Sunday, April 26, 2026

தமிழ் வருடங்கள் - பெரியார்

 தமிழ் வருடங்கள்

ஆரிய சம்பந்தமான கதைகள்இ சேதிகள் ஆகியவைகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம்இ அசிங்கம்இ விபச்சாரம்இ இயற்கைக்கு மாறான மடத்தனமான சங்கதிகள் முதலியவைகள் இல்லாமல் இருப்பது மிகமிக அதிசயமாகும்.

தமிழ் வருஷப் பிறப்புக் கதை நாகரிகமுள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அன்னியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்னவென்று நினைப்பான்?

கிறிஸ்தவர்களுக்கும்இ முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை …hபகப்படுத்தக் கூடியதாகவும்இ சரித்திரத்திற்குப் பயன்படத்தக்கதாகவும்இ நாகரிகமுள்ளதாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாகஇ அவர்களது வருஷங்களுக்கு கிஇ.மு.இ கி.பிஇ ஹிஜிரி என்கின்ற பெயர்களும் அவற்றுக்கு நல்ல ஆதாரமுள்ள கருத்துக்களும் இருக்கின்றன.

ஆனால்இ தமிழணுக்கு-நாதியற்ற தமிழணுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமேயானால்இ தமிழர் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா என்றுதான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டிஇ லம்பாடி சமூகமாக ஆக்கி விட்டதால்இ இவ்வளவு விழிப்பு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழணுக்குச் சூடு சொரணை ஏற்படுவதில்லை.

கோயிலுக்குத்  தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால்-மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழிசெயல் வேறு என்ன இருக்கிறது?

இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகின்றான்.

‘ஆயபயன் அய்ந்து’ என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம்இ சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றான். நாம்இ நம் வருஷப்பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்கிறோம். இது நியாயமா? ‘தமிழ்’ வருஷப் பிறப்புக் கதையைப் பாருங்கள்ஸ

நாரதர் பிரம்ம ரிஷி. அவருக்கு ஒரு நாள் காம இச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும் என்று …hன திரு·டியினால் பார்த்துஇ சாட்சாத் கிரு·ணபகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதிஇ கிரு·ணனிடம் ஓடினாராம். கிரு·ண பகவான்இ‘நாரத முனிசிரே·டரே எங்கு வந்தீர்’ என்றாராம். அதற்கு நாரதர்இ ‘ஒன்றும் இல்லை’ என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிரு·ணபகவான்இ ‘சும்மா சொல்லும்’ என்றாராம். நாரதர்இ ‘எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள்(வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே-அதில் ஒன்று கொடுங்களேன்’ என்று கேட்டாராம். உடனே கிரு·ணபகவான்இ ‘இதுதானா பிரமாதம்இ இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில்-நான் இல்லாத ஒரு கோபியின் வீட்டிற்குப் போய் அங்குள்ள கோபியை அணுபவித்துக் கொள்ளுங்கள்’ என்றாராம். உடனே நாரதப் பிரம்மம்இ‘ கிரு·ண பகவாணுக்ககு ஒன்று போக-தனக்கு 59999 கோபிகள் கிடைத்ததாகக் கருதிக் கொண்டுஇ மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீடு நோக்கிச் சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் கிரு·ணபகவான் கோபியுடன் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டுஇ வெகு கோபத்துடன் கிரு·ணபகவானின் வீட்டிற்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக் கொண்டு வந்தார் என்று யோசித்தால்இ அது மிகவும் வேடிக்கையானது. அதாவதுஇ ‘இப்படி நம்மை மோசம் பண்ணின கிரு·ணனையே இன்று அணுபவிப்பது’ என்றுதான் கருதிக் கொண்டு வந்தார் என்ற தெரிய வருகிறது.

அதாவதுஇ ‘பகவானேஸ நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர்: ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அணுபவிக்க ஆசைப்ப:டுகிறேன்’ என்று நாரதர் சொன்னதோடுஇ பகவானைப் பெண்ணாகக் கொண்டு அணுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும்இ‘பகவானே என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அணுபவிக்க எண்ணங் கொண்டேன்’ என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு ஸ்ரீமதி நாரத அம்மாளை அணுபவித்தார். இந்த ‘நாரத அம்மை’யுடன் 60 ஆண்டுகள் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் இ ஆணாய் இருந்தாலென்ன பெண்ணாய் இருந்தாலென்ன-பகவான் கிரீடை செய்தால் வீணாகப் போகுமா? போகவே போகாது. எனவேஇ 60 வருஷ லீலைக்கும் ‘நாரத அம்மாளுக்கு’ 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டுஇ ‘எங்களுக்கு என்ன கதி’ என்று கேட்டன. பகவான் அருள் சுரந்துஇ நீங்கள் 60 பேரும் 60 வருஷங்களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகை ஆளுங்கள்’ என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு அந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டுஇ வருஷந்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

இப்படி ஆணூம் ஆணூம் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும்-இந்த வருஷப் பெயரையோ எண்ணிக்கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால் தான்இ தமிழணுக்குச் சரித்திரமில்லை என்பதோடு-தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.

ஆகையால்இ இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ கால முறையைக் காரித் துப்பி விட்டு ‘கி.பி. யையோஇ ‘ஹிஜிரி’யையோஇ கொல்லத்தையோ (கொல்லம் ஆண்டு) விக்ரமாதித்தனையோஇ சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனியனையோ குறிப்பு வைத்துக் கொள்வார்களா? அவ்வளவு சூடு சொரணை தமிழணுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை -(8-4-1944)

No comments: