Thursday, November 28, 2019

நெ,து,சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் வரலாறு குறித்து வைகோ

வைகோ பேச்சு...

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களின் 73 ஆம் பிறந்த நாள் விழாவில் (2.12.2005) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் பேசிய பேச்சிலிருந்து......

‘எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பெரியார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி, தமிழக அரசிடம் தந்து தட்டச்சுப் படிகள் ஒரு கல்வியாளரிடம் சிக்கி இருப்பதாக சொல்லுகிறார்கள். அதுவும் வெளிவரவில்லை’.

‘என்.டி. சுந்தரவடிவேலு சிறு அளவில் பெரியார் பற்றி ஒரு நூல் எழுதினார். அதே போல் புரட்சியாளர் பெரியார் என்று பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்’.

‘தந்தை பெரியாரைப் பற்றிக் கவிஞர் கருணாந்தம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் அன்று. பெரியாரோடு அவருக்கு உள்ள அனுபவங்களையும் இதரச் செய்திகளையும் தந்திருக்கிறார்’.

‘தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிரம்ப நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் முழுமையாக அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய  நூல் ஒன்றும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி என்று நான் கருதுகிறேன்’. (விடுதலை 15.12.2005).

பெரியாரின் வாழ்க்கை வரலாறு- கவி

பெரியாரின்  வாழ்க்கை வரலாறு - கவி

‘பெரியாரின்  வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டி ருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாeரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குநருமாகிய திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடனும் இணைந்து பணியாற்றியவரும் கடந்த 15 ஆண்டுகளாக ‘இeந்தமிழன்’ என்ற இதழை நடத்தி வருபவருமான அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதாவது, ‘1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அரசு திரு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுத பணித்தது. திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 1000 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக எழுதி தமிழக அரசிடம் கொடுத்து விட்டார். இப்போது அந்த வரலாறு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை’ என்று என்னிடம் கூறினார்கள். நான் (கவி) அதிர்ந்து போனேன்.

பின்னர் இச்செய்தியை ‘ நந்தன்’ அலுவலகத்தில் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களிடத்தில் கூறினேன். ‘சங்கொலி’ பத்திரிகையின் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாeர் விடுதலை இராசேந்திரன் ஆகியோருடன் எடுத்து ரைத்தேன்.  திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொeத்தூர் மணி அவர்கçeச் சந்தித்து இந்த விவரங்கçe அளித்தேன். இடையில் புதுச்சேரியில் எனது நண்பர் கோகுல் காந்தி அவர்கள் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது, இந்த பெரியார் வரலாற்று நூலைப்பற்றி குறிப்பிட்டார்கள். விடுதலை இராசேந்திரன் அவர்களும் புதுவை சுகுமாரன் அவர்களும் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நான் தி.வ. மெய்கண்டாரின் பேச்சை எனது இதழான  ‘பெரியார் பார்வை’-இல் அச்சிட்டு வழங்கினேன். திராவிட பேரவை பொதுச்செயலாeர் திரு. நந்திவர்மன் அவர்களும் இது குறித்து புதுவை அரசுக்கு மனு அனுப்பினார்.

பின்பு இது தொடர்பாக மேலும் விபரங்கள் கிடைக்கப்பெற்றேன். பெரியார் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு கொண்டாடிய போது திருவாரூர் மாவட்ட விழா தொடர்பாக 16.9.1979  ‘தமிழரசு’ இதழில் நன்னன் அவர்கள்  ‘பெரியார் வரலாறு’ குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான  ‘நினைவு அலைகள்’ முன்னுரையிலும் இது குறித்த ஒரு பதிவைக் கண்டேன். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மனு தயாரித்து  ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ நிறுவனர் அய்யா ஆனாரூனா அவர்களிடம் நானும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாeர் மு. செந்தில் அவர்களும் அளித்தோம்.

மறு நாள் 25.8.2004 அன்று திருவாரூருக்கு நடைபயணம் வந்த திரு. வைகோ அவர்களிடம் இந்த மனுவை எனது முன்னிலையில் ஆனாரூனா அவர்கள் அளித்தார்கள். இம்மனுவை அங்கேயே படித்த வைகோ அவர்கள் வியப்படைந்தார்கள். இத்தோடு இந்நிகழ்வு முடிவடைந்துவிட்டது என்று நினைத்தேன்.

சரியாக ஒரு வருடம் கழித்து பெரியார் திடலில் 2.12.2005 நடந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வைகோ அவர்கள், திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய பெரியார் வரலாற்று நூலைப் பற்றி விவரமாகப் பேசியிருக்கிறார். அந்நூல் வெளிவர தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

நினைவு அலைகள்’ - ‘நெ.து.சு’

‘நினைவு அலைகள்’ மூன்றாம் தொகுதி-  ‘நெ.து.சு’ அவர்கள் முன்னுரையில் எழுதியுள்ளவையிலிருந்து....

முதல்வர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாகவும் பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப்பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார். பெரியார் வரலாறு-வண்ணப்படங்கள் என்ற நூலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன. பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இருபகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன. முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப்பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.(12.10.1988).

‘நினைவு அலைகள்’ நூலின் மூன்றாம் தொகுதியின் 905‡906 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளவையிலிருந்து...

பெரியார் நூற்றாண்டு விழா வந்தது. அதைச் சிறப்பாக ஈடுஇணையற்ற முறையில் கொண்டாட ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அரசு பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தது. அவ்விழா ஒவ்வொன்றிலும் எனக்கும் பங்கு கொடுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்னைப் பெருமைப்படுத்தினார். பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை யயாட்டி, மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் தூண் நிறுவப்பட்டது. அதற்கான விழாக்களிலும் எனக்கு இடம் கொடுத்துச் சிறப்பித்தது தமிழக அரசு.

பெரியார் நூற்றாண்டு விழாவினையயாட்டி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை சிறுவர்களுக்கேற்ற வண்ணப்படங்கள் வாயிலாக வெளியிடுவது என்றும் பெரியோர்களுக்காக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் வெளியிடுவது என்றும் பெரியாரின் புரட்சி மொழிகள் என்ற நூலினைத் தொகுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு  ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். அக்குழுவின் துணைத்தலைவராக அரசு என்னை நியமித்தது.

வண்ணப்பட நூலையும் முழு வரலாற்றையும் தொகுக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தது. வண்ணப் படநூலையும் வரலாற்றில் முதல் பாகத்தையும் 300 பக்கங்களுக்கு மேலும் எழுதி முடித்துக் கொடுத்தேன். தம்முடைய பல அலுவல்களுக் கிடையிலும் நாவலர் நேரத்தை ஒதுக்கி வைத்து நான் தொகுத்த நூல்களிரண்டையும் வரி வரியாகப் படித்துப் பார்த்து வெளியிட ஒப்புதல் அளித்தார். பெரியார் வரலாற்றின் இரண்டாவது பகுதியையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன். 
(பெரியார் பார்வை, (16.12.2006)

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய பெரியார் வரலாறு

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய
பெரியார் வரலாறு

புரட்சித்தலைவர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அமைந்த தமிழக அரசு பெரியார் அவர்களின் நூற்றாண்டையயாட்டி (1879‡1979) 1979‡ இல் ஒரு குழு அமைத்தது.

இக்குழுவிற்கு டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைவராகவும் சென்னைப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு துணைத் தலைவராகவும் மற்றும் அறுவரை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பணிகளாக 1) பெரியார் வரலாற்றை உருவாக்குவது 2) பொன்மொழிகளைத் திரட்டி நூலாக வெளியிடுவது 3) சிறுவர்களுக்கான வரைபட வரலாற்றை உருவாக்குவது 4) கல்வெட்டு பணியைச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பணிகள் 1979 மே திங்களில் தொடங்கப்பெற்றது.
பெரியார் வரலாறு தவிர மற்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

இப்பணி மேற்கொள்ளப்பட்ட காலத்தில் பெரியார் வைக்கம் போராட்டத்தில்  ஈடுபட்டதை அறிந்திருந்த குரூர் நீலகண்டன் நம்பூதிரி, பெரியாரின் நெருங்கிய நண்பர்  ஈரோடு அங்கப்பன் செட்டியார், பெரியாரை முற்றிலும் அறிந்திருந்த சுயமரியாதை வீரரும் , ‘தேசபக்தன்’ ஆசிரியருமான சிதம்பரம் தண்டபாணிப் பிள்ளை முதலியோர் உயிருடன் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் மூலம் உண்மைச் செய்திகளை அறியவும் திட்டமிடப்பட்டது. நவசக்தி, மெட்ராஸ் மெயில், இந்து, சுதேசமித்திரன் முதலிய இதழ்களி லேயிருந்தும் தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி மலேயா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், ரஷ்யா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் ஆவணக் காப்பகங்களிலிருந்தும் அக்கால வார மாத இதழ்கள் மற்றும் புத்தகங்களி லிருந்தும் பெரியார் பற்றிய செய்திகளைத் திரட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
இப்பணிக்குரிய எம்.ஏ., எம்.பில், படித்த ஆறுபட்டாதாரிகள் நல்ல ஊதியத்துடன் அமர்த்தப்பட்டனர். இதற்காக தமிழக அரசு இலட்சக்கணக்கில்  பணத்தைச் செலவிட்டது.

முதலில் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களிடம் சிறுவர்களுக்கான பட வரலாற்றை ஒப்படைத்த இக்குழு, பின்னர் மாற்றம் செய்து, பெரியார் வாழ்கை வரலாற்றை எழுதும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைத்தது. இப்பணி நிறைவு பெற சில ஆண்டுகள் ஆயிற்று.

இவ்வரலாறு, பெரியாரின் இளமைக்காலம் முதல் காங்கிரசிலிருந்து வெளியேறும் வரை உள்ள பகுதி 300 பக்கங்களில் முதல் தொகுதியாக எழுதப்பட்டு குழுவால் ஏற்கப்பட்டது. பின்னர் இப்பகுதி அச்சிடுவதற்காக அச்சகம் ஒன்றிடம் அப்போதே ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது தொகுதி இந்தி எதிர்ப்புப் போராட்டம்- திராவிடர் கழகம் பிறந்த வரலாறு‡ கருஞ்சட்டை மாநாடு முதலிய விவரங்களுடன் 1948 வரை எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஞ்சிய வரலாற்றுப் பகுதி, மூன்றாவது தொகுதியாக எழுதப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைசிறந்த நிர்வாகி என்பதைத் தமிழகம் நன்குணர்ந்திருப்பது போலவே, அவர் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் என்பதையும் தமிழகம் உணர்ந்திருக்கிறது. இவர் பெரியவர் களுக்காக 30 நூல்களையும், ‘வள்ளுவர் வரிசை’ என்னும் தலைப்பில் , சிறுவர்களுக்காக 13 நூல்களையும் எழுதி உள்ளார். இவர் படைத்த பெரியார் பற்றிய அரிய நூலொன்றும் வெளிவந்துள்ளது.

இவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை 2300 பக்கங்களில் மூன்று பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல் இவருடைய பத்தாண்டுகாலப் பணியின் விளைவால் உருவானதாகும். இந்நூல் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு கால கல்வி வளர்ச்சியையும் சமுதாய அரசியல்  சூழ்நிலைகளையும் விளக்குவதாகும். இந்நூலை தமிழ் நாட்டின், புகழ் வாய்ந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான ‘வானதி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இவர் இந்நூலை எழுதி, நூல் வடிவில் வெளிவர, இவர் என்னை அன்புடன் கேட்டுக்கொண்டதின் பேரில் இவருக்கு நான் உதவி செய்தேன். இப்பணி ஏழு ஆண்டுகாலம் நீடித்தது.

இந்தப் பெரியவருக்கு தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஒரு பெருங்கவலை நெஞ்சை வாட்டி வதைத்தது. தாம் எழுதிய தம்முடைய வரலாறு 2300 பக்கங்களில் வெளி வந்தும் தாம் தமிழக அரசுக்காக எழுதித் தயாரித்த ‡தம்மால் பெரிதும் மதிக்கப்பெற்ற - தந்தை பெரியார் அவர்களுடைய வரலாறு இன்னும் நூல் வடிவில் வரவில்லையே என்பதே அக்கவலையாகும்.
நான் அவருடைய இறுதிக் காலத்தில் அவரைச் சந்தித்த போது, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, என் வாழ்நாளில் நான் எழுதிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை என் கண்களால் காண்பேனோ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இறுதி வரை காண முடியாமலேயே மறைந்து விட்டார்.

பெரியாருக்கு 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நடந்து முடிந்து விட்டது. சுந்தரவடிவேலு எழுதி அரசிடம் ஒப்படைத்த வரலாறு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. இதற்காக யாரும் கவலைப்படவில்லை.

95 வயது வரை வாழ்ந்த ஒரு சமுதாயச் சீர்திருத்தத் தலைவரின் வாழ்க்கையை எழுதுவதென்பது சாதாரண வி­யமல்ல. பத்மஸ்ரீ நெ.து.சுந்தரவடிவேலு போன்று, தந்தைபெரியாருடன் அரை நூற்றாண்டு காலம் நெருங்கிப் பழகி‡அவர் வழியில் வாய்மையுடன் நடைபோட்டு பெரியாரை முற்றிலும் உணர்ந்த‡ இலக்கியம், சமுதாயம், அரசியல் அறிவுடன் முற்போக்கு சிந்தனையையும் கொண்ட-இன்னொருவர் இனி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கிடைப்பாரா? இப்பொழுது உள்ளவர்களால் அவருக்கு இணையாக எழுத முடியுமா?

பத்மஸ்ரீ சுந்தரவடிவேலு தாம் எழுதிய பெரியார் வரலாற்றின் இறுதித் தொகுதியைக் கொடுக்கும் போதுதான் நான் அவருக்கு நெருக்கமானேன்.
அந்த நேரத்தில் ஒரு பிரதியை நாம் வைத்துக் கொண்டு இன்னொரு பிரதியை அரசுக்குக் கொடுங்கள் என்று அவரிடம் சொல்ல எனக்குத் தைரியமில்லை. காரணம், அவரைப்பற்றி உணர்ந்தவர்களுக்குத் தெரியும். அவரிடம் பேசவே அஞ்சுவார்கள். இந்நிலையில் அவருக்கு நான் போய் ஆலோசனை கூற முடியுமா? பிற்காலத்தில் நெருக்கம் அதிகமான பிறகு எவ்வளவோ வி­யங்கள் பேசி இருக்கிறோம் என்பது வேறு வி­யம். பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர் நெ.து. சுந்தரவடிவேலு. உயர்ந்த நெறிமுறைகளைக் கடைப் பிடித்தவர்.

எனவே பெரியார் வாழ்க்கை வரலாறு, அதுபற்றிய குறிப்புகள் , திரட்டிய விவரங்கள் , துண்டுத் துணுக்குகள், படங்கள்  அனைத்தையும் கட்டி அரசிடம் ஒப்படைத்துவிட்டார். அதை அரசின் சொத்து என்று அவர் கருதினார். அது சம்பந்தமாக பிரதியோ குறிப்போ அவர் வீட்டில் கிடையாது. தமிழக அரசு இதைப்பற்றி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து பத்மஸ்ரீ சுந்தரவடிவேலு எழுதிய தந்தைபெரியாரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு தமிழக மக்களுக்கு வழங்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தி.வ. மெய்கண்டார். (இளந்தமிழன், மார்ச் 2006)

(பெரியார் பார்வை, 16.12.2006)

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா?

ஆகம பக்தியா ? சுயசாதி உணர்வா? -    ந. சேதுராமசாமி

விவேகானந்தர் பார்ப்பனப் புரோகிதர்களைப் பற்றிக் கூறியவை......
துர்த்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். இந்த போக்கிரித்தனம் மிக்க புரோகிதர்களும், அவர்களுடைய முன்னோர்களும் கடந்த நானூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக் கூட பார்த்ததில்லை. மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து, அவர்கள் தம்மைத் தாமே அழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கலியுகத்தில்  பிராமணர்களின் வேடத்தில் இருக்கும் இராட்சதர்களிடமிருந்து, மக்களையும், இந்த நாட்டையும் அந்தத் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் (விவேகானந்தரின் முழுப் பேச்சுக்கள் தொகுதி 8, பக்கம் 290, கல்கத்தா 1971)

சட்ட நெறிமுறைகள் கெட்டுக்கிடையன்று. அவை காலத்தின் தேவைக்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது மேலோர்கள் ஏற்றுக் கொண்ட மரபாகும். ஆகமங்கள் எந்தக்காலத்தில், யாரால் எழுதப்பட்டு, அவற்றை  காலகாலமாக மக்கள் அனைவரும் மாற்றமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது யார்?

நீண்ட நெடுங்காலமாக மநுதர்மத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக்கொள்ளாத கம்மாளர்கள் எனப்படும் விஸ்வகர்மா வகுப்பினருக்கும், பிராமணர்களுக்கும் போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. புரோகித்தில் பிராமணர்களின் மேலாதிக்கத்தை, பாஞ்சாலர்கள் எனப்படும் அய்ந்தொழிலாளர்களாகிய கம்மாளர்கள் ஏற்றுக்கொள்ளாததை சில மாவட்டங்களில் கண்டதாக ஆபி டியுபே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களை விஸ்வபிராமணர்கள் என்று அழைத்துக் கொண்டதுடன், வேத சாஸ்திரங்கள் கற்று, தங்களுக்கு வேண்டிய யாகங்கள், புரோகிதங்களை அவர்களே செய்து கொண்டனர். இதனை வடமொழி நூற்களின் வழி ஆராய்ந்து திரு டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி, அவரது ‘விஸ்வகர்ம பிராமண வம்சப் பிராகாசிகை’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். கம்மாளர்கள்,  ‘ஆச்சாரி’ மற்றும் ‘செகத்குரு’ பட்டங்களை பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டதுடன், கம்மாளர்களின் புரோகிதம் செய்யும் உரிமையை நிலைநாட்ட , பஞ்சாங்கம் குண்டய்யருக்கு எதிராக, சித்தூர் அதாலத் நீதிமன்றத்தில் மார்க்க சகாய ஆச்சாரி தொடர்ந்த வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். விஸ்வ பிராமணர்கள் வேதாதிகாரங்களுக்கு உரிமை/தகுதி பெற்றவர்கள் என்றும் அவர்கள் தாங்களே புரோகிதம் செய்து கொள்ளலாம் என்றும், 15.12.1818 இல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கி.பி. 1885 இல் 78வது காலண்டர் (கிரிமினல்) வழக்கு எண்கள் 421, 422 இல்  விஸ்வ பிராமணர்கள் எந்தக் கோவிலின் கருவறைக்குள்ளும் சென்று ருத்ராபிஷேகம் செய்வதற்கும் பூசிப்பதற்கும் தகுதி/உரிமை படைத்தவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1894 இல் நடைபெற்ற மசூலிப்பட்டினம் வழக்கில் சிவகோடி வீரபத்ரன் என்னும் விஸ்வ பிராமணன், மகா சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நுழைந்து லிங்காபிஷேகம் செய்ததால், லிங்கம் பரிசுத்தமிழந்தது என்ற வாதம் ஏற்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் திரு.டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரி குறிப்பிட்டுள் ளார். இவ்வழக்கு விசாரணையின் போது, வீரபத்ர ஆச்சாரி அபிஷேகம் செய்யும் போது ஏன் தடுக்கவில்லை என வினா தொடுத்த போது அது வித்தியாசமாகத் தெரியவில்லை என்றே வழக்குத் தொடர்ந்த பிராமணர்கள் தெரிவித்தனர். அதைவிட வேடிக்கை, வீரபத்ர ஆச்சாரி கருவறைக்குள் நுழையும் போதே ஏன் தடுக்க வில்லை என வினா தொடுக்கப்பட்ட போது , அவர்கள் அதற்கு முன்பே இவ்வாறு செய்வது வழக்கமே என பதில் வந்துள்ளது. ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது போன்று பதிமூன்று  வழக்குகளை தனது ஆய்வுப் புத்தகத்தில் திரு. டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரி (பின்னாளில் புகழப்பெற்ற மேடைத் தமிழை எழுதியவர்) பட்டியலிட்டுள்ளார். இன்றைக்கும் விஸ்வகர்ம வம்சா வழியினர் புரோகிதம் செய்து வருகின்றனர். யாகம் மற்றும் கும்பாபிஷேகம் செய்கின்றனர். போளூர் வட்டம் காந்தபாளையம் சீனந்தல் மடாலயத்தின் சார்பில் விஸ்வகர்ம மடாதிபதி,  இதற்கென வைதீக பாடசாலையை நடத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் ஆகம விதிப்படி, வம்சாவழி சிவாச்சாரிய பிராமணர்களே பூஜை செய்து வந்துள்ளனர் என்பது புரட்சிக் கவிஞர் நடையில் ஏமாந்த காலத்தில் ஏற்றங்கொண்டோர் புலிவேடம் போட்ட இடைக்கால வரலாறு என்பது விளங்கும். வம்சா வழி பிறவித் தத்துவத்தைப் பல முனைகளிலும் முன்னிலைப்படுத்திய மனுதர்மமே புறக்கணிக்கப்பட்ட பின்னர், அந்த மனுதர்ம வம்ச வழியாக வந்த ஆகமங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவையே.15.12.1818-இல் சித்தூர் அதாலத் நீதிபதி டெக்கர் அளித்த தீர்ப்பில் விவரம்  தெரியாதவர்கள் அவர்களை (பிராமணர்களை) உயர்ந்த சாதி என ஏற்றுக்கொண்டுள்ளனர். பாமர மக்களையும் அறிவுத் தெளிவற்ற அரசர்களையும் ஏமாற்றி தங்களை புரோகிதர்களாக நியமித்துக் கொள்வதில் வெற்றிக்கொண்டுள்ளனர். இப்போது உண்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்த வேண்டியது அரசின் கடமையாகும் என அறிவுறுத்தியுள்ளார். (உண்மை,சூன் 16-30, 2006)(பெரியார் பார்வை 16.02.2007)

ஆறுமுக நாவலர்


ஆறுமுக நாவலர் - கவி

யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரிலே கார்காத்தார் இனத் தில், பாண்டி மழவர் குடியில் 18.12.1822 இல் பிறந்தார். ‘தமிழ் அறிஞர்கள் வரலாறு’ மற்றும் ‘இலக்கியங்களை’ சிறிய வயதி லேயே இவருக்கு பயிற்று வித்த னர். இவருடைய மைத்துனர் விசுவநாத மயில்வாகனர், இவ ரை கோயில்களுக்குக் கூட்டிச் சென்று அங்கு நடைபெறும் கந்த புரா ணம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளைக் கேட்டறியச் செய்தார்.
இவருக்கு ஏற்கனவே தமிழில் ஆர்வம் இருந்தமையால், இவருடைய தமையனார், இவரை ‘பீற்றல் பார்சீவல்’ என்னும் பாதிரியாருடைய ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தார். அதனால் ஆங்கில மொழியிலும் சிறப்பு தேர்ச்சிப்பெற்றவராக விளங்கினார். அக்காலத்தில் அப்பள்ளிக் கூட மாணவர்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ப்பதில் வல்லவர் என்ற பெயர்பெற்றவர்.

இதனை அறிந்த பாதிரியார் பார்சீவல் அவர்கள் பைபிளை மொழிப்பெயர்க்க தமிழ்ப்பண்டிதராக ஆறுமுக நாவலரை நியமித்தார். அக்காலத்தில் கிருத்துவ மதம் வளருதல் கண்டும், சைவமதம் வளர்ச்சிக்குன்றுதலையும் கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள், சைவ சித்தாந்த இலக்கியமாகிய ‘சிவஞான போதம்’, ‘சிவஞான சித்தியார்’, திருக்களிற்படியார் இன்னும் பல நூல்களை கற்றறிந்தார்.

சிவபெருமான்  இயற்றிய முதனூல்கள், ‘வேத சிவ ஆகமங்கள் என்றும், அவைகளுள் ‘வேதம்’ பொது நூல்’ என்றும் ‘ஆகமம்’ ‘சிறப்பு நூல்’ என்றும் தெரிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல்  வேத சிவ ஆகமத்தை உள்ளடக்கிய தமிழ்நூல்கள், ‘தேவார திருவாசகங்கள்’ என்றும் அறிந்தார். அதோடல்லாமல் சம்ற்கிருதமும் கற்றார்.

பார்சீவல் பாதிரியார் இவரைத் தமிழ்ப் பண்டிதராக அமர்த்திய போது,  தம் உடம்பில் ‘உத்தூளனம் திரிபுண்டரம்’ என்று அழைக்கப்படும் இரு வகையாலும்  விபூதி பூசிக்கொண்டுதான் வருவேன் என்று கூறினார்.
பைபிள் மொழிப் பெயர்ப்புப் பணியில் பார்சீவல் பாதிரியாருக்கு கீழ் இருந்தவர்கள் சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் என்பதாலும் சைவ ருள்ளும் இவர் ஒருவரே சரியானவர் என்பதாலும் பார்சீவல் பாதிரியார் இவரது நிபந்தனைகளுக்கு ஒப்புகொண்டார்.

பைபிளை மொழிப் பெயர்க்கும் காலத்தில் அதனையும் அதற்கு பூர்வாசாரியர்களாலே செய்யப்பட்ட உரைகளையும் நன்றாகக் கற்றுக் கொண்டார்.

அதே காலத்தில் சென்னையிலும் பைபிள் மொழி பெயர்ப்பு பணி நடைபெற்று வந்தது. எனவே யாழ்ப்பாண மொழிப் பெயர்ப்பு பணியை சென்னçயில் ஏற்றுக் கொள்வார்களா என்ற அய்யம் பார்சீவல் பாதிரியாருக்கு ஏற்பட்டது.
எனவே சென்னப்பட்டனம் சென்று தமது பைபிள் மொழிப் பெயர்ப்பு பணியை சபையாருக்கு காட்டிட  விரும்பிய போது, ஆறுமுக நாவலரையும் உடன் அழைத்துச் சென்றார். சென்னைப்பட்டன மொழிப்பெயர்ப்பும் யாழ்ப்பாண மொழிப்பெயர்ப்பும் வைக்கப்பட்டு ஒரு நடுவரையும் நியமித்து எது சிறந்த மொழி பெயர்ப்பு என்பதை ஆய்வு செய்தனர்.
இறுதியில் ஆறுமுக நாவலர் செய்த பைபிள் மொழி பெயர்ப்பு சிறந்தது என்று முடிவு செய்தனர்.

அந்த காலத்தில் பெரும்பாலான சைவ ஆலயங்கள் ஆகமத்தில் கூறியுள்ளபடி கட்டப்படாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார் ஆறுமுக நாவலர்.
19 ஆம் நூற்றாண்டில் அந்நிய மதங்கள் பரவுவதை தடுக்க, சைவ சமய மக்களிடையே சமய அறிவினை வளர்க்க பாடுபட்டார். ஈழத்தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று கூறத் தயங்குவதும், சைவ சமயத்தவர்கள் என்று கூறுவதற்கும் ஆறுமுக நாவலரின் பணிகளே காரணம்.

காமிகம்,காரணம், ரெளரவம், சர்வோக்தம், வாதுளம் முதலிய 28 சைவ ஆகமங்களும், மிருகேந்திரம் முதலிய 207 நூல்கள் துணை ஆகமங்களாகவும் உரைக்கப்பட்டன.  எனினும்  இவை குறித்த சமய அறிவு சைவ சமய மக்களிடையே இல்லை என்பதை உணர்ந்த ஆறுமுக நாவலர், இந்நிலைக்கு பார்ப்பன வகுப்பில் உள்ள ‘ஸ்மார்த்த பார்ப்பனரே’ காரணம் என உணர்ந்தார்.

எனவே சைவ தீட்சிதைப் பெறாத வைதீகப் பார்ப்பனர் கையால் விபூதி வாங்குவதை மறுத்து வந்தார். சிவதீட்சிதைப் பெறாதவரை வணங்குவதும் ‘சிரார்த்தம்’ முதலியவற்றில் அவர்களைப் பங்கெடுக்கச் செய்வதும், அவர்கள் கையாலே விபூதி வாங்குவதும் சிவ ஆகமப்படி கட்டப்பட்டக் கோவில்களில் அவர்களைக் கொண்டு பூசை செய்வதும் சிவ ஆகம விரோதம் என்பதையும் இப்படிச் செய்வோர் ஒரு பலனையும் அடைய மாட்டார் என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார். இதனால் ஆறுமுக நாவலர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

 1863 இல் தமது வித்தியாசாலையில், வேதம் பொது நூலென்றும், ஆகமம் சிறப்பு நூலென்றும் வைதீக மார்க்கத்தில் ஒழுகுவோர் புண்ணிய லோகங்களை அடைவர் என்றும் சாலோகம், சாமீபம், சாருபம் என்னும் பத முத்திரையும், சாயுச்சியமாகிய பரமுத்தியையும் அடைவார்கள் என்றும் சொற்பொழிவில் பதிலடி தந்தார்.

உடனே வைதீகப் பார்ப்பனர்கள், தாங்கள் வைதீக மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றும் சைவ மார்க்கத்தில் உள்ளவர்கள் வழிபடலாம் என்றும் ‘பரார்த்த ’பூசை செய்ய விதி இருப்பதாகவும் பொய் கூறிவந்தனர். எனினும் சபைகளிலே எழுந்து பேசவும் ஆறுமுக நாவலருக்கு உரிய விடையைத் தரவும் அவர்களால் முடியவில்லை. இதை உணர்ந்து கொண்ட ஈழ மக்கள், பார்ப்பனர்களை வழிபடுவதையும் சிரார்த்தம் (கருமாதி), விவாகம் (திருமணம்) முதலிய நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு தானம் வழங்குவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

வைதீகப் பார்ப்பனர்களைக் கொண்டு பரார்த்த  பூசை செய்து வந்த கோவில் அதிகாரிகள், அவர்களை (பார்ப்பனர்களை) நீக்கி, சிவாச்சாரி களைக் கொண்டு பூசை செய்ய வைத்தனர். பார்ப்பனர் கையால் விபூதி வாங்கும் பழக்கத்தை பெரும்பாலோர் நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் சிவ ஆகம ஆராய்ச்சியும் தேவார திருவாசகப் பாராயண ஓசையும், சிவபூசைக்கு சிறப்பினதாகக் கருதப்படும் மணியோசையும் கேட்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இதனைப் பரப்பத் தொடங்கினார் ஆறுமுக நாவலர்.

‘சைவப் பிரகாச வித்தியசாலை’ முதலாம் சொற்பொழிவில் ஆறுமுக நாவலர்,
‘சிதம்பராலய பூசகர்களுள்ளே சிலர் சைவாகமங்கள் பிரமாணமல்ல என்றும், சிவ தீட்சையினால் உயர்ச்சி இல்லை என்றும் சிவ தீட்சைப் பெற்றவர்கள் ‘பிரஷ்டர்கள்’ என்றும் சிதம்பர ஆலயக்கிரியைகள், வைதீகக் கிரியைகளே என்றும் சிதம்பர ஆலயக் கிரியைகளுக்குச் சிவ தீட்சையில்லாதவர்களே ‘அருகர்கள்’ என்றும் துர்ப்போதனை செய்து பலரையும் மயக்கிக் கொண்டு திரிந்தார்கள்.

 மார்கழி மாதம் ரதோற்சவ தினத்துக்கு முதற் தினமாகிய 27 ஆம் நாள் சோமவாரத்திரவிலே நமது வித்தியாசாலையிலே, வெகுஜன சமூகத்திலே, அவர்கள் கூற்றுக்கள் எல்லாவற்றையும் கண்டித்து, சைவ ஆகமங்கள் ‘முக்கிய பிரமாணம்’ என்றும் சிவ தீட்சையே உயர்வுடையது என்றும், ‘கர்­ணாதிப் பிரதிஷ்டாந்தம்’, ‘பிரதிஷ்டாதி யுற்சவாந்தம்’, ‘உற்சவாதிப் பிராயச் சித்தாந்தம்’ என்னும் ‘தேவாலயக் கிரியைகள்’ சிவ ஆகமத்திலன்றி, வேதத்தில் இல்லை என்றும் யாவர்க்கும் சிவ தீட்சையின்றிச் சிவ ஆகமம் படித்தல் கூடாது என்றும் சிதம்பர ஆலயக் கிரியைகளின் பொருட்டுப் பதஞ்சலி மகாமுனிவர் வேத சிவாகம முறைப்படியே பத்ததி செய்தரு ளினார் என்றும் ஆதியில் இருந்த தில்லை வாழ் அந்தணர்கள் சிவ தீட்சையும் சிவ ஆகம உணர்ச்சியும் சிவ ஆகம அநுஷ்டானமும் உடையவர்கள் என்றும் தற்காலத்தில் உள்ள பூசகர்கள் சிவ தீட்சையும் சிவ ஆகம உணர்ச்சியும் சைவ அநுஷ்டானமும் இல்லாதவர்களாய் இருந்து கொண்டு சிதம்பர ஆலயக் கிரியைகளைச் செய்தல், சிவ வாக்கும் நடேசர் திருமேனியுமாகிய சிவ ஆகமத்துக்கும் வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் தில்லை மூவாயிர முனிவர் என்பவர்களுடைய அனுஷ் டானத்துக்கும் விரோதமே என்றும் பல சாத்திரப் பிரமாணங்கள் கொண்டு விரித்து பிரசங்கித்தேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள் ‘அருட்பா’ வை எழுதத் தொடங்கினார். இதனால் அவர்  ‘திருவருட் பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்பட்டார். இவருடைய திருவருட்பா கோயில்களில் பாடப்பட்டன.  தேவாரம், திருவாசகப் பாடல்களோடு திருவருட்பாவையும் பாடி வந்தனர். சில ஆலயங்களில்  தேவார திருவாசகப்பாடல்களை நிறுத்தி, திருவருட்பாவை  மட்டுமே பாடி வந்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த ஆறுமுக நாவலர் ‘போலியருட்பா மறுப்பு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நிலையில் இராமலிங்க அடிகளும் ஆறுமுக நாவலரும் ஒரே நேரத்தில் சிதம்பரம் வர நேர்ந்தது. எப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்ட பார்ப்பனர்கள், ஏற்கனவே சைவ ஆகமத்திலும் சைவ தீட்சையாலும் ஆறுமுக நாவலர் மீது வெறுப்புக் கொண்டிருந்த சிதம்பர தீட்சிதர்கள் இச்சிக்கலை ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இதன் பொருட்டு சிதம்பரம் கோவிலில் இராமலிங்க வள்ளலாரை 1869‡ இல் அழைத்துக் கூட்டம் போட்டனர். கூட்டத்தில் இராமலிங்க அடிகள், ஆறுமுக நாவலரையும் மற்றவர்களையும் தூற்றிப் பேசி, அவ்வரலாற்றை ‘பேரம்பலப் பிரசங்கம்’ என்னும் தலைப்பில், சி.சொ. சண்முகப் பிள்ளை, சி.அ. வேலாயுத பிள்ளை மற்றும் சி.இரா. ஆறுமுகப் பிள்ளை என்னும் மூவரும் வெளிப்படுத்திய பத்திரிக்கையில் காணப்படும் என்று ‘ஆறுமுக நாவலர் சரித்திரம்’ என்னும் நூலை எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாச பிள்ளை கூறுகிறார்.

இது குறித்து மஞ்சக்குப்பம் (கடலூர்) வழக்கு மன்றத்தில் 1869‡இல் நடைபெற்ற வழக்கில் இராமலிங்க அடிகள் மன்னிப்பு கேட்டார் என்று கூறப்படுகிறது. இது ஒரு ‘அவதூறு வழக்கு’ என்பதாகக் காணப்பட்டது. இறுதியில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் சிதம்பர தீட்சிதர்கள் ஆறுமுக நாவலரை விடவில்லை. அவர்மீது மற்றொரு வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் யாழ்ப்பாணம் செளந்திர நாயகம் பிள்ளை என்னும் வழக்கறிஞர் ஆறுமுக நாவலருக்காக சிறப்பாக வாதாடினார். இவ்வழக்கின் போது,  எதிரி கேட்ட ஒரு கேள்விக்கு கண்ணீர் மல்க ஆறுமுக நாவலர் அளித்த விடையும் நீதிமன்றத்தில் இவர் நின்ற நிலையும் வழக்கில் வெற்றி பெற உதவிற்று.

ஆறுமுக நாவலர்,  நூற்களை அச்சிடுவதற்காக 1849- இல் அச்சு இயந்திரம் ஒன்றை சென்னையிலிருந்து வாங்கி வந்தார். இவ்வச்சு இயந்திரம் மூலம் நூற்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தார்.

நாவலர் முதன் முதலாகப் பதிப்பித்த நூல் ‘சூடாமணி நிகண்டு’ ஆகும். ‘பெரியபுராண’ வசனத்தையும் ‘நன்னூல் விருத்தியுரை’யையும் வெளியிட்டார்.

இவருடைய கல்வித் திறமையையும் புத்தகங்கள் அச்சிடும் திறமையையும் அறிந்த இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர், திருக்குறள் பரிமேலகர் உரை, திருச்சிற்றம்பலக் கோவையுரை, தருக்க சங்கிரகவுரை, சேதுபுராணம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அச்சிட இவரை அணுகினார்.

சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் இவரின் உதவியுடன் ‘தொல்காப்பியம் சேனாவரய’த்தை அச்சிட்டு வெளியிட்டார்.

திருவாடுதுறை ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் அவர்கள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும் சில ஓதுவார்களையும் கும்பகோணம் வந்திருந்த ஆறுமுக நாவலர் அவர்களிடம் அனுப்பி, மடத்தில் சில நாட்கள் தங்க வைத்து, இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலிய இலக்கண நூற்களை இவரது ஆய்வுக்குப் பின் அச்சிட்டனர்.

இவ்வாறு ஆறுமுக நாவலர் அவர்கள் பதிப்புத் துறையில் சிறந்து, முதல் தலைமகனாக விளங்கினார்.

இவரது வரலாற்றை, அவரின் அய்ந்தாம் தமையனார் ஆராய்ச்சி தம்புவின் புதல்வர் த. கைலாச பிள்ளை, ‘ஆறுமுக நாவலர் சரித்திரம்’ என்ற பெயரில் எழுதினார்.

நாவலர் அவர்களின் சமயப் பிரச்சாரத்தினை, நிறுவனமாக்கும் முயற்சியில் கைலாசப்பிள்ளை பெரும்பங்கு வகித்தார். சைவ அபிமானிகள் சங்கம், சைவ சித்தாந்த சபை, சைவ கலா விருத்திச் சங்கம், கிருத்துவ கண்டன சபை முதலியவை அமைப்பதில் கைலாச பிள்ளை பெரும்பங்கு வகித்தார்.

நாவலர் அவர்களின் துண்டு பிரசுரங்களையும் பாடல்களையும் தொகுத்து ‘ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு’  என்று வெளியிட்டார் கைலாசபிள்ளை.

ஆறுமுக நாவலர் அவர்கள் கடைசியாக சொற்பொழிவு செய்தது யாழ்ப்பாணச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1879 இல். அதில்,  ‘நான் உங்களிடத்துக் கைமாறு பெறுதலை சிறிதும் எண்ணாது முப்பத்திரண்டு வரு­ காலம் உங்களுக்கு சைவ சமயத்து உண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் என்று பாதிரிமார்கள் கூறுகிறார்கள். ஆதலால் நான் உயிரோடிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப்பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். ஆனால் உங்களுடைய வைவுகளைக் கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போல ஒருவரும் வரார். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம்’  என்று கூறியுள்ளார். (பெரியார் பார்வை 16.2.2007)
காக்கப்பட வேண்டியதா காஞ்சி மடம்?
பக்தி  என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும நட்டம் இல்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்கும் பக்திற்கும்தான் இப்பொழுது போராட்டம். மனித நேயத்திற்கும் மதவெறிக்கும் போராட்டம்.
காஞ்சி சங்கர மடத்தைக்  காப்பாற்றுங்கள் என கல்கி, போன்ற  பார்ப்பன ஏடுகள், பார்ப்பனீயத்தின் பதாகையை எப்பொழுதும் பறக்க விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று கருதக் கூடிய ஏடுகள் இருக்கின்றன.
சங்கராச்சாரியார் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் இந்த மடத்தையவது காப்பாற்றுங்கள் என்று எழுதி அதற்காக அங்கலாக்கிறார்கள்.
காஞ்சி மடம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கட்ட மடம் அல்ல. அது அவரால் நிறுவப்பட்ட மடம் அல்ல.  நான்கு திசைகளில் நிறுவப் மடங்கள் ‡ நான்கு. வேதங்கள் நான்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்டஆம் நாய மடங்கள். அவாள் மொழியிலே சொல்ல வேண்டுமானால், ஆம் நாயம் என்று சொன்னால் வேதம் என்று அதற்குப் பொருள்.
பாலக்காட்டில் மாட்டுக் கொட்டடி சந்தில்தான் தீட்டு இருக்காது என்பதற்காக காந்தியார், சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியாரை சந்திக்கின்றனர். காந்தியாருக்கு இந்தி தெரியும். பெரிய சங்கராச்சாரியாருக்கும் இந்தி தெரியும். ஆனால் இந்தியில் சங்கராச்சாரியார் பேசவில்லை.
சமஸ்கிருதத்தில்தான் நான் பேசுவேன் என்று சங்கராச்சாரி சொல்லுகின்றார். காந்தியாருக்கு சமஸ்கிருதம் தெரியாது. அவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துதான் அவர்களுடைய உரையாடல் நடைபெற்றது. இந்த சேதி எதிலேயிருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். ஆயிரம் பக்கங்களுக்கு மேற்கொண்ட நூல் தமிழ்நாட்டடில் காந்தி என்ற நூலிலே இந்த சேதி அப்பட்டமாக இருக்கின்றது.
இப்பொழுது பார்ப்பனர்கள் என்ன நினைக்கின்றார்கள், ஜெயேந்திரர் தப்பு பண்ணிவிட்டார். இவரைக் காப்பாற்றுவது இனிமேல் கடினம். அதனால் இளைய சங்கராச்சாரியரை உயர்த்திக் காட்டலாம் என்று ஒரு நீக்க போக்கு தந்திரத்தோடு செயல்படுகிறார்கள்.
சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் கம்யூனல் ஜி.ஓ.வே. கூடாது என்று சொன்னார்.
கம்யூனல் ஜி.ஓ.வினால் நமது பிராமண பசங்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா? அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று சங்கராச்சாரியார் கேட்கின்றார்.
அடுத்து அவர் சொன்ன ஒரு கொடுமையான சேதி, நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்பது வேதம். ஏன் நாஸ்திகர்களுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்பதற்கு விளக்கம் சொல்லுகின்றார் அவர். இதனுடைய உள் அர்த்தம் என்ன? இது என்ன கருணையே இல்லாமல் இப்படி சொல்லப்பட்டிருக்கின்றதே என்று சொல்லலாம். ஆனால், இப்படி சொன்னதே அவருடைய கருணையால்தான். வியாதியினால் தான் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும்பொழுது தான் எப்படியாவது இதிலிருந்து மீள வேண்டும் என்ற தவிப்பில் கடவுள் என்று நிஜமானால், வேத சாஸ்திரம் நிஜமானால் அது காப்பாற்றும் . அப்புறம் நான் சாஸ்திரப்படி பண்ணுகிறேன் என்று ஒரு நாஸ்திகன் நினைக்க முடிகிறது. வைத்தியன் சிகிச்சை பண்ணமாட்டான் என்று நினைத்துவிட்டால் அப்பொழுது நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத் தான் செய்வான் என்று சொல்லுகின்றார்.
அதே மாதிரி சமபந்தி கூடாது என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே இந்தத் தத்துவங்கள் எல்லாம் எதைச்சார்ந்தது என்றால் இந்து மதத்தைச் சார்ந்தது. வர்ணாசிரம தர்மத்தைச் சார்ந்தது.எனவே தத்துவங்கள் வளரக் கூடிய அமைப்பு வளர வேண்டும் என்று சொன்னால் அது பாதுகாக்கப்பட வேண்மென்றால், தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாருக்கு நாம் துணை போகிறோம் என்பதை அருள் கூர்ந்து எல்லோருமே சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
இந்த நாட்டிலே சங்கர மடம் இருந்தால், என்ன பணியை செய்யப் போகிறது? இராகுகாலம் போன்ற மூடநம்பிக்கைகளைத்தானே வளர்க்கப் போகிறது. ஏதோ மேலெழுந்த வாரியாக, யாரையோ தாக்குவதற்காக நாங்கள் பேசவில்லை. உண்மைகள் களப்பலியாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இவைகளை நாங்கள் எடுத்துச் சொல்லுகின்றோம்.
மறைந்த பெரிய சங்கராச்சாரியாரே ரொம்ப லாவகமாக செய்தார். அதற்கு பெரிதம் துணையாக இருந்தவர் இன்றைக்கு இருப்பவர், அதைத் தொடர்ந்து கொண்டிருப்பவர். அவரை விட சில புதிய தொழில் நுணுக்கங்களை ரொம்ப அதிகமாகப் புகுத்தியவர் இந்த ஜெயேநதிர சங்கராச்சாரியாவார்.
காஞ்சி மடம் சங்கர மடம் என்று சொன்னால், சங்கராச்சாரியாராலே நிறுவப்பட்ட மடம் என்றால் நிச்சயமாக காஞ்சிமடம் சங்கரமடமாக ஆக முடியாது. வாரணாசியைச் சார்ந்த இராஜகோபால சர்மா காஞ்சி மடம் ஒரு கட்டுக் கதை என்றே ஆங்கிலத்தில் எழுதி தமிழிலே அதை மொழி பெயர்த்திருக்கின்றார்கள்.
சங்கராச்சாரியார் மடத்தைப் பற்றி நாத்திகர்களுக்கென்ன கவலை என்று கல்கி இதழிலே கேட்கின்றார்கள்.
நாத்திகர்களுக்கு மடத்தைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் உண்மையைப் பற்றி கவலை இருக்கின்றது. மக்கள் உண்மையை புரிந்த கொள்ள வேண்டும் என்ற கவலை எங்களுக்கில்லாத கவலை வேறு யாருக்கு இருக்க முடியும்?
வீஜுe நிeeவ 28.11.2004இதழில் வந்த சேதியைப் படிக்கின்றேன்,
நுrஷ்ஆஷ்ஐழியி ளீலிஐமிrலிஸerவிதீஎன்பது தலைப்பு. இதற்குள் உள்ள சேதியைப் படிக்கின்றேன்.ஸூபுdஷ் றீழிஐவழிrழி (788-820 பும் ழிஸ்ரீஸ்ரீrலிமு)  ஷ்வி ணுeயிஷ்eஸed மிலி ஜுழிஸe eவிமிழிணுயிஷ்விஜுed க்ஷூலிற்r Peeமிஜுழிவி (விeழிமிவி) - யழிdrஷ் ஷ்ஐ மிஜுe ஹிலிrமிஜு, Pற்rஷ் ஷ்ஐ மிஜுe சிழிவிமி, ம்ழழிrழிவழி ஷ்ஐ மிஜுe ழeவிமி ழிஐd றீrஷ்ஐஆerஷ் ஷ்ஐ மிஜுe றீலிற்rமிஜு ழிஐd ழிமிமிழிஷ்ஐed ஜுஷ்வி விழிதுழிdஜுஷ் ஷ்ஐ லுழிவிஜுதுஷ்r. சிழிஉஜு விeழிமி ஜுழிவி ழி விழிஐவழிrழிஉஜுழிrதீழி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதி சங்கரர் காஷ்மீரில் தான் மறைந்தார். ஒவ்வெரு மடத்திற்கும் ஒவ்வொரு சங்கராச்சாரியார் இருக்கின்றார் . வடக்கே பத்ரிநாத் மடம், கிழக்கே பூரி மடம்,மேற்கே துவாரக மடம், தெற்கே சிருங்கேரி இருக்கின்றது.
வீஜுe றீrஷ்ஐஆerஷ் துற்மிமி விeமி ற்ஸ்ரீ மிஜுe ணுrழிஐஉஜு ஷ்ஐ லுற்துணுழிவலிஐழிது ஷ்ஐ 1821 க்ஷூலிr ழஜுஷ்உஜு மிஜுe னிழிrழிமிஜுழி rழிளூழி லிக்ஷூ வீழிஐளூலிre eமுமிeஐded ஸ்ரீழிமிrலிஐழிஆe.
1821 இலே சிருங்கேரி மடம் கும்பகோணத்திலே ஒரு கிளை மடத்தை நிறுவியத. அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய அரசர் அதற்கு ஆதரவு காட்டினார்.
இப்பொழுதும் சிலருக்கு ஒரு மயக்கம் இருக்கின்றது. என்னவென்றால் இந்த சங்கராச்சாரியார் தான் மோசம். மறைந்த பெரிய சங்கராச்சாரியார் ரொம்ப நல்லவர். மனிதர்களுக்கு சாதகமாக இருந்தவர் என்று. அது உண்மையல்ல.
தத்தவம் சொள்கை என்று வருகின்றபொழுது, மனித நேயத்திற்கு முற்றிலும் முரணாக நடந்த கொண்டவர் பெரிய சங்கராச்சாரியார்தான். நான் சொன்னதிலே ஒரு வரி கூட யாரும் மறுத்துச் சொல்ல முடியாது. ஆதாரங்களோடு உங்களுக்கு சொல்லுகின்றேன்.
மறைந்த பெரிய சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திரருடைய தெய்வத்தின் குரல் என்ற நூல் ஏழு காகமாக வந்திருக்கின்றது.
நாட்டில் எது சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது மனு தர்மம் தான் சட்டமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.
எந்த ஆட்சி வந்தாலும் மனதர்மப்படிதான்ஆட்சி நடக்க வேண்டும். ஏனென்றால், சங்கர மடம் என்று சொன்னால், இதை செய்வதற்காக இருக்கின்ற மடம் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. அவர்கள் தங்களுடைய பணியைச் செய்கிறார்கள் என்று சொன்னால் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. அரசியல் சட்டத்தில் அடிப்படை மாற்றம் கூடாது என்று இன்றைக்கும் எப்படி வாதம்செய்யப்படுகிறதோ அதே மாதிரி மனுதர்மத்தையும் விடக் கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.
ஜெயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்குக் கனகாபிஷேகம் என்று சொல்லி வெளி நாட்டிலிருந்து தங்கம் வரவழைக்கப்பட்டது. இது பற்றி அன்று இந்த ஏடே எழுதியது. இலண்டனிலிருந்து வந்திருக்கிறது. 85 கிலோவுக்கு மேல் தங்கம்‡ பெட்டிகளில்.
சுங்கத்துறை அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறத என்று கூடத் திறந்து பார்க்கவில்லை. கேட்டால் மத்திய நிதி அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளதாம். அந்தத் தங்கத்தை காஞ்சிபுரத்துக்கு எடுத்துச் சென்ற போது அய்.ஜி.க்கள் பாதுகாப்புக்காகச் சென்றார்கள் என்றால் காஞ்சிமடத்துக்கு மேல் மட்டத்தில் எப்படியயல்லாம் ஆள் இருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
85 கிலோவுக்கு மேல் தங்கம் என்றால் அதற்கு ஏதாவது எல்லை இருக்கிறதா? வெளியிலே ஆன்மீக வேடம் போட்டாலும் உண்மையிலேயே அடிப்படையில் அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்.
நெருக்கடி காலத்தில் தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். அந்தத் தலைமறைவு இயக்கத்திற்குக் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி எந்தெந்த வகைகளில் எல்லாம் உதவி புரிந்தார் என்பதை, ஆர்.எஸ்.எஸின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர்வாளின் நூலான நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் என்ற நூலிலிருந்தே எடுத்துக காட்டி, காவி உடைக்குள் பதுங்கி இருக்கும்ஆர்.எஸ்.எஸ் என்கிற படம் எடுக்கும் பாம்பைப் படம் பிடித்துக காட்டியுள்ளார்.
காஞ்சி மடம் என்பது ஓர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனம். அதனை ஊட்டி வளர்க்கும் ஒரு பீடம் தான் காஞ்சி மடம். இன்னும் புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் சென்னை‡சேத்துப்பட்டில் கட்டப்பட்ட ஒரு கோடி ரூபா மதிப்புடைய ஆர்.எஸ்.எஸ் கட்டடத்தைத் திறந்த வைத்தவரே சாட்சாத் இந்த ஜெயேந்திரர்தான்.
நடந்து முடிந்த 13 வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் அலுவலகத்தை சென்னையில் திறந்து வைத்த திருமேனியும் இவரேதான். காஷாயத்துககுள் கவாத்து எடுக்கும் அந்த உணர்வுக்குப் பெயர் ஆர்.எஸ்.எஸ். எனவே தான் இந்த பீடத்தை காக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
சங்கர மட பீடத்தைக் காக்க ஜெயேந்திரரைக் கூட காவு கொடுக்க அவர்கள் தயார். கல்கியும், துக்ளக்கும் அந்தப் பீடத்தைக் காக்க வேண்டும் என்று கண்ணீர் அபிஷேகங்களைச் செய்து கொண்டு இருக்கின்றன. அந்தப் பீடத்தின் உண்மை உள்ளம் என்ன?
மனுதர்மம் தான் அரசமைப்புச் சட்டம் ஆக வேண்டும். இது மகா பெரியவாள் என்று அவர்கள் வட்டாரத்தில் தூக்கி நிறுத்தப்படும் சந்திரசேகரேநதிர சரஸ்வதியின் அருள்வாக்கு இது. தீண்டாமை சேமகரமானது என்பது தான் அநத பீடத்தின் கொள்கை. விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு ஒபபானவர்கள. பெண்கள் பற்றிய அவர்களின் கொள்கை அது தான்!
காஞ்சி சங்கர மடம் என்பது ‡ மனித நேயம், மனித உரிமை, மனித சமத்துவம் இவைகளுக்கு நேர் எதிரானது ‡ வருண தர்மம் காப்பது தான் அவர்களின் வாழ்நாள் நோக்கம். இந்த பீடம் காக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அது அழிக்கப்பட வேண்டும் என்பதுதானே நமது நோக்கமாக இருக்க முடியும்!
இது ஒரு நல்ல சந்தர்ப்பம். பழம் நழுவிப் பாலில் விழுந்திருக்கிறது. நழுவ விடலாமா என்பதை நல்ல உள்ளங்கள் சிந்திக்கட்டும்.
சங்கர மட பீடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது. மனித நேயத்துககுப் பகையானது. சமத்துவத்திற்கு மாறானது. பார்ப்பனர்களுக்காகவே மட்டும் உயிர் வாழ்வது என்கிற எண்ணம் மட்டும் கலையாது என்பது உறுதி. உறுதியிலும் உறுதி. (உண்மை, டிசம்பர் 1 ‡15, 2004)