Thursday, September 17, 2015

மணியம்மையார்....11

மணியம்மையார்
அன்னை நாகம்மையார் இருந்தவரை பெரியார் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தார். திராவிடர் கழகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியுமே அவருடைய கவலையயல்லாம் இருந்தது. 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் அம்மையார் மறைந்தார். அன்னையார் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. கணவர் நலமே தன் நலமெனக் கருதி வாழ்ந்து வந்தார். கணவர் விருப்பமே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
படிப்பில்லாத அம்மையார் பெரியாரின் துணையாய் ஆனபின் அவரு டைய கொள்கையே தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். பெரியாருக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்க்கைத் திட்டமாக அன்னையார் கொண்டி ருந்தார்.
ஏறத்தாழ ஓராண்டு காலம் பெரியார் வெளிநாடுகளில் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் அம்மையார் வீட்டில் தனியே இருந்தார். கணவருக்காக உழைக்க முடியாமலும், கணவர் அருகில் இல்லாமலும் அம்மையார் உடல் நோயுற்றது. அந்த நோயே வளர்ந்து அவர் உடலைத் தளரச் செய்தது. இறுதியில் இறந்து போனார்.
அன்னை நாகம்மையார் இறந்த போது, பெரியாருக்கு வயது 54. முதுமைப் பருவம் தொடங்கிவிட்டது. தொடர்ந்து கூட்டங்களுக்குப் போவதும், கொள்கை விளக்கங்கள் பேசுவதுமாக உழைத்துக் கொண்டிருந்த பெரியாருக்கு, அவர் உடல் நலத்தைக் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.
அவருடைய நிலையை அறிந்து, அவருக்குத் தொண்டுபுரிய முன்வந்தார் ஒரு பெண்மணி. அவர்தான் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு இளம் வயது. ஆயினும் நாட்டுத் தொண்டாற்றும் பெரியாருக்குத் தொண்டு செய்யும் பணியினை ஏற்றுக் கொண்டார்.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ, மற்ற பெண்களைப் போல் இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை. கொள்கைக்காக வாழும் பெரியாருக்காக வாழ்வதே தம் கொள்கையாகக் கொண்டுவிட்டார்.
1949 ஆம் ஆண்டு, தம் எழுபத்தோராம் வயதில் பெரியார் எதிர்காலத்தைப் பற்றி எண்ணினார். தந்தையார் ஈட்டிய ஏராளமான சொத்துகள் இருந்தன. திராவிடர் கழகத்திற்காக அவர் சேர்த்துவைத்த சொத்துகளும் பணமும் நிறைய இருந்தன. இவை யாவும் வீண்போகாமல் இருப்பதற்கு ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
அவருக்கு மிக மிக உண்மையாக இருந்தவர் மணியம்மையார். அவர் நலம் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு பண ஆசையோ, நகை ஆசையோ, துணி ஆசையோ வேறு எந்தவிதமான ஆசைகளோ கிடையாது. பெரியாருக்குத் தொண்டு செய்யும் கடமை ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
யாரையும் எளிதில் நம்பாத பெரியார், தமது நம்பிக்கைக்கு உரிய ஒருவராக முற்றிலும் நம்பியது மணியம்மையார் ஒருவரைத்Vன். தனக்குப் பிறகு தன் சொத்துக்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், தன் கொள்கைகளை வளர்க்கும் பொறுப்பையும் அந்த இளம் பெண்ணான மணியம்மையாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
மணியம்மையாரைத் தன் வாரிசு ஆக்க விரும்பினார். இந்திய நாட்டுச் சட்டப்படி ஓர் ஆண் பிள்ளையைத் தான் தத்து எடுத்துக்கொள்ள முடியும். பெண் பிள்ளையைத் தத்து எடுக்க முடியாது.
மணியம்மையை தன் வாரிசு ஆக்க வேண்டும் என்றால், அவரைத் திருமணம் செய்து கொண்டு, மனைவி என்ற நிலையில் வைப்பது ஒன்றுதான் சட்டப்படி இயன்றதாய் இருந்தது.
வேறு வழியில்லாததால், மணியம்மையைத் தன் வாரிசு ஆக்குவதற்காக 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் ஒன்பதாம் நாள் சட்டப்படி அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
ஏழையாக வாழத் தொடங்கிய வெங்கட்ட (நாயக்கர்) உழைத்து உழைத்து உருவாக்கிய பெரும் சொத்துக்களும், வாழ்நாள் முழுவதும் தாம் பாடுபட்டு உருவாக்கிய கழகமும், பிற்காலத்தில் பேணிக் காக்கப்படுவதற்காக, பெரியார் இந்தத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

பெரியார் எண்ணியவாறே, அவருக்குப் பிறகு தன் பொறுப்பை, கடமை யுணர்வோடு ஒழுங்காகச் செய்துவந்தார் மணியம்மையார்.

பெருமைக்குரிய பெரியார்....12

பெருமைக்குரிய பெரியார்
இதுவரை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் படித்தோம். இதிலிருந்து நாம் தெரிந்த கொள்வது என்ன?
பெரியார் பல போராட்டங்களை நடத்தினார். சங்கிலத் தொடர்போல் அவர் நடத்திய போராட்டங்கள் அமைந்தன.
வகுப்புரிமைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இராமர் படம் எரிப்புப் போராட்டம், நீதிமன்றக் கண்டனப் போராட்டம், கம்பராமாயணத்தைக் கொளுத்தும் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரை அகற்றும் போராட்டம், இப்படித் தம் வாழ்நாள் முழுவதும் போராடிப் போராடி வெற்றி பெற்றார்.
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன? பெரியார் தமிழ் மக்களின் இழிவைத் துடைத்து ஏற்றம் தரவே இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார். இங்கு யாரும் இந்த முயற்சியைச் செய்யாததால் நான் என் கடமையாக ஏற்றுக் கொண்டு செய்தேன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டாமை ஒழிய வேண்டும், தாழ்த்தப்பட்டோர் மக்களாக நடத்தப்பட வேண்டும்.
மக்கள் எல்லாரும் சமமாக வாழ வேண்டும்.
ஒருவரையயாருவர் ஏமாற்றியோ, சுரண்டியோ வாழக்கூடாது.
சட்டமன்றம், நீதிமன்றம் ஆகியவை மக்கள் நல்வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்களை மோசம் செய்பவர்களுக்கத் துணையாய் இருக்கக் கூடாது.
இப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் படைத்தவர் பெரியார்.
தந்தை பெரியாரை நாம் இழந்த நாள் 24.12.1973.
டில்லியிலும் உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், வங்காளத்திலும், குஜராத்திலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் இப்படி மற்ற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியாரை நன்றியோடு நினைக்கிறார்கள். அவர் தங்களுக்காகப் போராடி யதை எண்ணி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் இன்று உள்ள அரசுபெரியார் சதுக்கம்என்ற ஓர் இடத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அய்ந்து பெரும்  தலைவர்களுக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத்தியது. அதில் நம் பெரியாரும் ஒருவர்.
இன்று தம் தமிழர் தலைவராக விளங்கும் தளபதி வீரமணி அவர்கள், ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினருடன் சென்று, அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த மக்களின் நன்றி உணர்வைக் கண்டு பூரித்துப்போய்விட்டார்.
இப்படி நாடெல்லாம் போற்றும் பெரியாரை நாமும் போற்றுவோம்.
அவர் காட்டிய வழியில் நின்று, கடவுள், மதம், சாதி, வேதம், புராணம், சாஸ்திரம் ஆகிய தீமைகளை ஒழித்துக் கட்டுவோம். அறிவு வழி நடப்போம்.
மக்கள் யாவரும் சமம் என்ற எண்ணத்தோடு யாவரும் ஒன்றாக ஒற்றுமையாக நன்றாக வாழுவோம்!

வாழ்க பெரியார்! வாழ்க மாந்தர் நேயம்! வாழ்க தமிழ்நாடு!

Saturday, August 22, 2015

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு/ கிள்ளான் 02.08.2015

த.பரமசிவம் உரையாற்றுகிறார்

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் உரையாற்றுகிறார்

சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன்

டத்தோ தீபாகரன் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

மக்கள் ஓசை ஆசிரியர் நூலை பெறுகிறார்



ம.தி.க. அமைப்புச் செயலாளர் கா.நா.கோபால் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் திரு.கருப்பையா அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார்

சொல்லின் செல்வர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் கவி




எழுத்தாளர் முருகன் நூலை பெறுகிறார்

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் / கிள்ளான் 02.08.2015

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் ம.தி.க. சாஆலாம் கிளைத்தலைவர் த.பரமசிவம்

பெரியார் பெருந் தொண்டர் திரு.வத்துமலை அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் திரு.பெரியாசாமி


முதுபெரும் எழுத்தாளர் மு.வரதராசு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்கிறார்

ஜப்பானிலிருந்து வந்த பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அவர்களுடன் சிங்கை மருதீஸ்வரன் மற்றும் நூலாசிரியர்

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு அவர்களிடம் நூலை பெறுகிறார் சிலாங்கூர் மாநில ம.தி.க துணைத் தலைவர் பொன் வாசகம் அவர்கள்

பொன் வாசகம் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

பேராசிரியர் அ.வீரமணி உரையாற்றுகிறார்

மலேசிய மக்கள் சக்தி வேலன் அவர்கள் நூலை பெறுகிறார்

நூலாசிரியர் உரையாற்றுகிறார்

கிள்ளான் நகரான்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணன் நூலை பெறுகிறார்

நகரான்மைக் கழக உறுப்பினர் டத்தோ தீபாகரன் முதல் நூலைப் பெறுகிறார்







மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு / 02.08.2015 கிள்ளான்


02.08.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு கிள்ளான் எம்.பி.கே ஆடிட்டோரியத்தில் மலேசிய திராவிடர் கழகம் சாஆலாம் கிளையும் கிள்ளான் பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்திய கவி எழுதிய மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீட்டு விழா படங்கள்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ நூலை வெளியிட்டார்



சிங்கப்பூர் சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன் அவர்கள் நூலை திறனாய்வு செய்தார்



கிள்ளான் நகரான்மைக்குழு உறுப்பினர் டத்தோ தீபாகரன் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்







Saturday, July 25, 2015

கவியின் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை / இறுதி பகுதி

மலாயா தமிழர்களின் முக்கிய தலைவரான உ.இராமசாமி நாடார் தமது சொந்த வீட்டை தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு கொடுத்திருக்கிறார். அந்த படத்தையெல்லாம் இதில் போட்டிருக்கிறார். மீண்டும் அ.சி.சுப்பய்யா 74 வது பிறந்த நாள் வருகிறது. கேட்கிறார். கட்டிடம் பழுதாகி இருக்கிறது. உடனே கூறுகிறார்: “கவலைப் படாதீர்கள். ரிப்பேர் செய்ய நான் பணம் தருகிறேன். முழுச்செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்கிறார். உடனே அதை முழுமையாகச் சரி செய்கிறார்கள். 
பெரியாரை கஞ்சன் கஞ்சன் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லித்தான் நமக்கு பழக்கம். கோவையில் மருத்துவக் கல்லூரி வருகிறது. தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வந்தவுடன் கல்லூரியின் மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிடுகிறது. மாவட்ட மருத்துவமனையை எங்கு கொண்டு செல்வது என்று பிரச்சனை வருகிறது.  திருப்பூருக்காஈரோட்டுக்காஇரண்டு ஊரும் ஒரே மாவட்டம். யார் ஒரு இலட்சம் தருகிறார்களோ, அப்போது 1964இல் அது பெரிய தொகை. அந்த ஊருக்கு கொண்டு போவோம் என்று சொல்லுகிறார்கள். அப்போது எல்லாரும் பெரிய நோட்டை எடுத்துகிட்டு பெரியாரிடம் பெரிய பணக்காரங்களெல்லாம் வர்றாங்க.  ‘அய்யா நாம 100 பேரு ஆளுக்கு 1000 ருபாய் போட்டுஒரு இலட்சம் ருபாய்  கொடுத்திடலாம்’ என்று சொல்லுகிறார்கள். பெரியார் சொல்கிறார், ‘நீங்க ஒருத்தரே ஒரு இலட்சம் கொடுக்கலாமே’ என்று முன்னாலே உட்கார்ந்து இருக்கிற முதலாளியைப் பார்த்து சொல்கிறார்.   ‘முடியல்லன்னா சொல்லுங்க. நான் கொடுத்துடுறேன்’ என்று சொல்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ‘நான் ஒரு இலட்சம் கொடுக்கிறேன். கொண்டு போய் கட்டிடுங்க என்கிறார். அப்படித்தான் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமை மருத்துவமனை வந்தது. பெரியார் பெயர் போட்டிருக்காங்க. சும்மா பெயர் போடல. அவர் தான் பணம் கொடுத்தார்.
    ஈ.வெ.ரா கல்லூரிக்கு ஐந்தரை இலட்சம் கொடுத்தால் கல்லூரி வரும் என்றார்கள். அப்போது திருச்சியில் அரசுக் கல்லூரி இல்லை. நேசனல் கல்லூரிசெட்டியார் கட்டினதுதான். ஆனால் அது பார்ப்பனர் கல்லூரியாக மாறி விட்டது. பணம் வேண்டுமானால் செட்டியார் போட்டிருக்கலாம். பாப்பான் பிடிச்சுகிட்டான் அதை. ஐமால் முகமது கல்லூரி இஸ்லாமியர்களுக்கென்று ஆகிவிட்டது. செயிண்ட் ஜோசப் கல்லூரி கிருத்துவர்களுக்கு என்று ஆகிவிட்டது. அரசு கல்லூரி என்று ஒன்று இல்லை.
   எங்க ஊர்ல ஒருத்தர் இருந்தாரு. ‘மாமனிதர் என்று பட்டமெல்லாம் அவருக்கு கொடுத்தார்கள். அவர்தான் பொள்ளாச்சி மகாலிங்கம். அவர் அரசு கல்லூரி வராம பார்த்துக்கிட்டார். அந்த ஊர்ல அவர் கல்லூரி மட்டும்தான் இருக்கும். வேற எந்தக் கல்லூரியையும் விடமாட்டார். அதுபோல் இருந்த திருச்சியில் ‘ஐந்தரை இலட்சம் கொடுத்தால் கல்லூரி கட்டுகிறேன்’ என்றவுடனே ஐந்தரை இலட்சம் ரூபாயை கொடுத்தார் பெரியார். அதுதான் ‘ஈ.வெ.ரா. கல்லூரி’. ‘எனக்கெல்லாம் காலேஜ் நடத்துற வேலை வேண்டாம். நீ நடத்திக்க’ என்று அரசுக்கு ஐந்தரை இலட்சம் கொடுத்தார். அவரைத்தான் நம்பாளு கஞ்சன் என்பான். அதனால்தான் பெரியார் தொண்டனா வாழ்ந்து சிக்கனமாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தாலும் தமிழர் நலனுக்காக ஒரு அலுவலகம்கட்டடம்நூலகம் என்று வருகின்ற போது கவலைப்படாமல் பணத்தை கொடுப்பவர்களாக நமது முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள்.
    நமக்கு வழிகாட்டியாகப் பார்க்க வேண்டிய பல அரிய செய்திகளை தொகுத்து கொடுத்திருக்க, நம்முடைய தோழர் கவி அவர்கள்ஏராளமான நூல்களை கொடுத்திருக்கிறார்பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி அருமையான தகவல் அடங்கிய ஒரு நூலை கொடுத்திருக்கிறார். சிறுநூல்தான். ஆனால் பெரியாரின் மொழிக் கொள்கை மீது திறனாய்வு செய்கிறவர்களுக்கு நல்ல விளக்கம் தரும் நூல் என்றார் கொளத்தூர் மணி.

    விழாவில் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யா, தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆகியோரின் வழித் தோன்றல்களுக்கு மலேசிய சிலாங்கூர் மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு அரிமா.அருண் சிறப்பு செய்தார். நூலாசிரியர் கவி அவர்களுக்கு ஜவகர் சிறப்பு செய்தார். நிகழ்ச்சியினை பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச் செல்வன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தி.வி.க. செயலாளர் காளிதாசுநாகை மாவட்டச் செயலாளர் மகேசு, தலைமைக் குழு உறுப்பினர் இளையராசா ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர். இரவு 9.30 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்தது.