோழர்களே! இதை ஒரு ஏணியாகக் கருதி மேலே போவது என்பதாக கருதாமல் தங்களைத் தாங்களே ஏணியாகக் கருதிக் கொண்டு, சமுதாய மக்கள் முன்னேறப் பயன்படுவதாய் பாடுபட முன்வர வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்திற்கு வரும் போது வீட்டில் பயணம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு வாருங்கள். (புரட்சிக்கு அழைப்பு சென்னையில் 31.1.1954 சொற்பொழிவு)
No comments:
Post a Comment